“போர் மற்றும் மோதல்களால் சிதைந்துள்ள இடங்களில், அமைதிக்காக, துன்புறும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.”
- ஆகஸ்டு 21, புதன்கிழமை மூவேளைச் செப உரை
“திருநற்கருணையில் இருக்கும் இயேசுவை ஒருமுறை சந்தித்து, நம் கைகளால் உணர்ந்து, அவரைப் பெற்றுக்கொண்டால் அவரை நம்முடனே வைத்துக்கொள்ள நம்மால் முடியாது.”
- ஆகஸ்டு 24, மடகாஸ்கர் தேசிய நற்கருணை மாநாட்டை முன்னிட்டு அனுப்பியுள்ள செய்தி
“இயேசுவைப் பின்பற்றுவது என்பது எளிதல்ல. ஏனெனில், அவரது தெரிவுகள் பெரும்பாலும் பொதுவான மனநிலை, மதம், சமயம், நிறுவனம் அதன் பாரம்பரியம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது.”
- ஆகஸ்டு 25, ஞாயிற்றுக்கிழமை மூவேளைச் செப உரை
“லெபனோன் மக்கள் தனியாக இல்லை; அவர்கள் தனிமையை உணர அனுமதிக்க மாட்டோம். செபம் மற்றும் உறுதியான பிறரன்புப் பணிகள் வழியாக ஒற்றுமையாக என்றும் இருப்போம். போர் எப்போதும் தோல்விதான், அது அரசியல் தோல்வி, மனிதகுலத்தின் தோல்வி.”
- ஆகஸ்டு 26, பெய்ரூட் துறைமுக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சந்திப்புச் செய்தி
“திருவழிபாட்டில் மௌனம் என்பது நம்பிக்கையாளர்கள் கடவுளுக்குச் செவிகொடுக்கவும், தியானிக்கும் இதயத்தை வளர்க்கவும், தூய ஆவியானவரால் தங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கவும் உள்ள ஓர் அர்த்தமுள்ள இடம்.”
- ஆகஸ்டு 26, 74-வது தேசிய திருவழிபாட்டு வாரத்தின் செய்தி