1964 -ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று காங்கோ நாட்டில் கொல்லப்பட்ட காங்கோ அருள்பணியாளர் ஆல்பர்ட் ஜோபர்ட், இத்தாலிய சவேரியன் மறைப்பணியாளர்களான லூய்ஜி கராரா, ஜியோவான்னி திதோனே, வித்தோரியோ ஃபாச்சின் ஆகியோர் அருளாளர்களாக உயர்த்தப்பட்டார்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றி எடுத்துரைக்கும்போது, “அருளாளர்களின் சான்றுள்ள வாழ்க்கையானது கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. காங்கோ சனநாயகக் குடியரசின் உவிராவில், இந்த நால்வரின் மறைச்சாட்சி வாழ்வானது வாழ்வின் மணிமகுடமாகத் திகழ்கின்றது. புதிய அருளாளர்களின் முன்மாதிரிகையான வாழ்க்கையும் பரிந்துரையும், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதைகளை வளர்க்கட்டும்” என்றார்.