Namvazhvu
ஓயாது துரத்தப்பெறும் ஒரு துறவி
Wednesday, 17 Jul 2019 07:55 am

Namvazhvu

இவர் ஒரு கத்தோலிக்க மறை சார்ந்த இயேசு சபைத் துறவி. இவர், ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட மக்கள் பக்கமாய் நின்றார். அவர்தம் வாழ்வாதார உரிமைகளுக்காய் ஓயாது உழைத்தார் என்பதனால் இன்று அரசின் அதிகாரக் கருவிகளால் ஓயாது துரத்தப்படுகிறார். நாளும் பொழுதும் விடாமல் துரத்தப்படும் இத்துறவி பற்றிய ஓர் அறிமுகம் தமிழகத் துறவியர்க்கும், குருக்களுக்கும், ஏன் பொது மக்களுக்கும்கூட ஒரு சான்றாய் அமையும் என்பதால் அத்துறவியோடு கொண்ட நேர்காணலில் சேகரித்த சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாலேயே இக்கட்டுரை.
இவர் வடஇந்தியாவின் பெரும்பான்மை பழங்குடியினர் வாழும் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் சிறிய இயேசு சபை இல்லத்தில் வாழ்கிறார்; தமிழகத்தைப் பிறப்பிட
மாகக் கொண்ட இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் பெங்களூரு இந்தியச் சமூக நிறுவனத்தில் (I.S.I) பணியாற்றியவர். இந்நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில்தான், நாடெங்குமுள்ள சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு, சமூகம் பற்றிய ஆய்வுகளை, ஆழமான அரசியல் நோக்கில் கற்பித்தவர், இவரின்  அர்ப்பணமிக்க சமூகம் பற்றிய கற்பித்தலால், உந்தப் பெற்ற சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரை இன்றும் நாட்டின் பல பகுதிகளில் சந்திக்க முடியும்.
இந்தியாவில் எழுபதுகளில் உருவான இளைஞர் எழுச்சி, சமூக அரசியல் தளங்களில் முழுமையான மாற்றம் வேண்டி எழுந்த போராட்டங்கள், சனநாயக அரசுகளின் தோல்வி, போராடிய சக்திகள் அரசின் வன்கரங்களால் ஒடுக்கப்பட்ட நிலை ஒருபக்கம் இந்த சமூக மாற்றுச் சிந்தனை திருஅவைக்குள்ளும் புகுந்தது. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் தந்த ஆதரவு, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றி உலகெங்கும் பரவிய விடுதலை இறையியல்   கோட்பாடுகள், இந்தியத்
திருச்சபையையும் அசைத்தது. இக்காலக் கட்டம் திருஅவைக் குள்ளும் தீரமிக்க சமூக செயற் பாட்டாளர்கள் தோன்றினர். இந்தப் பின்னணியில் உருவானவர் தான் இந்த இயேசு சபைத் துறவி! இவர் பெயர் Stan Lourdhu Samy, (ஸ்டான் லூர்துசாமி) இந்தியச் சமூக நிறுவனத்தில் பணியாற்றி, களத்தில் தொண்டாற்றுவதற்கான சமூகச் செயற்பாட்டாளர்களை உருவாக்கி  வந்த தந்தை லூர்துசாமி, களப்பணியாற்றத் தெரிந்து கொண்ட இடம் தான் ராஞ்சி. 
ஏன் ஜார்க்கண்ட்?
வட இந்தியாவில் மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களையும் உள்ளடக்கிய இயேசு சபை மாநிலம் (ஞசடிஎinஉந) இம்மாநிலங்களை ஒரு மாநிலத்துக்குள் உள்ளடக்கியமைக்கு காரணம் உண்டு. இம்மாநிலங்களில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை மிகுதி. இதனை Tribal belt என்றும் அழைப்பர். இம்மாநிலங்களில் செறிவான கனிம வளங்கள் உண்டு. இந்தியாவில் கிடைக்கும் 60 சதவீத கனிம வளங்கள் (Minerals இங்குதான் கிடைக்கின்றன).  இம்மாநிலங்களை Tribal belt என்று அழைப்பதோடு Red belt என்றும் அழைப்பர். இக்கனிம வளங்கள் யாருக்குரியனவோ அதனை அனுபவிக்கும், அல்லது துய்க்கும் உரிமை பூர்விகக் குடிகளாம் பழங்குடியினர்க்கு இல்லை. இவ்வளங்களில் இம்மக்களுக்குரிய பங்கு முழுமையாக மறுக்கப்பட்டு வந்த நிலை, இம்மக்கள் வாழ்ந்த நிலம் செழிப்பானது. ஆனால் வேடிக்கை என்னவெனில் வாழ்கின்ற மக்களோ, வறியவர்கள். இயற்கை ஆதாரங்களில் பங்கு கேட்ட மக்கள். கொடூரமான நசுக்கப்பட்டனர். பல பகுதிகளில் வெகுண்டெழுந்த பழங் குடியினரை, தீவிரவாதிகள் அல்லது பயங்கர வாதிகள் என்று முத்திரை குத்தி மாநில அரசுகள் ஒடுக்கின. இரண்டாயிரத்துப் பதின்மூன்றாமாண்டில் (2013) உச்ச நீதி மன்றம் மண்ணின் மீதான மக்களின் அதிகாரத்தை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியது. “நிலத்தின் உரிமையாளர் (owner) எவரோ, அவரே அந்நிலத்தில் கிடைக்கும் கனிம வளங்களுக்கும் சொந்தக்காரர்” என்று தெளிவாகத் தீர்ப்பளித்த பின்பும் என்ன நடக்கிறது? இன்று அரசுகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் தோழமையில், இத்தீர்ப்பை நீர்த்துப் போகும் வகையில் செயற்பட்டு வருகின்றன.
உச்ச நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்ல. 1996-ல் ‘ஞநளய’ எனும் சட்டப்படி, கிராம சபைகளுக்கு சில குறிப்பிட்ட அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. நீர் (jal), வனம் (jungle) நிலம் (jamin) என்ற மூன்றின் மீதும் மக்கள் அதிகாரத்தை உறுதி செய்துள்ள நிலையில், அரசு என்ன சொல்கிறது” நிலத்தில் கிடைக்கும் வளங்கள் அரசுக்குரியவை என்கிறது” அதனால் ஏற்படும் விளைவு என்ன? மக்கள் நிலமற்றவர்களாக மாறும் அவலம்.  மக்கள் ‘னநயீடிளளநன’  ஆகிவிட்ட சோகம். 
என்ன நடக்கிறது?
அரசின் இந்தக் கபடப் போக்கை மண்ணின் சொந்தக்காரர்கள் ஏற்க மறுக்கின்றனர். மக்கள் எதிர்ப்பைக் காட்ட இயக்கமாகின்றனர். எதிர்ப்பின் மூலம், தங்கள் நிலத்தின் கனிம வளங்களை பாதுகாக்க முனைந்துள்ளனர். மக்களின் எதிர்ப்பு வலுவாதல் கண்ட அரசு, அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
எதிர்ப்பியக்கத்திற்கு யார் யாரெல்லாம் முன்னிலை வகிக்கின்றனரோ, அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள், விசாரணையை நடத்தப்பெறாமல் சிறைவாசம் செய்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலச் சிறைகளில் வாடும் இம்மாதிரியான கைதிகளின் எண்ணிக்கை 3000. இங்குதான் தந்தை லூர்து சாமியோ சிறைக் கைதிகளுக்காய், அவர்கள் விடுதலைக்காய் களத்தில் இறங்குகிறார்.
சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை என்ன?
இவர்கள் மீதான வழக்கை துரிதப்படுத்த தடை என்ன? இவ்விசாரணைக் கைதிகளின் நிலையை விசாரிக்க துரனiஉயைட உடிஅஅளைளiடிn ஒன்று அமைக்கப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை உள்ளடக்கி, ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு (ஞஐடு) ஒன்றைத் தந்தை தொடுக்கிறார்.
அரசு மிரண்டது. யார் இவர்? என்று அலசத் தொடங்கியது. விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மையோர் பழங்குடி இனத்தைச் சார்ந்த இளைஞர்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் கூட்டில் இயற்கை வளங்களை சுரண்டும் போக்கை நக்சல்களின் எழுச்சியாக அரசு பார்த்தது. இந்த நக்சல்களுக்குத் துணை போன தந்தை லூர்து சாமியும் நக்சலாகக் காட்டப்பெறுகிறார். மோடி அரசின் புதிய பெயரில், நகர்ப்புற நக்சலாக (ரசயெn யேஒயட) ஆக முத்திரை குத்தப்படுகிறார்.
பீமா கொரெகன் வன்முறை
இதே ஆகஸ்ட் 28 நடந்த பீமா கொரெகன் வன்முறையில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டி, நாடு முழுவதும் மோடி அரசு, நாட்டில் பல அறிவு சீவிகளைக் கைது செய்த செய்தி நம் மக்கள் அறிந்த ஒன்று. வன்முறையைத் தூண்டியவர்களாக, கவிஞர் வராவராவ், சுதாபிரத்வா, அருண் பெரைரா, பெர்னார்டு கொண்சால்வசு, கஷபதம் நிபால்கர் போன்ற நாடறிந்த சமூக செயற்பாட்டாளர்கள், கொடூர அரசால் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் பீமா கொரெகன் வன்முறைக்கு வித்திட்டதோடு, பிரதமர் மோடியைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தனர் என பொய்யான பரப்புரையும் மோடி-ஷா கூட்டணி நிகழ்த்திக் காட்டியது. 
மேற்கண்டோர் கைது செய்யப்பட்ட போது, தந்தை லூர்து சாமியின் ராஞ்சி அலுவலகமும் சோதனை (சுயனை) செய்யப்பட்டது. ஆகஸ்ட்-28ல் ஒருமுறை, இரண்டாவது சோதனை  இவ்வாண்டு ஜுன் 12 ஆம் நாள். இன்று இவரிடம் கைபேசியில்லை கம்யூட்டர் செயற்படா வண்ணம் சிதைக்கப்பட்டுள்ளது. இவர் இன்று நான்கு சுவருக்குள் அடைக்கப்படா ஒரு கைதி.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற் கான அமைப்பு, அகில இந்திய வழக்கறிஞர் அமைப்பு சித்ரவதைக்கு உட்படுத்தப்படும் கைதிகளின் தோழமைக்கான குழு என்ற மூன்று அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர், தந்தை லூர்துசாமி செயற்படுகிறார்.   வதைப்படும் மக்கள் நலனுக்காகக் கட்டப்பட்டிருக்கும் அமைப்புகளை  இன்று அரசு நக்சல் பாரிகளின் ஆதரவு அமைப்பாகப் பார்ப்பதோடு, எப்போது இவரை சிறையில் தள்ளலாம் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு துரத்துகிறது.    
இன்று நாடு முழுவதும் புலம்பெயர்ந்த அகதிகளாய் (Migrants) பழங்குடியினர் அலை கின்றனர். கேரளாவில் மட்டும் 40 இலட்சம் பேர் உள்ளனராம். இப்புலம் பெயர்ந்தோர் அந்தந்த மாநில அரசுகளால், தொழில் அதிபர்களால் சுரண்டப்படுகின்றனர். எல்லா நிலையிலும் பாகு படுத்தப்படுகின்றனர். இவர்களின் நலவாழ்விற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியை தந்தை கேட்கிறார். தமிழ்நாட்டிலும் 10 இலட்சம் பேர் உள்ளனர். தமிழக திருச்சபை இவர்களை எப்போது கண்டுகொள்ள போகிறது? என்ன செய்யப் போகிறோம்?
ராஞ்சியில் பகைச்சா (Bagaicha) என்ற இடத்தில் இவரோடு இணைந்த சிறிய சமூகம் கூடி, என்ன செய்யலாம், என்ற ஒருமித்த (unanimous) முடிவெடுக்கிறது. இவ்வமைப்பு எடுக்கும் முடிவுகள் ஏகோபித்த முடிவாக இருக்குமாம். அதுபெரும்பான்மை என்பதன் அடிப்படையில் அல்ல என்கிறார் இந்தப் புரட்சியாளர். இம்மாதிரியான தலையீட்டை செய்து வரும் தந்தை லூர்துசாமி அவர்களை பின்பற்ற வேண்டாம்; அவரின் பணிபற்றிய செய்தியை யாவது அறிந்துகொள்ள வேண்டாமா?
(குறிப்பு. இந்த நேர்காணல் நடந்த இடத்தை சொல்லுதல் துரத்தப்படும் தந்தைக்கு சிக்கலையும் அடாவடி அரசுக்கு உதவியையும் தரும் என்பதால் சொல்லப்பெறவில்லை)