Namvazhvu
ஜார்க்கண்ட் திருஅவை மீது அரசு பாரபட்சம்
Wednesday, 26 Jun 2019 07:51 am

Namvazhvu

அரசு சாரா கிறிஸ்தவ  உதவி அமைப்பு கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார் களா என்பதை ஆராயும் நோக்கத்தில் 88 அமைப்புக்கள் மீது கடுமையான தணிக்கை முறைகளை ஜார்க்கண்ட் அரசு செயல்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் கிறிஸ்தவ அமைப்புக்கள் மீது அரசு கடுமையான தணிக்கை முறைகளைப் புகுத்தி வருவது, எவ்வித சந்தேகமும் இன்றி திருஅவை மீதான தாக்குதலேயாகும் என்று கூறிய இராஞ்சி பேராயர் ஃபெலிக்ஸ் டோப்போ அவர்கள், அரசின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமாகும் என தெரிவித்தார்.
ஏழைகள், குழந்தைகள், மற்றும் பெண்
களுக்கு நலப்பணிகளை ஆற்றிவரும் திருஅவை
யின் நடவடிக்கைகளை ஆராய்வதில் கிறிஸ்தவ
அமைப்புக்களுக்கு மட்டும் அரசு கடுமை
யான தணிக்கை முறைகளைப் புகுத்தி யுள்ளபோதிலும், தணிக்கையின்போது அவை,
அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக வும் பேராயர் டோப்போ தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏறத்தாழ 500 அரசு சாரா சமூக அமைப்புக்கள் மக்கள் பணிகளை ஆற்றி வருகின்றபோதிலும், 22 கிறிஸ்தவ அமைப்புக்கள் மீது மட்டும் அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்வது குறித்து ஏற்கெனவே கிறிஸ்தவத் தலைவர் களுடன் இணைந்து இராஞ்சி துணை ஆயர் டெலஸ்போரே பிலூங், ஜார்கண்ட் ஆளுநரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.