Namvazhvu
சமூகக் குரல்கள்
Wednesday, 04 Sep 2024 06:06 am
Namvazhvu

Namvazhvu

கேரளத்தில் கடந்த 2018, 2019-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களும், அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளும் நமது வழிகளில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளன. நமது வழிகளை மாற்றிக்கொண்டு, தவறுகளைச் சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அது மிகவும் தாமதமான நடவடிக்கையாக அமைந்துவிடும். வயநாடு பகுதியில் 400-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான நிலச்சரிவு என்பது, மனிதர்களின் பேராசை மற்றும் அக்கறையின்மைக்கு இயற்கையின் எதிர்வினை நிகழ்வுகளில் ஒன்றாகும்.”

- கேரள உயர் நீதிமன்றம்

பொதுப்பிரிவு என்பது அனைத்துப் பிரிவினருக்கும் உட்பட்டதுதான். SC, ST, OBC பிரிவினர் பொதுப்பிரிவு மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வதைத் தடுக்க முடியாது. மெரிட் அடிப்படையில் அவர்கள் தகுதி பெற்றவர்களா? இல்லையா? என்பதைத்தான் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்!”

- உச்ச நீதிமன்றம்

அதானி பங்குகள் செயற்கையாக உயர்கிறது. ஊழலுக்குத் துணை போனவரிடம்செபி’ (SEBI - Securities and Exchange Board of India) தலைவர் பதவியை வழங்கியுள்ளார் மோடி. சமூக நீதியின்மீது நம்பிக்கையில்லாத மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் உருவாக்கிய தேசம் அதானியிடம் சென்று கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை போடும் பொய் வழக்குகள் ஆட்சி மாற்றத்திற்குப் பின் அவர்களின் மீதும் பாயும். பா... ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்.”

- திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.