Namvazhvu
ஜோர்டான்: இரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு காரித்தாஸ் உணவு
Monday, 24 Jun 2019 11:40 am

Namvazhvu

‘தாராள மனதுள்ள ஜோர்டனில் இரமலான் வித்தியாசமாகச் சிறப்பிக்கப்படுகின்றது’ என்ற தலைப்பில், ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இவ்வாண்டு இரமலான் மாத  நடவடிக்கைகளை ஆற்றி வருகின்றது.
ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு நடத்திவரும் ‘இரக்கத்தின் உணவகம்’ வழியாக, தெருவில் செல்லும் எல்லாருக்கும் இலவசமாக, மதிய உணவை வழங்கி வருகிறது. இதற்குப் பதிலாக, இந்த இரமலான் மாதத்தில், ஒவ்வொரு நாளும், முஸ்லிம்களுக்கு, பத்தாயிரம் சூடான உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது.
இவ்வாண்டு இரமலான் நோன்பு மாதம், மே 5, கடந்த சனிக்கிழமை மாலையில் தொடங்கியுள்ளது.