தியாகம் மற்றும் அர்ப்பணத்துடன், குழுவாக, தன்னிடமுள்ள சிறப்புகளை வழங்குவதற்கு மாபெரும் வாய்ப்பாக, விளையாட்டு அமைந்துள்ளது என்றும், பந்தை வைத்து மற்றவருடன் விளையாடுவது, குழுவாக எவ்வாறு செயல்பட இயலும் என்பதைக் கற்றுத் தருகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, பந்து, நட்புறவைப் பகிரவும், ஒருவர் ஒருவரை முகமுகமாய் எதிர்கொள்ளவும், தங்களின் திறமை களைப் பரிசோதிப்பதற்கு ஒருவர் ஒருவருக்குச் சவாலாகவும் இருக்கின்றது என்றும் கூறினார்.
இன்னல் நிறைந்த நேரங்களில், குறிப்பாக, விளையாட்டில் தோல்வியடையும்போது, அவமான மாகக் கருதாமல் இருப்பதற்கு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, விளையாட்டில் பயிற்சி அளிப்பவர்கள் சொல்வதும் செய்வதுமே, பயிற்சி பெறுபவர்களுக்குப் போதனைகளாக மாறுவதால், அவர்களின் கனவு களுக்கு உயிரூட்டம் கொடுக்குமாறு கூறினார்.
கால்பந்து விளையாட்டில் மாபெரும் வீரர்களாக, ஏற்கனவே விளங்கும் வீரர்கள், இளம் விளையாட்டு வீரர்களுக்குத் தூண்டுதலாக இருக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், புறநகர்ப் பகுதிகளில், பங்குத்தளங்களில், சிறிய விளை யாட்டு அமைப்புகளில் தாங்கள் தொடங்கிய ஆரம்பகாலங்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருக்கு
மாறு, அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
கால்பந்து, உலகில் மிக அழகான விளையாட்டாக விளங்கும்வேளை, அதனைத் தொடர்ந்து காப் பாற்றுங்கள் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எல்லாரையும் ஆசீர்வதித்து, அவர்களுக்காகச் செபிப்பதாகத் தெரி வித்து, தனக்காகச் செபிக்குமாறும் கூறினார்.