“உலகில் வாழும் மனிதர்கள் செம்மாந்த வாழ்வை வாழ வேண்டுமெனில், அவர்கள் திருக்குறள் என்ற ஒற்றை நூலைப் படித்தால் போதுமானது. இதுபோன்ற இலக்கியத்தை வேறெந்த மொழியிலும் காண இயலாது.”
- திரு. மு.பெ. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர்
“செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ.) பொறுத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கேற்ப அதன் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழ் மொழியில் ‘ஏ.ஐ.’ உருவாக்குவதன் மூலம் தமிழர்களுக்கு அது பெரிதளவில் உதவியாக இருக்கும். அதேசமயம், தமிழ்நாட்டில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், அதை உருவாக்க வேண்டும்.”
திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
“மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய ஒவ்வொரு நிமிடமும் கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்புகள் மாணவர்களைத் தேடி வரும். மாணவர்கள் அதிகப் புத்தகங்களைப் படிப்பதுடன், ஒழுக்கமுடன் தற்சார்புடையவர்களாக வாழ வேண்டும். பணம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை இழந்தால்கூட திரும்பப் பெறலாம். ஆனால், நேரத்தை வீணடித்துவிட்டால் அதைத் திரும்பப்பெற முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
- திரு. வெ. இறையன்பு, தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர்