Namvazhvu
தொடர்பு கொள்ளும் திருஅவையாக..
Wednesday, 17 Jul 2019 05:45 am

Namvazhvu

இன்றைய இந்தியா, தனது வரலாற்றைத் தீர்மானிக்கும் தருணத்தில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (குறிப்பாக 17வது மக்களவைத் தேர்தல்
நடந்து முடிந்து மீண்டும் மோடி தலைமையி
லான பாஜக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில்) நடந்த, நடக்கிற சம்பவங் கள் நாட்டிலுள்ள எண்ணற்ற மக்களுக்கு
எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளன. நாட்டின் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மாற்றிய
மைக்கப்படுமா? நாட்டின் சிறுபான்மையினர்
இரண்டாம்தர குடிமக்களாக ஆகிவிடுவார்
களா? இந்தியாவின் சமூகக் கட்டமைப்
பைப் பேணிகாக்கும் நாட்டின் பன்முகத் தன்மையும் வேற்றுமைகளும் நிரந்தரமாக  அழித்தொழிக்கப்படுமா? இந்தியாவில் உள்ள
திருஅவையைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோமா? மேலே குறிப்பிட்ட கேள்வி
களை, நாட்டில் நடைபெறும் எதார்த்தங் களுடன் என்றும் தொடர்பில் உள்ள சமூகப் பகுப்பாய்வாளர்களும் கல்வியாளர்களும் அறிஞர்களும் சமூக அக்கறையுள்ளவர் களும் கேட்கிறார்கள். இந்திய மக்கள் அனைவரும்
(திருஅவையில் உள்ளவர்கள்) நிச்சயமாக விழித்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். ஒருவேளை, மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் கரிசனைகளுக்கும் நேர்மறையான பதில்கள் கிடைத்தால் பாரட்டுக்குரியது. 
இந்தியாவில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையும் குறிப்பாக, தொடர்பு கொள்ளும் திருஅவையாக இருக்க வேண்டும் என்ற தன் கடமையை நினைத்தால்... இதுவே விழித்துக்கொள்ளும் நேரம். இதுவே அவசரகால
அழைப்பு. திருச்சூரில் 2004 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் நடைபெற்ற அகில இந்திய ஆயர்பேரவைக் கூட்டத்தில்,
தொடர்பு கொள்ளும் திருஅவையாக இருக்க அழைப்பு
என்பதை மையப்படுத்தி, ஒரு சிறப்பு அறிக்கை வெளியிடப் பட்டது. அதில், ஊடகங்கள் இறைவாக்கினருக்குரிய பங்கைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் அதுவே அவற்றின் இறையழைத்தலாகும். இன்றைய நாளின் போலித் தெய்வங்களாகவும் தவறான கருதுகோள்களாகவும் உள்ள  கருப்பொருள்வாதம், இன்பவாதம். நுகர்வுக்கலாச்சாரம், மற்றும் குறுகிய தேசியவாதம் ஆகியவற்றிற்கு எதிராக உரக்கப்பேச வேண்டும்; எழுத வேண்டும்.
ஆயர்பேரவையின் இந்த அறிக்கை. இந்தியாவில் உள்ள குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் உருவாக்கப்பட்டு, செயல்படுத்த வேண்டிய சமூக மேய்ப்புப்பணித் திட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறபோது, இந்தியாவில் உள்ள திருஅவை விலை மதிப்பற்ற இலட்சியங்களைச் செயல்படுத்த மிகப்பெரிய அளவில் தோற்றுவிட்டது என்பதை நாம் நேர்மையோடும் தாழ்ச்சியோடும் ஒப்புக்கொள்ள வேண்டும்.  நமக்கான கடவுள் திட்டம் என்பதை உறுதிப்படுத்த நாம் மிகச்சிறிய அளவிலேயே செயல்படுத்தியுள்ளோம். 
ஜூன் 14, 2019 அன்று நம் தமிழகத் திருஅவை தமிழக ஆயர்பேரவையின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும் 53வது அகில உலக சமூகத் தொடர்பு நாளை நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம் (எபே 4:25) என்ற கருப்பொருளில் கொண்டாடுகிறோம். "முதன் முதலாக, இணையம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றதிலிருந்தே,  நபர்களுக்கிடையே சந்திப்பையும் தோழமையையும்
வளர்த்தெடுப்பதற்கு அது பயன்பட வேண்டும்; தொண்டாற்ற வேண்டும் என்று திருஅவை எப்பொழுதும் அறைகூவல் விடுத்துள்ளது.  இந்தச் செய்தியுடன், தற்காலத் சமூகத் தொடர்புகளுடைய சவால்கள் வரிசைக்கட்டி நிற்கிற பின்னணியில், மீண்டும் ஒருமுறை நாம் உறவோடு இருப்பதன் அடித்
தளத்தையும் முக்கியத்துவத்தையும் குறித்து சிந்திக்கவும், தனிமையிலோ, தனிமைப்படுத்தப்
பட்டோ உள்ளவர்களின் விருப்பத்தை மீண்டும்
கண்டுபிடிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்" என்று திருத்தந்தை இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.  அவர்தம் செய்தியால் தூண்டப் பெற்று இந்தியாவில் உள்ள திருஅவை (தமிழகத் திருஅவை) திருச்சூர் அறிக்கையுடன் திரும்பிப் பார்த்து, ‘தொடர்புகொள்ளும் திருஅவை’ என்பதை முடிந்த வகைகளில்லாம் செயல்படுத்த உறுதியேற்க வேண்டும். 
சமூகத் தொடர்பு என்பது நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலையிலும் நீக்கமற ஊடுருவியுள்ளது. ஒருவர் தொடர்புகொள்ள வில்லை என்று அவன் அல்லது அவள் நினைக்கும்
போதே உண்மையில் அவர்(ள்) ஒரு வலிமையான
செய்தியை அனுப்புகிறார். இதுவே இங்குள்ள நகைமுரண். மாயக் கிராமமாக மாறிக்கொண்டிருக் கும் இந்த உலகை சமூகத் தொடர்பு என்பது இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் இறுகப் பற்றிக்கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு தொடர்பாளராக மாறுகின்றனர்.  இன்றைய டிஜிட்டல் புரட்சிக்கு மிக்க நன்றி. அது நம் உலகை கணிப்பொறி, செல்போன்கள், மற்றும் இணையம் வழியாக நம்மைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.  அண்மையில் வெளிவந்த கேட்ஜெட்
களுடன் மக்கள் அதீத ஈடுபாட்டுடன் மூழ்கியிருப் பதை பொதுவாகப் பார்க்கிறோம்.  செல்போன்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்; செய்திகளைத் தட்டச்சுசெய்து அனுப்புகிறார்கள்; இன்ஸ்டாகிராமில் டஜன் கணக்கில் புகைப்படங்களை பதிவுச் செய்கிறார்கள்..உண்மையில் அனைவரும் அதி தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் வேகமும் நியாயமானதே. (இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் தரைவழி தொலைத்தொடர்புச் சாதனத்தோடும். அஞ்சல்துறை அமைப்போடும். அல்லது படச்சுருள் திரையோடும்.அல்லது ஸ்லைடு ஷோக்களோடும் திருப்தி அடைந்துகொண்டிருந்தோம் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது). இன்று காலம் மாறிவிட்டது. புதிய, மிகப்பெரிய சவால்கள் இன்று நம்முன் உள்ளன. இயேசுவின் சீடர்களாக இருக்கிறவர்கள் அனைவரும் மிகவும் பலன் தருகிற, பொருத்தமான சமூகத் தொடர்பாளர்களாக இன்றைய இந்தியாவில் இருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. 
இந்தியத் திருஅவையில் தகவல் பரி
மாற்றம் என்பது சூழலுக்கேற்றாப்போல் அல்லது
மண்ணுக்கேற்றாற்போல் மாற்றப்பட வேண்டிய
தொன்றாக இருக்கின்றது. அது நம் நாட்டின் சாதாரண குடிமக்களின்  எதார்த்தங்களிலிருந்து
விலக்கப்பட்டோ  அல்லது தனிமைப்படுத்தப் பட்டோ  இருக்க முடியாது. இன்றைய இந்தியாவில் சூழலமைவுக்குப் பஞ்சம் இல்லை.  பலகோடி மக்களின் வளர்ந்துவரும் ஏழ்மை, கடன் தொல்லை யால் விவசாயிகள் மேற்கொள்ளும் தற்கொலைகள், வெறுப்பு அரசியல் - பிரித்தாளும் அரசியல், புறந்தள்ளும் அரசியல்.. (மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்களின் பிரச்சாரத்தில் வெளிப்பட்டது), மலிந்து கிடக்கிற ஊழல், மனித உரிமைப் போராளிகளை வேட்டையாடி, கைது செய்து, கொலை செய்தல், சட்டத்தைக் கையிலெடுத்து தண்டணை தருதல்,  ஒடுக்கப்பட்டவர்களான தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் மீது தொடர் தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மதிப்பீடுகளை தகர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள்..ஆகியவைதான் இன்றைய இந்தியாவைத் தாக்கிக் கொண்டிருக்கிற கொள்ளை நோய் பட்டியலில் சில... இவை இனிவரும் ஆண்டுகளில் இன்னும் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும்!  உண்மையான சமூகத் தொடர்பு என்பது இப்படிப்பட்ட எதிர்மறைகளை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்டுவது இல்லை.
நல்ல காரியங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.  இருந்தபோதிலும்  நமது திருஅவையின் பெரும்பாலான நூல்வெளியீடு களும் தயாரிப்புகளும் நாட்டில் உள்ள ஏழைகள், ஓடுக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்து எதார்த்தங்களைப் பார்க்கக் கூடியதாகவும் கேட்கக் கூடியதாகவும் உள்ளனவா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்கவேண்டிய தேவை இருக்கிறது. 
ஒருவர் திறானய்வுமிக்கவராக இருக்க வேண்டும் என்று அர்த்தமிக்க சமூகத்தொடர்பு வேண்டுகிறது. பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்  - ஆசிரியர் பவுலோ ஃபிரெய்ரே, ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்விபோதனை முறை’ மற்றும் திறனாய்வுமிக்க மனச்சாட்சிக்கான கல்வி  (ஞநனயபடிபல டிக வாந டீயீயீசநளளநன யனே நுனரஉயவiடிn கடிச ஊசவைiஉயட ஊடிளேஉiடிரளநேளள) என்ற அவர்தம் நூல்களில்
திறனாய்வுமிக்க மனசாட்சி (ஊசவைiஉயட ஊடிளேஉiடிரளநேளள) அல்லது விழிப்புணர்வுள்ளாக்குதல் (ஊடிளேஉநைவேணையவiடிn) ஆகிய சொல்லாட்சிகளை கல்வி மற்றும் சமூகக் கருத்துருவாகப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு தனிநபரும் அவர்களுடைய நடப்புச் சூழ்நிலைகளைப் பரிசோதித்து திறானாய்வுமிக்கச் சிந்தனையோட அணுகுவதற்கான திறனை வளர்த்துக்கொள்வது; அவர்களுடைய மெய்யான எதார்த்தங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வது;  அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் திட்டமிட்டு, செயல்படுத்தி, தீர்வுகளை மதிப்பீடு செய்வது.. இவற்றையெல்லாம் அது குறிக்கும். 
நமது நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களும் அறிஞர்பெருமக்களும் அதிகாரமும் சுயநலமும் நிறைந்தவற்றை திறனாய்வுச் செய்து விமர்சனம் செய்ததன் காரணமாகக் கொல்லப்படுகிறார்கள். (உதாரணம் தமிழகத்தில் மாயமான முறையில் காணாமல்போன மனித உரிமைப் போராளி முகிலன்)
மிகச் சிறந்த விழிப்புணர்வையும் ஒருசேர எதிர்மறையான தீர்வுகளுக்காக பணியாற்றும் பொருட்டும் இந்தப் சூழலமைவை எதிர்கொள்வதே  திருஅவையின் முன் உள்ள சவால்.  அர்த்தமுள்ள விதத்திலும் நேர்மறையாகவும் திறனாய்வு செய்வதென்பது நல்ல ஆழமான வாசிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் நம்மை அழைக்கிறது.  நாம் ஒருபோதும் மேம்போக்காக அல்லது வெறும் ஒப்பனைக்காக மட்டும் செய்தல்கூடாது.  பெயரளவுச் செயல்கள் (கூடிமநnளைஅ) நம்மையே திருப்பித் தாக்கும். மக்கள் நம்முடைய வெறுமை (ழடிடடடிறநேளள) வழியாகவே பார்த்திடுவர். 
சமூகத் தொடர்பு என்பது கட்டாயமாக படைப்பாற்றல்மிக்கதாக இருக்க வேண்டும்.  ஒருவருக்கு எல்லாத் திசைகளிலும் தகவல் பரிமாற்றம் வெள்ளமென வந்து குவிகிறது.  இங்கு பார்ப்போரின் கவனத்தைக் ’கைப்பற்றுவதே’  மிகவும் முக்கியம்.  படைபாற்றல்மிக்க சமூகத்
தொடர்பு என்பது செய்திப் பரவலாக்கத்திற்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.  படைப்பாற்றல் என்கிறபோது அது சத்தமானதாக, முக்கியத்துவ மிக்கதாக, அல்லது உணர்ச்சியைத் தூண்டக் கூடியதாக இருக்க வேண்டும் என்றில்லை. அது எளிமையானதாக, சுவைமிக்கதாக, மெல்லிய அதிர்
வலைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். 
திருப்பலியின்போது ஆற்றப்படும் மறை யுரைகள் குறித்து குருக்களுக்கு நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் (நற்செய்தியில் மகிழ்ச்சி) குருக்கள், மறையுரை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துவதில்லை என்கிறார்.  நமது பெரும்பாலான தகவல் பரிமாற்றம் என்பது அரவை இயந்திரம் ஓடுவதுபோல, அவர்களைக் கவர்ந்திழுப்பதற்கான முதலீடு ஏதுமின்றி உள்ளன. 
குருக்களாகிய நாம் ‘நம்முடைய சமூகத் தொடர்புப் பணி குறித்து எந்த அளவிலாவது ஆழ்ந்து மதிப்பீடு செய்துள்ளோமா?
தகவல் பரிமாற்றம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மையையும் நீதியையும் அறிவிப்பதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது. இதற்காக நாம் ஒரே சமயத்தில் தொட்டிலையும் ஆட்டக் கூடாது; குழந்தையையும் கிள்ளக் கூடாது.  உண்மையும் நீதியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். அதனை மாற்ற இயலாது. இன்றைய இந்தியாவில் ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக சார்புநிலை எடுக்கும்போது சீர்கேடு அடைந்தவர்களாகின்றனர். நமக்கு உண்மையையும் நீதியையும் ஏனைய நற்செய்தி மதிப்பீடுகளையும் உயர்த்திப்பிடிப்பதற்கு அஞ்சி
விலகாத தைரியத்துடன் உள்ள சகத் தொடர்பாளர்கள் அவசரமாகத் தேவைப்படு கிறார்கள்.  இந்தியாவில் உள்ள திருஅவை உண்மைக்கு அதிகாரமளிக்க பேச வேண்டும்.  இயேசுவின் சீடருக்கு சமூகத் தொடர்பு என்பது செயல்நயமோ அல்லது பகைமையோ அல்ல. உண்மை என்பது எல்லாக் காலங்களிலும் உணர்ச்சிவசப்படக்கூடியதாக இருக்க வேண்டும்.  வார்த்தையிலும் சாட்சியத்திலும் நற்செய்தி அறிவிப்பு என்பதே தகவல் பரிமாற்றத்தின் மையமாகும். 
உடனுழைப்பு என்பதே தொடர்புகொள்ளும் திருஅவையின் இயல்பாகும்.  இயேசு இவ்வுலகில் அவர்தம் பணியின் நம்மை உடனுழைப்
பாளர்களாக இருக்கவே அழைக்கிறார். நற்செய்தி அறிவிக்கும்போது நாம் ஒருபோதும் நடுநிலையோடு இருக்க முடியாது.  நாம் மற்றவர்களோடு போட்டியிலும் இருக்க முடியாது.  திரு அவைக்கென்று நாடு முழுவதும் பல்வேறு ஊடக நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக தமிழகத்தில் 44 ஆண்டுகளாக வெளி
வரும் தமிழக இறை மக்களின் தனிப்பெரும் ஒரே அரசியல் ஆன்மிக விழிப்புணர்வு வார இதழ் நம் வாழ்வு, கடந்த ஆறு ஆண்டுகளாக ஒளிப்பரப்பப்படும் மாதா தொலைக் காட்சி மிகவும் குறிப்பிடத்தக்கவை; போற்றுதலுக் குரியவை. ஆனால் மறைமாவட்ட அளவில் பார்க்கிறபோது ஒருவர் மற்றவருடன் இணைந்து செல்வதென்பது மிகவும் கடினமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தீவாக இருந்துகொண்டு விரும்பியதைச் செய்யவே ஆசைப்படுகின்றோம். பலசமயங்களில் ஒருவர் மற்றவருடன் போட்டிப்போடு கிறோம். ஊடகத் தொடர்பாளர்களாக்கி நமது பொதுநிலை யினரின் திறமைகளையும் தகுதிகளையும் எப்போதாவது பயன்படுத்துகிறோம். உண்மைக்கும் நீதிக்குமான இப்போரட்டத்தில் நல்லெண்ணம் கொண்ட ஆண்களோடும் பெண்களோடும் இணைந்து நாம் செயல்பட வேண்டும். நற்செய்தி மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தச் சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் விரும்பினால் நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் ஈடுபட வேண்டும். 
இந்தியாவில் உள்ள திருஅவை 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தை உணர்ந்தால் சூழலமைவில். படைப்பாற்றலில், திறனாய்வில், அஞ்சாமையில் உடனுழைப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.  கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு. 52வது உலக சமூகத்தொடர்புத்தினத்திற்கு போலிச் செய்திகளும் சமாதானத்திற்கான இதழியலும் என்ற தலைப்பில்  உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:32) என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.  திருத்தந்தை பிரான்சிஸ் உண்மையைப் பறை
சாற்றுவதற்கான மாற்றமுடியாத அதன் கூறுகளை வலியுறுத்தி,
போலிச் செய்திகளை எதிர்
கொள்வதெப்படி என்று குறிப் பிடுகிறார். நானும் போலிச்
செய்திகள் பரவாமல் தடுப்பதற் கான நமது சமூக கடமைக்கு வலிமைச் சேர்க்கவும் இதழியலின்
மாண்பையும் உண்மையையும் அறிவிப்பதற்கான பத்திரிகை யாளர்களின் தனிப்பட்ட பொறுப்
புணர்வை மீண்டும் கண்டுணர வும் விழைகிறேன்.
சமூகத் தொடர்பு என்பது இறைவன் நமக்கு வகுத்தளித்த திட்டத்தின் ஒருபகுதியும் தோழமையை அனுபவிக்க மிகவும் இன்றியமை
யாத வழியும் ஆகும். படைத்தவரின் சாயலாகவும் பாவனையாகவும் படைக்கபட்ட நம்மால் இவை அனைத்தும் உண்மையானது, நன்மையானது, அழகானது என்று வெளிப்படுத்தவும் பகிரவும் முடியும்.  நாம் நமது சொந்த அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் விவரிக்க முடியும். இதன் மூலம் வரலாற்று நினைவையும் நிகழ்வுகளைப் பற்றிய ஒரு புரிதலையும் நாம் ஏற்படுத்துகிறோம்.  என்று அதன் தொடக்கப் பத்திகளில் சமூகத் தொடர்பின் ஆன்மிகத்தைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக கூறுகிறார். 
உண்மைக்காக நிற்பவர்களும் நீதி மற்றும் அமைதிக்கான சமூகத்தொடர்பை வளர்தெடுப்ப வர்களும் அதற்குரிய விலையைக் கொடுத்தே ஆகவேண்டும். இதில் அரசு இரகசியம் ஒன்றும் இல்லை.  அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்; சிறுமைப்
படுததப்படுவார்கள். தவறாகக் குற்றஞ் சாட்டப் படுவார்கள். ஏன் சிலர் கொல்லப்படுவார்கள்.  இந்தியாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தில், இந்தியாவில் உள்ள திருஅவையானது, இவற்றைக் கண்டு அஞ்சாதிருப்பதாக.  உண்மையிலேயே தொடர்புகொள்ளும் திருஅவையாக எல்லா நிலையிலும் அவளுக்குக் கொடுக்கப்பட இருக்கும்
பொருட்டு., இறைவாக்கினருக்குரிய தன் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். இது அவ்வளவு எளிதன்று; ஆனாலும் இயேசுவின் உண்மைச் சீடராக ஆவதற்கு எந்த விலையும் கொடுக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 
பிப்ரவரி 21, 2013 அன்று சமூகத்தொடர்புக்
கான திருப்பேராயத்தின் ஆண்டுக் கூட்டத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றிய உரையில்  அனைவருக்கும் உரிய இல்லமாக உள்ள திருஅவை
யின் முகத்தை நம்மால் தகவல் பரிமாற்றம் செய்ய
நம்மால் இயலுமா? சிலசமயங்களில் தன் கதவுகளை
மூடிய திருஅவையைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இங்கே திறந்த கதவுகளுடன் கூடிய
திருஅவையைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கிறிஸ்துவை அனைவர்க்
கும் கொண்டுபோய் சேர்த்த அன்னை மரியாவைப்
போல இந்த மகிழ்ச்சியுடனும் நம்பிக்கைகளுடனும் மற்றவருக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். நமக்கான பாதையை இழந்துவிடாமல் கண்டுகொள் ளாமை என்னும் மேகங்களின் ஊடே கடந்து செல்ல வேண்டும்.  திசை தெரியாமலும் தோற்றுவிடா மலும் அந்த இருளுக்குள் நாம் இறங்க வேண்டும். 
நாம் ஏமாந்து விடாமல், அந்தக் கனவுகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். நாம் மனச்சோர்வடை யாமல் அவர்களுடைய விரக்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது பலத்தையும் அடை
யாளத்தையும் இழக்காமல் வாழ்விழந்து தவிப்பர்கள் மீது பரிவிரக்கம் கொள்வோம்.  இதுவே வழி. இதுவே சவால். 
ஆம். இதுவே வழி.  இதுவே  சவால். இந்தியா
வில் உள்ள திருஅவை தொடர்பு கொள்ளும் திருஅவையாக விளங்கி, இறைவாக்கினருக்குரிய தன் கடமையைச் செய்திடவேண்டுமானால் இன்றே.. இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும். 
(நன்றி: Companion India, June 2019. தமிழில் குடந்தை ஞானி, பாளை மரிய அந்தோனி)