“அமைதி, மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலிருந்து மட்டுமல்ல, காயங்களைக் குணமாக்குவதும், ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட மரியாதையை அங்கீகரிப்பதும் ஆகும்.”
- ஆகஸ்டு 8, 2025-ஆம் ஆண்டுக்கான உலக அமைதி தினச் செய்தி.
“சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்கள், காணிக்கையளிப்பவர்கள், ஓய்வுநாளையும் செப நேரத்தையும் சரியாகக் கடைப்பிடிக்கும் யூதர்கள், அவர்களின் முன்தீர்மானத்தால் இயேசுதான் மெசியா என்பதை அறிந்துகொள்ளவில்லை.”
- ஆகஸ்டு 11, ஞாயிறு மூவேளைச் செப உரை செய்தி.
“உரையாடல், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பது கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் வரையறுக்கும் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.”
- ஆகஸ்டு 12, கல்லூரியின் அதிபர் ஏலேனா பெக்காலி சந்திப்புச் செய்தி.
“கடவுளின் குரலுக்கும் பிறருக்கும் நமக்கும் நாம் செவிசாய்ப்பதும், செபம், தியானம், பொறுமையுடன் காத்திருத்தல், துணிவு, தியாகம், ஆகியவை கடினமாகத் தோன்றினாலும், இவற்றின் வழியாக இறைவன் நமது இதயத்தின் விருப்பங்களை அறிகின்றார்.”
- ஆகஸ்டு 12, துறவிகளின் பொதுப்பேரவை உறுப்பினர்களின் சந்திப்புச் செய்தி.
“பூர்வீகக்குடியினரின் ஞானம் என்பது, நல்வாழ்வின் ஞானம். நன்முறையில் வாழ்வது என்பது எளிதானதல்ல, அது இயற்கையோடு இணக்கத்தில் வாழும் முறை.”
- ஆகஸ்டு 9, ‘உலகப் பூர்வீகக் குடியினர் தினம்’‘எக்ஸ்’ தளப் பதிவுச் செய்தி.