பங்களாதேஷ் நாட்டின் வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சமீபத்திய மாணவர் போராட்டங்களின்போது கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 200 பேருக்காக ஜூலை 28 அன்று கிறிஸ்தவர்கள் செபவழிபாடு செய்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற இந்தச் செபவழிபாட்டைப் பங்களாதேஷ் கிறிஸ்தவச் சங்கம் மற்றும் மத விவகார அமைச்சகத்துடன் இணைந்த கிறிஸ்தவ மத நல அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. புதிய வேலை ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதில் பலரும் இறந்து போனார்கள். நமது வளங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நாம் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். இதுதான் இயேசுவின் போதனை. எனவே, இட ஒதுக்கீடு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருக்க வேண்டுமென்று செபவழிபாட்டில் முன்மொழிந்தார்கள்.