தனது 45-வது திருத்தூதுப் பயணமாக, செப்டம்பர் 12 அன்று சிங்கப்பூர் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், ‘சிங்கப்பூர் கீழ்நிலையிலிருந்து வளர்ச்சியின் மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது, இது தற்செயல் அல்ல; உண்மையில் நன்கு சிந்திக்கக்கூடிய தலைவர்கள், இணக்கமான திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக இது அமைந்துள்ளது. பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு நாடு இது. ஒருவருக்கொருவர் மீதான மரியாதை, ஒத்துழைப்பு, உரையாடல், சட் டத்தின் எல்லைக்குள் ஒருவரின் நம்பிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவை சிங்கப்பூரின் வெற்றி மற்றும் நிலைத்தன்மைக்குக் காரணம். பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வழியாக, மனிதகுலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு, சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது’ என்று கூறினார்.