Namvazhvu
இறைவேண்டல் - 8 ஈசாக்கு: தியான மன்றாட்டு
Wednesday, 17 Jul 2019 07:39 am

Namvazhvu

விறகு வெட்டுவதற்காக வந்திருந்த வரை சந்தித்த முனிவர், உனக்கு வேண்டிய விறகு இங்கே கிடைக்கலாம். ஆனால் காட்டுக்குள் கொஞ்சம் தூரம் சென்றால் உனக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார். முதல் நாள் விறகுவெட்டி கொஞ்ச தூரம் சென்றார். அங்கே சந்தன மரங்கள் கிடைத்தன.
மறுநாள் இன்னும் கொஞ்ச தூரம் சென்ற போது அங்கே தாமிரச் சுரங்கத்தைக் கண்டார். மூன்றாம் நாள் இன்னும் கொஞ்ச தூரம் சென்ற போது வெள்ளிச் சுரங்கத்தைக் கண்டார். அடுத்த நாள் கொஞ்ச தூரம் சென்றபோது தங்கச்
சுரங்கத்தைக் கண்டார். இலட்சக்கணக்கில் சம்பாதித்த அந்த விறகுவெட்டி பெரிய கோடீஸ்வரனானார். ஆண்டவரைத் தியானிக்கத்
தியானிக்க அவரது அளவில்லாத செல்வங் களுக்கு அதிபதியாகிறோம்.
ஈசாக்கு புகழ்பெற்ற தந்தையின் மகன். புகழ் பெற்ற மகனின் தந்தை. ஈசாக்கு தியானம் செய் பவராக வேதம் காண்பிக்கிறது. தியானம் என்றாலே சிலருக்குக் கடினமாக தோன்றலாம். ஆனால் அதுவே இனிப்பான உன்னதமான மன்றாட்டு என்பதைக் காணப்போகிறோம். உரோ. 8:26ன் படி நம் வலுவற்ற நிலையில் நமக்கு மன்றாடுவது எப்படி எனத் தெரியாது. நம்முள்ளிருக்கும் தூய ஆவியானவரே மன்றாடுகிறார். 
நமக்கு மன்றாடத் தெரியாதா? பலர்
எழுதித் தந்த மன்றாட்டுகளைப் படிப்பதில்லையா? நாமே சொந்தமாக மன்றாடுவதில்லையா? எத்தனையோ ஜெப வழிகளைக் கடைபிடிப் பதில்லையா? ஆக நம் பலத்தில், அறிவில் சொல்வதை விட நம் வலுவற்ற நிலையில் ஆவியானவர் மன்றாடுவதே மேலானது.
புனித பவுலுக்கு ஒரு பலவீனம் இருந்தது. இதனை அகற்றுமாறு மூன்றுமுறை அவர் மன்றாடினார்.  ஆண்டவர் தந்த பதில் "உனது வலுவின்மையில்தான் என் வல்லமை முழுவதுமாக விளங்கும். நான் தரும் அருள் உனக்குப் போதும்" (2 கொரி 12:9) "என்ன வலுவின்மையாயிருந்தால் என்ன? நோயோ, பிரச்சினையோ, பாவப் போராட்டமோ எதனைப் பற்றியும் கவலைப்படாதே. அதைப்பற்றி நான் கவலைப்படுகிறேன். நீயோ என் பாதம் பற்றிக் கொள். என் விலாவிற்குள் மறைந்துகொள். மகிழ்ச்சியாயிரு” என்கிறார்.
நாம் ஆண்டவரைத் தேடி வருவது, இந்த உலகத் தேவைகளைப் பெறுவதற்காக அல்ல. நாம் கேட்பதற்கு முன்னரே நம் தேவைகள் அவருக்குத் தெரியும் (மத் 6:8). ஆகவே அவரைத் தேடும்பொழுது (மத் 6:33), அவரில் இன்பம் காணும் பொழுது (திபா 36:4) நம் தேவைகள் யாவும் சந்திக்கப்படும்.
லூக். 11:13-ன் படி நாம் ஆண்டவரைத் தேடிவருவது தூய்மை பெற வேண்டியே. ஆகவே ஆண்டவரது பிரசன்னத்தில் சிறப்பாக வலுவின்மை என்பது பாவப் பலவீனமே.
 கடவுளோடு ஒப்புரவாகாமல் எப்பொழுதும் மன்றாடக் கூடாதல்லவா. ஆகவே நம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். மீண்டும் பாவத்தில் விழுந்து, மீண்டும் மன்னிப்பு வேண்டி இந்த ஒருமுறை, ஒருமுறை இன்னும் ஒருமுறை என்று எத்தனை முறைதான் என் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்பேன் என்று நம் உள்ளம் கலங்க  என் மன்றாட்டில், என் பிரதிக்கினையில் என் வலிமை பூஜ்ஜியமே என்று உணர்கிறோம். இனி நான் மன்றாடுவதற்கே தகுதியில்லை என்று நம் வலுவின்மையை
உணர்கிறோம்.
மீண்டும்        மீண்டும்      விழுவது
என்றால் இறை உறவை முறிக்கும் சாவான பாவம் அல்ல, மாறாக கோபம், வீண்பேச்சு போன்ற குற்றங் களாகும். ஆக பாதாளம்
நோக்கிய நம் வீழ்ச்சிப் பயணத் தில் நமக்குள் ஆழத்திலிருக்கும் பரிசுத்தத்திற்கான ஏக்கத்தால் தூய ஆவியானவரே, நீரே எல்லாம், நீரே தஞ்சம், உம்மையே முழுமனதாய் நேசிக்கி
றேன் என்று ஏங்க தூய ஆவி யானவர் பரிந்து மன்றாடுகிறார்.
நாம் நம்மைப் பற்றி அறிந்திருப்பதை விட, அவரே, நம் உள்ளத்தை நூற்றுக்கு நூறு அறிந்திருக்கிறார். தூய ஆவி
யானவர்  புறா வடிவத்தில் வெளிப்
பட்டவர். புறாவின் கண்களில்
எப்பொழுதும் கண்ணீர் இருக் கும். பெருமூச்சு விட்டுக் கொண்டே
யிருக்கும் ஏழு பண்புகள் உண்டு என்பர்.
நமக்குள்ளிருக்கும் தூய
ஆவியானவர் வேண்டல் செய் யும் பொழுது நமக்குள் மெல்லிய
சிறகடிப்பை உணர்கிறோம். நம் மிடம் குரல் வெளிப்படவில்லை. ஆனால், உதடுகள் மட்டும்
அசைகின்றன. நமக்குள்ளி ருந்து பெருமூச்சு வெளிப்படு
கிறது. கண்ணீர் உகுக்கிறோம்.
இவைகள் நம்மையும் கடந்த வெளிப்பாடுகள். காரணம், ஆவியானவர் செயல்புரிகிறார். இதுவே தியான மன்றாட்டு.
ஆண்டவரையே சார்ந்
திருந்தால்தான் நாம் பரிசுத்த மாக வாழ முடியும் என்ற ஒரே நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டோம். ஆகவே 
1.    ஆண்டவரைச் சார்ந்த நிலை
2.    ஆண்டவர் மேல் தணியாத அன்பு தியானத்தை இனிப் பாக்குகிறது.
அன்னாவுக்குப் பல வருடங்களாகக் குழந்தைப் பேறு இல்லை. பரிகாசம் செய்யப் பட்டார். ஆனால் அன்னாவோ ஆண்டவரையே நம்பினார்; தொடர்ந்து மன்றாடினார். அவர் மன்றாடியபொழுது உதடுகள் அசைந்தன. ஆனால், குரல் கேட்கப்படவில்லை. ஏலி என்ற குருவே அதிசயித்தார். ‘ஆ’ தேவ ஆவியே உனக்குள்ளிருந்து பரிந்து பேசிவிட்டார். உன்மன்
றாட்டு கேட்கப்பட்டுவிட்டது என்றார். அன்னா தன் மனதுக் குள்ளே மன்றாடினார். தன் ஆன்மாவை ஆண்டவரிடம் திறந்து காட்டினார். இதுவே
தியான மன்றாட்டு. ஆவியான வரின் மன்றாட்டு (1சாமு 1:13,15; திபா 119:78).
ஈசாக்கு தியானம் செய்யத்
தேர்ந்து கொண்ட இடம் "வாழ்கிற வரும் காண்கிறவருமான கிணறு" (தொநூ 24:62, 63).
எல்லாராலும் கைவிடப் பட்ட வேளையிலும், ஆகார் ஆண்டவரை நினைத்தார். ஆண்டவரின் தூதர் ஒரு கிணற் றருகே தோன்றி ஆகாரைத் திடப்படுத்தினார். ஆகார் அந்த இடத்திற்கு வாழ்கிறவரும் காண்
கிறவருமானவரின் கிணறு என்று பெயரிட்டார் (தொநூ 16:14).
‘ஆண்டவர் தன்னை தியானிக் கிறவர்களை நினைவு கூறு கிறார்’ (மலா 3:16). என்றும்
வாழ்கிறவர், என்னை வாழ வைப்
பார் என்றும், என் வேதனை களைக் காண்கிறவர், என் பிரச்சினைகளுக்கான பதிலைக் காண்பிப்பார் என்றும் நம்பினார். அவரது ஏக்கப் பெருமூச்சு (தியானம்) வெற்றியாய் மாறினது.
இளைஞர் ஈசாக்கு திரு மணமாவதற்கு முன்பு, தேவ
தூதர் தரிசனமான அந்த இடத்தில் தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கடவுள் அவருக்கு நல்ல மனைவியைக் கொடுத்து ஆசீர் வதித்தார் (தொநூ 24:62-67; திபா 48:3; 119:15,23).
திருமணமானபின் அங்கேயே தன் குடியிருப்பை அமைத்தார். அதாவது ஆண்ட
வரையே அல்லும் பகலும் தியானித்தார். ஆண்டவர் ஆசி அளித்தார் (தொநூ25:11; யோசு 1:8; திபா 1:2, 3; 18:14; 26:4; 54:17; 62:6; 119:48, 97, 99, 148).
அந்தக் கிணற்றருகிலேயே விதை விதைத்தார். அதாவது உழைப்பிலும், முயற்சிகள் யாவற்றிலும் ஆண்டவரையே தியானித்தார். நூறு மடங்கு பலனைப் பெற்றார் (தொநூ 26:12). என் சிந்தையிலும் என்
ஆண்டவரே ஆளுகை செய்வாராக என்பதே ஈசாக்கின் தீர்மானம்.
கடவுள் நம்மை மீட்பார்
என்று அமைதியாகக் காத்திருத் தல் நல்லது (புல 3:26; திபா 46:10). 
வயதான கழுகு பாறை
இடுக்கில் அமர்ந்து தன் சிறகு
களை உதிர்த்துக் காத்திருக்கு மாம். புதிய சிறகுகள் முளைத்து புதுப்பித்துக் கொண்டு பறந்து
செல்லுமாம் (திபா 103:5). ஆண்டவரது பாதம் காத்திருக்கும்
பொழுது புதுவலிமை பெறுகி றோம். 
யாக்கோபு பகல் கனவு கண்டுகொண்டிருந்ததால் ஆடுகளை மட்டுமல்ல; எதிர்
பார்த்த பெண்ணையும் இழந்தார் (தொநூ 31:39, 40; 29:25).
நல்லவேளை பிறகு உண்மையானவரின் பாதங்களைப் பற்றிக் கொண்டார் (தொநூ 32:26).
சமாரியப் பெண் மீண்டும் மீண்டும் தாகத்தைத் தரும் யாக்கோபின்   கிணற்றுக்கே  சென்று
கொண்டிருந்தால், போலிக் கணவர் களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போயிருக்கும். நல்லவேளை தாகம் தீர்க்கும் தெய்வத்தை சந்தித்தாள். வாழ்கிறவரும் காண்கிறவருமான
வருடைய கிணறு, இயேசுவே யன்றோ. நான் இயேசுவைக் காண் கிறேன், இயேசு என்னைக் காண்கிறார் இயேசுவுக்குள் நான்,
எனக்குள் இயேசு என் பதல்லவோ தியானம் - தியான மன்றாட்டு.