Namvazhvu
எண்ணம் போல் வாழ்க்கை 40. சேவை செய்யப் பழகு
Wednesday, 26 Jun 2019 10:00 am

Namvazhvu

ஒவ்வோர் ஆண்டும் அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவருகின்ற சமயத்தில், மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்ற மாணவ, மாணவிகள் வழக்கமாகச் சொல்லக்கூடிய ஒரு வசனம் அல்லது டயலாக் “நான் நன்றாகப் படித்து, ஒரு நல்ல மருத்துவராகி, எதிர்காலத்
தில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்” என்பதாகும்.
ஆனால், அப்படி எத்தனை பேர் மருத்துவராகி, ஏழை எளிய மக்களுக்கு அதுவும் கிராமப்புறங் களில் உள்ள மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 
இதற்கு முற்றிலும் மாறாக “நான் ஒரு நல்ல மருத்துவராகி, கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதைச் செய்து காட்டிய ஒருவர் இருக்கின்றார். அவரைக் குறித்துத்தான் இப் போது நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.
1960களின் இறுதியில் நாக்பூரில் பிறந்த ரவிந்தர கோலே, 1985 ஆம் ஆண்டு நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரில் மருத்துவப் படிப்பு முடித்து வெளியே வந்த போது, அவருடைய தந்தை தியோராய், ‘நம் மகன் இந்த நாக்பூரிலேயே ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்கி, பணிசெய்யத் தொடங்கினால், ஒருசில ஆண்டுகளிலேயே பெரிய ஆளாய் வந்துவிடுவான்’ என்று கற்பனைக் கோட்டை கட்டி வைத்திருந்தார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக ரவிந்தர கோலே, “கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யப்
போகிறேன். அதுவும் இலவசமாகச் செய்யப் போகிறேன்” என்று சொன்னது அவர்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. இருந்தாலும் தன்னுடைய மகனுடைய விருப் பத்திற்கு எதிராகத் தாங்கள் இருக்கக்கூடாது என்று ரவிந்தர கோலே பெற்றோர் அவருக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். 
ரவிந்தர கோலேவிற்கு இப்படியோர் உயர்ந்த எண்ணம்  வரக் காரணம் அவர் வாசித்த டேவிட் வெர்னர் எழுதிய, “றுhநசந வாநசந ளை nடி னுடிஉவடிச” என்ற
புத்தகம்தான். இந்தப் புத்தகத் தில் இடம்பெற்ற ‘நோயாளி ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தூக்கிச் செல்வது போன்ற காட்சியும் அதற்குக் கீழே இடம் பெற்றிருந்த ழடிளயீவையட 30 அடைநள யறயல என்ற வசனமும்தான். மருத்துவம் என்றால் வியாபாரம் போன்று ஆகியிருந்த அந்தச்
சூழலில், ‘பணம் சம்பாதிக்கவா இந்த மருத்துவத் துறையில் சேர்ந்தோம்... சேவை செய்வதற் குத்தானே சேர்ந்தோம்... ஆகவே,
யாருமே சேவை செய்ய விருப்பம் இல்லாத கிராமப்புறங் களுக்குச் சென்று மருத்துவப் பணி செய்வோம்’ என்று தீர்க்க
மான முடிவினை மேற்கொண்டு விட்டு, அதன்படியே நடக்கத் தொடங்கினார் ரவிந்தர கோலே.
மருத்துவப் படிப்பை முடித்
ததும் ரவிந்தர கோலே, ஏற் கெனவே கிராமப்புறங்களில் மருத்துவச் சேவை செய்துவந்த ஒருசில மருத்துவர்களைச் சந்தித்து, ‘கிராமப்புறங்களில் மருத்துவப்பணியை எப்படிச் செய்வது’ என்பது குறித்தான ஒருசில விளக்கங்களை  கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர்கள் ‘கிராமப்புறங்களில் மருத்துவப் பணி செய்வது ஒன்றும்
அவ்வளவு எளிதான விஷய
மில்லை... அவசரத்துக்கு இரத்தம்
கிடையாது. அப்படிப்பட்ட சூழ லில் பேறுகாலம் பார்த்தாக வேண்டும்; உடல்நலம் சரி யில்லை என்று வருவார்கள்... அவர்களுக்கு என்ன நோய் இருக்கின்றது என்று போதிய உபகரணங்கள் இல்லாத
சூழலில், அது என்ன நோய் என்று கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டும்; வயிற்றுப்போக்கு என்று சொல்லிக்கொண்டு அடிக் கடி வருவார்கள்... அதனையும் போதிய வசதி இல்லாத சூழலில் குணப்படுத்தவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில்தான் கிராமப்புறங்களில் மருத்துவப் பணி செய்யவேண் டும்” என்றார்கள். 
இதைக் கேட்ட ரவிந்தர கோலேக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தது. ‘கிராமப்புறங்களில் பணிசெய்வதற்கு நாம் படித்தது மட்டும் போதாது... போதிய அனுபவமும் வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டு ரவிந்தர கோலே, மும்பையிலிருந்த ஓர்
அரசு மருத்துவமனையில் ஆறு மாத காலம் பயிற்சி பெற்று விட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேல்கட் பகுதியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலை வில் உள்ள, பய்ராகர் என்ற குக்கிராமத்திற்கு வந்தார். அதுவோ போக்குவரத்து வசதி இல்லாத கிராமம். அப்படி
யிருந்தபோதும் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்துடன், 1986 ஆம் ஆண்டு, ரவிந்தர கோலே பெட்டி படுக்கைகளுடன் அங்கு  கிராமத்திற்கு நடந்தே வந்தார்.
பய்ராகர் கிராமத்தைச் சார்ந்த மக்கள் தொடக்கத்தில் ரவிந்தர கோலேவை வித்தியாச மாகப் பார்த்தாலும், அவர் அர்ப் பண உள்ளத்துடனும் தியாக மனப்பான்மையுடனும் செய்து
வந்த மருத்துவச் சேவையைப் பார்த்துவிட்டு, அவரிடத்தில் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். இதற்கிடையில் ஒருநாள் தீ விபத்தில் ஒரு கையை இழந்த ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக அவரிடத்தில் வந்தார். ரவிந்தர கோலேவால் அந்த மனிதருக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அப்போதுதான் அவர் தன்னுடைய இயலாமையை உணர்ந்தார். ‘மருத்துவத்தில் மேற்படிப்புப் படித்தால் இன் னும் இந்த மக்களுக்குச் சேவை செய்வது வசதியாக இருக்குமே’ என்று நினைத்த அவர், ஓராண்டு காலம் மருத்துவ மேற்
படிப்புப் படித்துவிட்டு 1987 ஆம் ஆண்டு எம்.டியாக அதே
பய்ராகர் கிராமத்திற்குத் திரும்பி
வந்து, முன்பைவிட சிறப்பான முறையில் மருத்துவப் பணி களைச் செய்யத் தொடங்கினார். 
இப்போது அவருக்கு, ‘தனியொரு ஆளாக இருந்து மக்களுக்குச் சேவை செய்வது மிகவும் கடினம்...  துணைக்கு ஒருவர் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்ற எண்ணம் தோன்றியது. அதனடிப்படையில் அவர் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடத் தொடங்கி னார். மருத்துவர் தானே மண
முடித்துக் கொள்ளலாம் என்று போட்டிபோட்டுக்கொண்டு வந்தவர்கள், ரவிந்தர கோலே
போட்ட ஒருசில நிபந்தனை களுக்குப் பயந்து பின்வாங்கத் தொடங்கினார்கள் ஏனெனில், அவர் போட்ட விதிமுறை அப்படி! ஒவ்வொருநாளும் நாற்பது மைல் நடந்துசென்று பணிசெய்ய வேண்டும்... திருமணம் எளிமையாகத்தான் நடைபெறும்... மக்களுக்கு மத்தியில் பணிசெய்யும்போது கட்டணம் வசூலிக்கக்கூடாது, மிஞ்சிப் போனால் ஒரு ரூபாய் வசூலித்துக் கொள்ளலாம்... குடும்பச் செலவை நானூறு ரூபாய்க்குள் பார்த்துக் கொள்ளவேண்டும். 
இப்படிப்பட்ட நிபந்தனைக்கு பயந்து பலரும் ஓடியபோதும் நாக்பூரைச் சார்ந்த ஸ்மிதா என்ற பெண்மணி, ரவிந்தர கோலே போட்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு, அவரை மணப்பதற்கு சம்மதித்தார். இதனால் இவருடைய திருமணம் இனிதே நிறைவேறி ரோஹித், ராம் என்ற இரண்டு மக்கள் பிறந்தார்கள்.  ரவிந்தர கோலேயோடு பணிசெய்வதற்கு ஸ்மிதா தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும், நாள்கள் செல்லச் செல்ல எல்லாம் அவருக்கும் பழகிப்போனது. இதற்குப் பின்பு இருவரும் பய்ராகர் கிராமத்து மக்களுக்கு தியாக உள்ளத்தோடு பணி செய்யத் தொடங்கினார்கள்; மக்கள் கொடுத்த சிறுசிறு ‘அன்பளிப்புகளைக்’ கொண்டே அவர்கள் குடும்பத்தை நடத்திவந்தார்கள். 
ஒருசமயம் பய்ராகர் கிராம மக்களிடத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியது. அதற்கான காரணத்தை ஆய்வுசெய்து பார்த்த போது, ரவிந்தர கோலேக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ‘ஊரின் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரம் தூய்மையாக இல்லாததினாலேயே இதுபோன்ற தொற்று
நோய்கள் வருகின்றன’ என்பதை அறிந்த அவர், ஊர்மக்களின் உதவியுடன் ஊரை முழுமையாகச் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். அதுமட்டுமல்லாமல், செயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதாலும் இதுபோன்ற நோய்கள் வருகின்றன என்பதை உணர்ந்த அவர், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகளையும் உணவுப்பொருட்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கினார். இது அவருக்குத் தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் அவருடைய மனைவி, பிள்ளைகள், ஊர்மக்கள் கொடுத்த ஒத்துழைப் பினால் அவரால் மருத்துவப் பணியோடு இயற்கையான முறையில் உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் முடிந்தது. 
இதனால் நடந்தது என்னவென்றால், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டபோதும், ரவிந்தர கோலே இருந்து பணிசெய்த பய்ராகர் மற்றும் அதை ஒட்டியிருந்த மேல்கட் பகுதியில் அதுபோன்று எந்தவொரு தற்கொலையும் நடக்கவில்லை. அந்தளவுக்கு மக்கள் ரவிந்தர கோலேவின் வழிகாட்டலில் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றிருந்தார்கள்.  இப்படிக் கடந்த முப்பது ஆண்டுகளாக ரவிந்தர கோலேயும் அவருடைய மனைவி, மக்களும் தியாக உள்ளத்தோடு பய்ராகர் பகுதியில் மருத்துவப் பணியோடு மக்கள் பணியையும் செய்து வருவதால், சாதாரண குக்கிராமமாக இருந்த அந்த ஊர் இன்றைக்கு கல்வி, பொருளாதாரம், மருத்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் வளர்ந்திருக்கின்றது. ரவிந்தர கோலேயின் தன்னலமற்ற சேவை
ஓர் ஊரையே எல்லா நிலைகளிலும் உயர்த்தி இருக்கின்றது என்றால், நாம் அனைவரும் சேர்ந்து இந்த நாட்டிற்கு சேவை செய்கின்றபோது இந்த நாடு எந்தளவுக்கு உயரும் என்பதை நாம் யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
ஆம், ‘எண்ணம்போல் வாழ்க்கை’ வாழ விரும்புகின்ற ஒருவர் இந்த நாட்டிற்கு, இந்த நாட்டு மக்களுக்குச் சேவை செய்யும் மனத்தவராய் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் நான், எனது குடும்பம், என்னுடைய சொந்தபந்தம் என்ற குறுகிய மனப்பான்மையோடு இருக்கின்றபோது அவரால் தான் விரும்பிய வாழ்வை அமைத்து கொள்ள முடியாது. கவிஞர் வைரமுத்து ஒரு முறை இவ்வாறு சொன்னார். “சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள். அதை உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்” சட்டையை அடிக்கடி கழற்றிப் போட்டுவிடுவோம். சதையை அப்படிச் செய்ய முடியாது. செய்யும் சேவையைகூட ஏதோ கடமைக்காகவோ அல்லது எப்போதோ செய்யாமல், அதை நம் இயல்பாக மாற்றிகொண்டால், இந்த வையகம் சிறக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆகவே, எண்ணம் போல் வாழ்க்கை வாழ விரும்பும் நாம், சேவை செய்யப் பழகுவோம். அதனை நம் இயல்பாக மாற்றிக் கொள்வோம். அதன்வழியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.