Namvazhvu
மீனவர் குரல் காவு கேட்கும் கதிரியக்கம்
Wednesday, 17 Jul 2019 07:23 am

Namvazhvu

கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பால் கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
"பொருத்தமில்லாத உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை நடைமுறை களாலும், புகைப் பழக்கத்தினாலும், புகையிலை பயன்படுத்துவதாலும், குட்கா, பான்மசாலா போன்ற போதை வஸ்துக்களைப் பயன் படுத்துவதாலும், வெற்றிலை - பாக்கு - புகையிலை - சுண்ணாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவ
தாலும், மது அருந்துவதாலும், மூக்குப் பொடி போன்றவற்றாலும், கடற்கரை கனிம கருமணலை எடுத்துப் பல் விளக்குவதாலும் அதிக
மாகப் புற்றுநோய் ஏற்படுகிறது’ என்று ஒரு சில விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் சொல்கிறார்கள்.
ஆனால் மேலே சொன்ன எதையும் பயன்படுத்தாத சின்னஞ்
சிறு மழலைகளுக்கும், பெண்களுக்
கும் இந்த நோய் வருகிறதே! அதற்கு என்ன காரணம் என்று
மீனவ மக்கள் தேடத் தொடங்கினர்.
ஒரு சில தொண்டு நிறு வனங்களும், கடற்கரையில் இருக்
கும் புற்றுநோய் பாதிப்புகளைப்
படம் பிடித்தும், புற்றுநோயாளி களின் கோரத்தை புகைப்படமாக பலகோணங்களில் எடுத்தும், அவர்களின் குடும்பச் சூழ்நிலையை
- நோய்க்கு மருத்துவம் பார்த்த
தால் ஏற்பட்ட வறுமையையும் ஏழ்மையையும், சுற்றுச்சூழல் அபாயங்களையும் புராஜக்ட் களாக்கி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு புற்று நோய் வராமலிருக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறோம் என்று கடலோர கிராமங்களில் பயிற்சிகளும், கருத்தரங்குகளும் முகாம்களும் நடத்திக் கொண்டிருந்
தனர். அவர்களும் அரசும், சுகாதாரத்துறையும், விஞ்ஞானி
களும் சொல்லும் காரணங்களையே கூறி புற்றுநோய் வர மக்களே காரணம் என்ற கருத்தை
உண்மையாக்கிக் கொண்டிருந்தனர்.
ஆனால், கடற்கரை கிராமங்
களில் மட்டும் மற்ற பகுதிகளை விட அதிகமான மக்கள் பாதிக்கப் பட காரணம் என்ன? அதிலும் குறிப்பாக மத்திய அரசின் மண வாளக் குறிச்சி மணல் ஆலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் இன்னும் அதிகமாக மக்கள் இந்த கொள்ளைநோய்க்கு ஆளாகக்
காரணம் என்ன? இவர்கள் சொல்லும் காரணங்கள் ஏற்கும்படி
யாக இல்லை; அப்படியானால் வேறு ஏதோ காரணம் இருக்கிறது. நாங்கள் கொத்துக் கொத்தாகச் சாகிறோமே! இதனால்தான் சாகி றோம் என்ற காரணத்தையாகிலும் அறிந்து கொண்டு சாக விரும்பு கிறோம். காரணத்தை அரசு சொல்ல வேண்டும் என்று மக்கள்
அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். தன் சாவுக்கான காரணம் என்ன என்று தெரியாமல் செத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் மீனவ சமூகமாகத்தான் இருக்க முடியும்.
மக்களின் இந்தக் கேள்விக்கு
விடையளிக்க யாரும் முன்வர வில்லை. ஆனால் சில சமூக ஆர்வலர்கள் கடலோரப் பகுதிகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டு, பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார்கள். அதில் மலை களிலிருந்தும், காடுகளிலிருந்தும் ஆறுகள் மூலமாக அடித்துக் கொண்டுவரப்பட்ட கனிமங்களும் தாதுக்களும் பல ஆண்டுகளாக கடலில் வந்து சேர்ந்துள்ளன. அந்தக் கனிமங்களையும், தாதுக்களையும் கடல் தன்னகத்தே வைத்துக் கொள்ளாமல் கரையில் கொண்டு தள்ளுகிறது. கரையில் ஒதுங்கிய கனிமங்களும் தாதுக்களும் கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடக்கின்றன. அந்த கனிமங்களையும் தாதுக்களையும் கடற்கரை மணலிலிருந்து தோண்டி எடுப்பதால் வெளிப்படும் கதிரியக்கத்தின் வீச்சினாலும், எடுத்த அந்த மணலை பல்வேறு வீரியம் நிறைந்த கனிமப் பொருள்களாக பிரித்தெடுப்பதால் உருவாகும் கதிரியக்கப் பாதிப்புகளாலும்தான் இதுபோன்ற நோய்கள் உருவாகின்றன என்ற திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படுகின்றன.
"கடலோர கேன்சர் கவிதைகள்" என்று தலைப்பிட்டு ’இந்தியா டுடே’ இதழில் வெளியான கட்டுரையிலும் பல்வேறு காரணங்கள் அடிக்கப் பட்டுள்ளன.
"கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல் வேலி மாவட்ட கடற்கரையில் இருக்கும் விலை
மதிப்புமிக்க அரிய கனிமவள மணல் வரமாக அல்லாமல் சாபமாக மாறக்கண்ட கடற்கரையோர மக்கள் அவநம்பிக்கையின் உச்சத்தில் இருக் கிறார்கள். இந்தப் பகுதியின் சுற்றுச் சூழல், சமூகம், பொருளாதாரம், அரசியல் அத்தனையையும் இந்த கனிமவள சுரங்கத் தொழில் சிதைத்திருக்கிறது. கடற்கரை மணலை அள்ளுவதால் கடல்வளம் பாதிக்கிறது. அணு கதிரியக்கம் உள்ள தோரியத் தைக் கொண்ட மோனோசைட் கனிமத்தைப் பூமியிலிருந்து தோண்டி எடுப்பதால் சரும நோய்களும், கேன்சரும் பரிசாகிறது" என்கிறார் சூழலியல் விஞ்ஞானி ஆர்.எஸ். லால் மோகன் என்று ’இந்தியா டுடே’ சொல்கிறது.
தென் தமிழகக் கடலோரங்களில் கணிசமான கனிமவள இருப்பு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட 1905 ஆம் ஆண்டில், இருந்தே கடலோர மக்களின் துயரமும் அவநம்பிக்கையும் பின்னிப் பிணையத் துவங்கி விட்டது. 1950ல் அமைக்கப்பட்ட மத்திய அரசின் மணவாளக்குறிச்சி அருமணல் தொழிற்சாலை 1996ல் இல்மனேட், சிர்க்கான் உள்ளிட்ட பெருங்கனிம மணல் எடுப்பதில் தனியார் சுரங்க நிறுவனங்களை அனுமதிப்பது ஆகிய முடிவுகள் கடலோர மக்களை ஒரு ஆபத்தான பிராந்தியத்தில் தள்ளிவிட்டது. மண்ணுக்குள் புதைந்திருந்த கதிரியக்க மணலை வெளியே எடுப்பதால் அதிக வீரியத்துடன் அது கேன்சர் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் மன வளர்ச்சி குன்றியோர் அதிகம் இருப்பதற்கும் இதுவே காரணம். தோரியத்தின் கதிரியக்கம் விந்தணுக்களை சீர்கெட வைக்கிறது. மரபணுக் கோளாறுகளை ஏற்படுத்துவதே இங்குள்ள கடற்கரைப் பகுதியில் மனவளர்ச்சி குன்றியோர் அதிகம் இருக்கக் காரணம்.
தோரியத்திலுள்ள பீட்டா, காமா கதிர்கள் உடலை ஊடுருவிச் சென்று கேன்சர் ஏற்படுத்தக் கூடியவை. தென்தமிழகக் கடலோர மக்களுக்கு எஞ்சியது இவையே" என்று இந்தியா டுடே தன் கடலோர கேன்சர் கவிதைகள் கட்டுரையை முடிக்கிறது.
இந்தக் கொடுமைகளை இனிமேலும் பொறுப் பதற்கில்லை என்று வெகுண்டெழுந்த மீனவர்கள் தங்கள் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து தங்கள் இனத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்தனர். மீனவ மக்களின் கோரிக்கையை ஒருங்கிணைத்து நெய்தல் மக்கள் இயக்கம் மீனவர் குறை தீர்ப்புக் கூட்டங்களில் பெரும் போராட்டமே நடத்தியது.
மாதந்தோறும் நடைபெறும் மீனவர் குறைதீர்ப்புக் கூட்டங்களில் மணல் ஆலை, கேன்சர் போன்ற பிரச்சினைகளே பெரும்பாலான நேரங்களை எடுத்து விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளும் இந்திய அரிய மணல் ஆலை நிர்வாகம் (ஐசுநுடு) ’கேன்சர் நோய் பரவ நாங்கள் காரணமில்லை’ என்ற ஒரு வரி பதிலையே சொன்னது. மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட கனிம வளத்துரைறயும், சுற்றுச் சூழல் வனத்துரையும் மீன்வளத் துறையும், மணல் ஆலையிடம் அறிக்கை கேட்டு நெருக்கடி கொடுத்த பிறகுதான் மணல் ஆலை நிர்வாகம் ஓர் அறிக்கையை மீனவர் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அளித்தது. அதில், "இந்திய" அரிய மணல் ஆலை கடற்கரை மணலை அள்ளி எடுத்து கனிமங்களாகப் பிரித்தெடுக்கும் பணியை செய்வதன் மூலம் கதிரியக்கம் எதுவும் வெளியாவதில்லை என்று மும்பையிலிருந்து செயல்படும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஆய்வு செய்து சான்றளித்துள்ளது. மணல் ஆலை வளாகத்தில் தங்கியிருந்து தினசரி ஆய்வு செய்யும் மத்திய அரசு நிறுவனமே ஆய்வு செய்து அறிக்கை அனுப்புவதோடு மணல் ஆலை செயல்பாடுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் ஆலை செயல்பாடுகள் மூலம் ரேடியேசன் குறைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. இயற்கையாகவே ரேடியேசன் மிகுந்த கடற்கரை மணலை அகழ்ந்து அதை கனிமங்களாகப் பிரித்தெடுப்பதன் மூலம் ரேடியேசன் குறைக்கப்படுகிறது. எனவே, மணல் ஆலை செயல்பாடுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது" என்று அறிக்கை அளித்தது. 
மணல் ஆலையின் அறிக்கையை மீனவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஐசுநுடுன் அறிக்கை முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். 
1. மணல் ஆலை மணல் அகழ்வு மற்றும் கனிமங்களைப் பிரிப்பதன்மூலம் கதிரியக்கத்தைக் குறைக்கிறது என்றால் கடந்த 100 ஆண்டுகளில் கதிரியக்கம் முற்றிலும் குறைந்து 0 அளவிற்கு வந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அது நான்கு முதல் நாற்பது மடங்குவரை ஆல்பா, பீட்டா, காமாவின் அளவீடுகள் அதிகரித்திருக்கின்றனவே!
2. மணவாளக் குறிச்சி மணல் ஆலை வெள்ளைக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட 10, 20 ஆண்டுகளுக்குள்ளாக கதிரியக்க பாதிப்புகளால் புற்றுநோய் ஏற்படுவதைக் கண்ட வெள்ளைக்காரர்கள் அதற்கு மருத்துவம் செய்ய சர்வதேச கேன்சர் சென்டரை நெய்யூரில் அமைத்தார்களே அது ஏன்?
3. நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனையில் ஐசுநுடு பிளாக் என்று ஒன்றை மணல் ஆலையின் நிதியில் நிர்வகிப்பது எதற்காக?
4. மணல் ஆலைக்கு மணல் எடுத்துக் கொடுக்கும் ஊர்களில் கேன்சர் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு மணல் ஆலை பணத்தில் நெய்யூர் புற்றுநோய் மருத்துவமனையில் இலவச மருத்துவம் பார்க்கப்படுகிறதே! இது எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போலில்லையா?
5. பாபா அட்டாமிக் எனர்ஜி மூலம் மணல்
ஆலையை ஆய்வு செய்பவர்கள் அந்த ஆய்வறிக்கையை மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது, இதுவரை ஒருமுறை கூறி அந்த ஆய்வறிக்கை ஆட்சித் தலைவருக்கு வழங்கப்படவில்லையே! ஏன்?
6. ஆலையின் சுற்றுவட்டாரத்திலுள்ள குடியிருப்புகளில் கதிரியக்கத்தை அளவிடுகளை மானிட்டரை தொங்கவிட்டு கதிரியக்க அளவீடுகளை கண்காணிக்க வேண்டும் என்ற நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை? என்று அடுக்கடுக்கான கேள்விகளை மீனவர்கள் அடுக்கினர். அதற்கெல்லாம் மணல் ஆலை நிர்வாகத்தால் தெளிவான பதில்கள் வழங்கமுடியவில்லை.
"மக்களின் கேள்விகளுக்கு IREL நிர்வாகத் தால் அளிக்கப்படும் பதில்கள் திருப்திகரமாக இல்லை. அதனால் அரசு சார்பில் தனியாக - வெளிப்படையான ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார்.