Namvazhvu
கர்தினால் ஸக்கிரேசியா மறைவுக்கு, திருத்தந்தையின் இரங்கல்
Wednesday, 26 Jun 2019 08:43 am

Namvazhvu

ஜூன் 5 ஆம் தேதி இறையடி சேர்ந்த கர்தினால் எலியோ ஸக்கிரேசியா (நுடiடி ளுபசநஉஉயை) அவர்களின் மறைவையொட்டி, திருத் தந்தை பிரான்சிஸ் தன் ஆழ்ந்த அனுதாபத் தையும், செபங்களையும் ஒரு தந்தியின் வழியே பதிவு செய்தார். 
1928 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இத்தாலியின் அன்கோனா பகுதியில் பிறந்த கர்தினால் எலியோ ஸக்கிரேசியா, 1952 ஆம் ஆண்டு, ஜூன் 29 ஆம் தேதி அருள்பணியாளராகவும், 1993 ஆம் ஆண்டு ஆயராகவும் அருள்பொழிவு செய்யப்பட்டார்.
1994 ஆம் ஆண்டு, வாழ்வின் பாப்பிறைக் கழகத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கர்தினால் எலியோ ஸக்கிரேசியா, அதே கழகத்தின் தலைவராக, 2005 ஆம் ஆண்டு முதல், 2008ம் ஆண்டு முடிய பணியாற்றினார்.
“வாழ்வின் நன்னெறி கையேடு” என்ற நூலையும், வேறு பல கட்டுரை களையும் எழுதியுள்ள கர்தினால் ளுபசநஉஉயை அவர்களை, முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், 2010 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கர்தினாலாக உயர்த்தினார்.
இவர்தம் மறைவையடுத்து, கத் தோலிக்க திருஅவையில் 220 கர்தினால்
கள் உள்ளனர் என்பதும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களின் எண்ணிக்கை 120 என்பதும் குறிப்பிடத்தக்கன.