Namvazhvu
பாசிசத்திற்கு எதிராக ஒலித்த ஜனநாயகத்தின் குரல்
Wednesday, 17 Jul 2019 06:48 am

Namvazhvu

மஹூவா மொய்த்ரா! இந்திய ஜனநாயகம் இன்று உச்சரிக்கும் மந்திரச் சொல். திரிணாமுல் காங்கிரஸ்கட்சியின் எம்பியான இவர் நாடாளுமன்றத்தில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின்போது ஆற்றிய
கன்னி பேச்சு, இவ்வாண்டு நாடாளுமன்றத்தின் சிறந்த பேச்சு என்று ஜனநாயக வாதிகளால் கொண்டாடப்படுகிறது. இது கன்னிப் பேச்சு என்பதைவிட பாஜகவை கண்ணிப்போகச் செய்யும் பேச்சு என்பதே சரி. பாஜகவின் பிடரியைப்பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, கன்னத்தில் ஓங்கி அறைவிட்டதுபோல இருந்தது இந்த கன்னிப் பேச்சு. இவர்தம் கண்களில் கொப்புளித்த கோபமும் வார்த்தைகளில் தரித்திருந்த நெருப்பும் முகபாவணையில் வெளிப்பட்ட வெறுப்பும் பாஜக எம்பிக்
களை அணுஉலையில் வைத்த யுரேனியத்தைப்போல தகிக்க வைத்தது. 
கோபம் நிறைந்த முகத்துடன், நான் இங்கே சில முக்கியமான விஷயங்களைப் பேச வேண்டும் என்ற அவர், யாரும் அவரை சட்டைச்செய்யாததைக் கண்டு, ‘உங்களுக்கு மக்கள் வெற்றியை அளித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. ஆனால், உங்கள் ஆட்சியின் மறுபக்கம் ஆபத்தானதாக இருக்கிறது. அதை நான் பேசியாக வேண்டும்’ என்று பாஜக எம்பிக்களின் கவனம் ஈர்த்த அவர், அவர்களின் காதுகளைத்  திருகி, ‘கவனித்தீர்களா? மீண்டும் வெற்றிபெற்ற நாளில் இருந்து, ‘ஜனநாயகத் தலைவன்’ எனும் முகமூடியைப் போட்டுக்கொண்டு திரிகிறார்,
பிரதமர் நரேந்திரமோடி. அவரின் நல்ல
நேரம், அவசரநிலை பிரகடனத் தேதியும் அவை
நாளிலேயே வந்து தொலைத்தது. ’அவசரநிலை யைப் போன்ற இருண்ட நாட்கள், இந்தியாவுக்கு மீண்டும் வரக் கூடாது’ என்று காங்கிரசையும் சாடிவிட்டு, மோடியைச் சீண்டுகிறார்.
மௌலானா ஆசாத் அவர்களின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி இந்திய இறையாண்மையின் வேர்களைப் பிடித்த மொய்த்ரா, மக்களவையில் பெரும்பான்மை பெற்று, இந்திய ஜனநாயகத்திற்கும் இந்திய இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள ‘பா.ஜ.க கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டாலும், அதன் மறுபக்க அதிருப்தியின் குரல்களைக் கேட்க வேண்டியது அவசியம். இங்கு ‘அச்சா தின்‘ எனக் கூறுவீர்கள். அரசு கட்டியெழுப்ப விரும்பும் இந்தியப் பேரரசின் மீது சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காது. ஆனால், இந்த நாடு சிதைந்துபோகும் சில அறிகுறிகளை நீங்கள் காணவில்லை. கண்களை நன்றாகத் திறந்து பார்த்தால் மட்டுமே அந்த அறிகுறிகளை உங்களால் பார்க்க முடியும்‘ என்று ஆர்எஸ்எஸ் பாசறையில் ‘ஓற்றைத் தேசியம்‘ கற்ற பாஜகவின் பிடரியில் தன் கைகளை வைத்தார். 
தொடர்ந்து அமெரிக்காவில் ஹோலோ காஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தில் எழுதப்பட்டுள்ள பாசிசத்தின் குறியீடுகளில்  7 அறிகுறிகளை பட்டியலிடத் தொடங்கினார்.  முதலாவது பாசிச அறிகுறி என்ற தேசியவாதம் அவர், தற்போது நாட்டில் உள்ள தேசியவாதம் என்பது மனித உரிமைகளை அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், ஊடகங்களின் கட்டுப்பாடு, தேசியப் பாதுகாப்பு மீதான பதற்றம் மற்றும் மதவாதம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. 50 வருடங்களாக ஒரு மாநிலத்தில் வாழ்பவர்கள், தாங்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை நிரூபிக்க ஒரு சிறிய காகிதம் போதுமானதாக உள்ளது. ஆனால், இதே நாட்டில் அமைச்சர்கள் கல்லூரியில் பெற்ற பட்டத்தைக் காட்ட முடியவில்லை என்று குட்டு வைத்தார். இரண்டாவது பாசிச அறிகுறி, மனித உரிமைகள் மீதான அவமதிப்பு என்று கூறிவிட்டு, ‘சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓர் இஸ்லாமிய இளைஞர் அடித்தே கொலை செய்யப்பட்டார். 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை இந்தியாவில் வெறுப்பு அரசியலின் குற்றங்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளன என்று விரல் நீட்டினார். மூன்றாவது பாசிச அறிகுறி என்று ஊடகங்களை அடிபணியச் செய்தல் என்று, ‘ இந்தியாவின் மிகப் பெரும் செய்தி ஊடகங்களின் அமைப்பு ஒரு தனி மனிதருக்காகக் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது மறைமுகமான முறையில் கடன்பட்டதாக உள்ளன. பெரும்பாலான தொலைக்காட்சிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஒளிபரப்பு செய்கின்றன. ஆளும் அரசு, ஒவ்வொரு தனி ஊடகத்துக்கும் அளித்த விளம்பரப் பணத்தின் மதிப்பை வெளியிட  முடியுமா?” என்று விளாசினார். நான்காவதாக, தேசிய பாதுகாப்பு மீதான பதற்றம் என்று  புல்வாமா தாக்குதலை எப்படி தேர்தல் லாபத்திற்கு பாஜக பயன்படுத்தியது என்று மறைமுகமாகத் தோலூரித்துக் காட்டினார். ஐந்தாவதாக, மதத்துடன் பிணைந்த அரசு என்று ராமர்கோவிலை வைத்து தேசத்தை மதத்தின் பெயரால் பாஜக துண்டாடுவதைச் சுட்டிக்காட்டினார். ஆறாவதாக, கலை மற்றும் அறிஞர்கள்மீதான வெறுப்புணர்வைச் சுட்டிக்காட்டி, கல்வி காவிமயமாவதைப் பட்டியிலிட்டார். ஏழாவதாக, சுதந்திரமற்ற தேர்தல்முறையைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமிக்க அணுகுமுறையை சாடினார். “இந்தத் தேர்தலில் மொத்தமாக 60,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அதில் 27,000 கோடி அதாவது 50 சதவிகித பணத்தை ஒரே ஒரு கட்சி மட்டும் செலவழித்துள்ளது” என்று பாஜகவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். 
அவர் சுழற்றிய இந்த ஜனநாயக சாட்டையில் பாசிச பாஜகவினர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். தேசியவாதம், மனித உரிமைகள், எதிரிகளை காட்டி தப்பித்துக் கொள்ளுதல், ராணுவத்தை அளவுக்குமீறி கொண்டாடுதல், ஊடகங்களை ஊதுகுழலாக்கி வைத் திருத்தல், அரசாட்சிக்குள் மதத்தை அனுமதித்தல், நாட்டுப்பாதுகாப்புக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுதல்...
இவை அனைத்தையும் உதாரணத்தோடு எடுத்துக் காட்டி, இந்தியர்களை உசுப்பியிருக்கிறார். இந்திய ஜனநாயகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவரின்
பேச்சு ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை விதைத்
திருக்கிறது. பாசிச பா.ஜ.க. ஒழிக என்று முழங்கிய தூத்துக்குடி சோபியாவின் சாயல் கொஞ்சம் தெரிகிறது. சிங்கத்தின் பிடரியை அதன் குகைக்குள்ளேயே பிடித்து உலுக்கிய இவர் நம் கண்களுக்கு நம் காலத்து கண்ணகியைப் போலவே தெரிகிறார். இவரின் சிலப்பதி
காரம் இந்திய ஜனநாயகத்திற்கானது. சொரணைமிக்க மேற்கு வங்கமும் தமிழகமும் கேரளமும் இந்திய ஜனநாயகத்தின் ஈரத்தை என்றுமே தக்கவைக்கும் என்பதற்கு மொய்த்ரா நல்லுதாரணம். பாஜகவிற்கு அடிக்கப்பட்ட இந்த அபாயமணி.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கட்டும். இந்தியா ஜனநாயகம் இன்னும் பல நூற்றாண்டுகள் உயிரோடிருக்கும் என்று உலகுக்கு அறிவிக்கட்டும்.