Namvazhvu
நம் வாழ்வு பிறந்த வரலாறு -04 நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் (1975-2025)
Friday, 18 Oct 2024 13:38 pm
Namvazhvu

Namvazhvu

கிறிஸ்துவின் தமிழ் எழுத்தாளர் ஒன்றிப்புவேளாங்கண்ணியில் மூன்று நாள்கள் கிறிஸ்தவ எழுத்தாளர் மாநாடு நடத்தியபொழுது, இறுதி நாளன்று பொது வார இதழ் ஒன்று கிறிஸ்தவர்களுக்கென்று நமது ஆயர்கள் தொடங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றினோம். இதனை ஆயர்களுக்கு அனுப்பி வைத்தோம். அப்போது மதுரைக்கு வந்த கோட்டாறு ஆயர் டாக்டர். மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்கள் ஒன்றிப்பின் நெறியாளர்கத்தோலிக்கு சேவைஆசிரியர் மரியருள் தம்புராஜ் சுவாமியிடமும், துணைப் பொதுச்செயலரான என்னிடமும் விரிவாகப் பேசினார். “பொது வார இதழ் தேவை பற்றி பொதுச்செயலரான கவிஞர் எஸ்.பி. அமலனும், துணைப் பொதுச் செயலரான நீங்களும் திருச்சியில் நடைபெறவுள்ள ஆயர் பேரவையில் வந்து எடுத்துக் கூறுங்கள்என்றார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் செயலராக இருந்தவர் அன்றைய கோட்டாறு ஆயரான டாக்டர் . ஆரோக்கியசாமி அவர்கள். தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவராக இருந்தவர் மதுரைப் பேராயர் டாக்டர் ஜஸ்டின் திரவியம் அவர்கள்.

அதன்படி ஆயர் பேரவைக் கூட்டத்தில் பொது வார இதழ் பற்றி கவிஞர் எஸ்.பி. அமலனும் நானும் பேசினோம். அதனைக் கேட்ட ஆயர்கள் இதற்கென ஒரு பொது வார இதழ் ஆய்வுக் குழுவை நியமிக்கலாம் என்று குழுவை நியமித்தார்கள். இதன் தலைவராகப் பேராயர் டாக்டர் ஜஸ்டின் திரவியமும், செயலராக ஆயர் டாக்டர் . ஆரோக்கியசாமியும், ஒருங்கிணைப்பாளராக ஒன்றிப்பின் நெறியாளர் மரியருள் தம்புராசும் நியமிக்கப்பட்டனர். குழு உறுப்பினர்களாகப் பேராசிரியர் சு. குழந்தைநாதன் (சுகுநா), திருச்சி லெயோ ஜோசப், கவிஞர் எஸ்.பி. அமலன், இளங்கவின், திரு இருதயத் தூதன் ஆசிரியர் சவரிமுத்து சே.., கோவை ஆயர் சி.. விசுவாசம், தூத்துக்குடி ஆயர் அம்புரோஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு கூடி, பொது வார இதழ் பற்றி கலந்து பேசி முடிவெடுக்க ஆயர் பேரவை கேட்டுக்கொண்டது.

பொது வார இதழ் ஆய்வுக் குழுவின் கூட்டம் முதலில் மதுரைப் பேராயர் இல்லத்தில் நடந்தது. கோவை ஆயர் சி.. விசுவாசம், நூறு கேள்விகளுடன் கூட்டத்தில் பங்கேற்றார். ஒவ்வொன்றிற்கும் உறுப்பினர்கள் பதில் கூறினோம். பொது வார இதழ் தொடங்கும்போது மறைமாவட்ட இதழ்கள், சபை இதழ்களை நிறுத்திட வேண்டுமென்று மற்ற உறுப்பினர்கள் தெரிவித்ததை கோவை ஆயர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, முற்பகல் கூட்டம் அத்துடன் முடிந்தது. உணவறையில் சுகுநா, எஸ்.பி. அமலன், லெயோ ஜோசப் மற்றும் நானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கோட்டாறு ஆயர் எங்களுடன் வந்து அமர்ந்து எப்படியாவது பொது வார இதழ் வேண்டுமென முடிவெடுக்க வேண்டுமென்று எங்களிடம் வலியுறுத்தினார்.

அதன்படி மதியக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. சுகுநா அவர்கள் மதுரையில் குருவானவராக இருந்து, கரிமேட்டில் தொழிலாளர் பத்திரிகை ஒன்று நடத்திக் கொண்டிருந்தார். அவரும், ஆயர் சி.. விசுவாசம் அவர்களும் நல்ல நண்பர்கள். எனவே, ஆயருடன் சுகுநா கடுமையாக வாதிட்டபின், மறைமாநில இதழ்களை நிறுத்துவதில்லை என்று முடிவானது. கூட்டத்திற்கு முன்பாக நான், பொது வார இதழ் திட்டத்திற்குத் தயாரித்து அளித்த அறிக்கையை மரியருள் தம்புராசு சுவாமி வாசித்தார். அதில் இரு குருக்கள் பொது வார இதழ்ப் பணியை மறைமாவட்டத்தில் பார்க்க வேண்டும். ஒருவர் இதழுக்கான செய்தி, விளம்பரம் சேகரித்து அனுப்புவது, மற்றொருவர் சந்தாக்கள் சேர்ப்பது என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதனைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று குழுத்தலைவர் பேராயர் ஜஸ்டின் திரவியம் கூறியதை அனைவரும் ஏற்றபின் முதல் கூட்டம் முடிந்தது.

அடுத்து நாகர்கோவிலிலும், திருச்சியிலுமாக மூன்று கூட்டங்கள் நடந்துகத்தோலிக்கு சேவை ஆசிரியர் மரியருள் தம்புராஜ் அவர்களை ஆசிரியராக நியமிப்பது என்றும், கத்தோலிக்கு சேவையை நிறுத்திவிட்டு அவர்நம் வாழ்வைசென்னை சென்று நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

பதிவுக்கு அனுப்பப்பட்ட இதழின் மூன்று பெயர்களில்நம் வாழ்வுஎன்பதும் ஒன்று. இதுவே பொது வார இதழாக ஏற்று பதிவு செய்யப்பட்டது இறைவனின் திட்டமாகும்.

கத்தோலிக்கு சேவைமாத இதழ் நிறுத்தப்பட்டு, அதன் ஆசிரியர் மரியருள் தம்புராஜ் சென்னை பிராட்வேயில் உள்ள கத்தோலிக்க நடு நிலையத்தில் இருந்து நம் வாழ்வைத் தொடங்கினார். இதன் முதல் வெளியீட்டாளராக மறைந்த திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா அவர்கள் பொறுப்பேற்றார். சாந்தோமில் நடந்தநம் வாழ்வுதொடக்க விழாவிற்கு கர்தினால் லூர்துசாமி அவர்கள் வந்துநம் வாழ்வுஇதழைத் தொடங்கி வைத்ததுடன், இதற்கென சாந்தோம் செயின்ட் மேரிஸ் சாலையில் ஒரு கட்டடத்தையும் வாங்கித் தந்தார்.

நம் வாழ்வைஅச்சமயத்தில் கோட்டாறு ஆயர் டாக்டர் . ஆரோக்கியசாமி அவர்களே நடத்தி வந்தார். அதற்கென்று நிதியும் செலவழித்து வந்தார். சுவாமி மரியருள் தம்புராஜ் அவர்கள் ICPA, UCPAவில் இணைந்து வெளிநாட்டில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டபோது, அவர் திருப்பயண மாதா சபையைத் தமிழகத்தில் தொடங்கிட ஆர்வமுடன் செயல்பட்டார். எனவே, ஐந்தாண்டுகள் பணிபுரிந்த அவரை மாற்றி, வேறு ஆசிரியரை ஆயர் ஆரோக்கியசாமி நியமித்துநம் வாழ்வைநடத்தினார். சுவாமி மரியருள் தம்புராஜ் மதுரைக்கு வந்து மீண்டும்கத்தோலிக்கு சேவையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

நம் வாழ்வுவார இதழ் சில ஆண்டுகள் கழித்து நாகர்கோவிலில் இருந்து வந்தது. அது மீண்டும்  சென்னைக்குச் சென்று அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை அவர்களை அடுத்து, அருள்முனைவர் மதுரை ஆனந்தம்நம் வாழ்வுஆசிரியராகப் பொறுப்பேற்றார். நிறைய விளம்பரங்கள் பெற்று, ஆயிரக்கணக்கான சந்தாதாரர்களைச் சேர்த்துநம் வாழ்வைஎழுச்சியுடன் நடத்தினார். அருள்முனைவர் மதுரை ஆனந்தம் அவர்களை அடுத்து தஞ்சை டோமி, குடந்தை ஞானி தற்போது அருள்முனைவர் செ. இராஜசேகரன் ஆகியோர் நம் வாழ்வின் ஆசிரியர்களாக இருந்து திறம்பட நடத்தி வருகின்றனர்.

நம் வாழ்வுமலர காரணமானவர்களில் கோட்டாறு ஆயராக இருந்து பிறகு மதுரைக்குப் பேராயராக வந்த டாக்டர் . ஆரோக்கியசாமி அவர்களே குறிப்பிடத்தக்கவராவார்.

(தொடரும்)