திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ‘கொரியர் டெல்லோ ஸ்போர்ட்-ஸ்டேடியோ’வின் 100-வது ஆண்டு நிறைவு விழாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “வெற்றியின் உச்சம், வெற்றிக்கான முயற்சி மற்றும் தோல்வியின் இழப்பு ஆகியவற்றிலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வதால், விளையாட்டு வாழ்க்கையில் பாடங்களை வழங்குகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த சலேசிய குருவான அருள்தந்தை லொரென்சோ மாசா அவர்கள் சிறுவர்களுக்காகக் கால்பந்து விளையாட திரு அவையின் கதவுகளைத் திறந்துவிட்டார். இனம், மதம் அல்லது வர்க்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விளையாட்டை அணிதிரளச் செய்வதற்கான வழிமுறையாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். மோதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும், விளையாட்டு மக்களை ஒன்றிணைத்து, ஒரே குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கின்றேன்” என்று கூறினார்.