கால்பந்து விளையாட்டு, தனித்து மகிழ்வு காணும் விளையாட்டல்ல, அது குழும விளையாட்டாகும், அவ்வாறு அது விளையாடப் படும்போது, தன்னிலைவாதப் போக்கைத் தூண்டிவிடுகின்ற ஒரு சமுதாயத்தில், அறிவுக்கும், மனதிற்கும் உண்மையிலேயே நன்மையைக் கொணரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், தன்னைச் சந்தித்த இத்தாலிய கால்பந்தாட்டக் குழுவினரிடம் கூறினார்.
“நாம் அன்புகூரும் கால்பந்து” என்ற தலைப்பில், லா காஸேட்டா டெல்லோ ஸ்போர்ட் “டுய ழுயணணநவவய னநடடடி ளுயீடிசவ” எனப்படும், விளையாட்டு பற்றிய இத்தாலிய தினத்தாளும், இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்கின்ற, ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை, மே 24 ஆம் தேதி திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கண்டவாறு கூறினார்.
இக்கூட்டத்தில், பல்வேறு இத்தாலிய விளையாட்டு அமைப்புகளின் தலைவர்கள் உட்பட, இளம் கால்பந்து விளையாட்டு வீரர்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பயிற்சி யாளர்கள், கல்வியாளர்கள் மற்றும், வல்லுனர்கள் கலந்துகொள்கின்றனர்.
இளையோரைக் கவர்ந்திழுப்பதற்கு எளிமை யான வழி, “வானில் ஒரு பந்தை வீசுவதாகும்” என்று புனித ஜான்போஸ்கோ கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சுழலும் பந்திற்குப் பின்னால், ஏறத்தாழ ஒரு குழந்தை, தனது கனவுகளோடும், ஏக்கங்க ளோடும் இருக்கின்றது என்றும் கூறினார்.