“இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே, உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.”
- அக்டோபர் 16, புதன்கிழமை மறைக்கல்வி உரை
“ஏழைகளைத் தயவு செய்து மறந்து விடாதீர்கள், நீர், உணவு, வேலை, மருந்து, நிலம், வீடு என ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் உலகத்தைக் கனவு காண்போம்.”
- அக்டோபர் 17, உலக வறுமை ஒழிப்பு நாள் குறுஞ்செய்தி
“அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குதல் என்பது கட்டமைப்புகளை மாற்றியமைப்பது அல்ல; மாறாக, மாற்றுத் திறனாளிகள் பற்றிய நமது மனப்போக்குகளை மாற்றுவதன் வழியாகச் சமூக வாழ்வின் முழு பங்கேற்பாளர்களாக அவர்களை மாற்றுதல்.”
- அக்டோபர் 17, G7 இத்தாலி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கான சந்திப்புச் செய்தி
“அனுதின செபம் மற்றும் நற்கருணை நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுகின்றன; தந்தை கடவுளில் நிலையான முடிவற்ற வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்துகின்றது.”
- அக்டோபர் 19, ‘செப ஆண்டு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தி
“நாம் விலகினாலும் நம்மை விட்டு விலகிச் செல்லாத, நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசுவே நமது மிகப்பெரிய உண்மையான உற்ற நண்பர்.”
- அக்டோபர் 21, திருத்தந்தையின் குறுஞ்செய்தி