Namvazhvu
பாகிஸ்தானில் அணை கட்டுவதற்கு ஆயர்கள் நிதி உதவி
Wednesday, 17 Jul 2019 08:35 am

Namvazhvu

பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவை கடந்த ஜூலை 4 ஆம் நாள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானைச் சந்தித்து, அணைக் கட்டுவதற்கான நிதியாக 35, 250 டாலரை வழங்கியது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் கடும் வறட்சியின் காரணமாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி  மையின் சாகிப் நிசார் அணை கட்டுவதற்கு மக்கள் நிதியுதவி வழங்கவேண்டும் என்று சூறாவளிப் பிரச்சாரம் செய்தார்.  இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவை பாகிஸ்தானில் உள்ள பங்குகள், பள்ளிகள் மற்றும்
கல்லூரிகளிலிருந்து நிதி திரட்டப் பட்டு பிரதமர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது பாகிஸ்தான் ஆயர் பேரவை, நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் நலனைப் பெறுவதற்கு உரிய நடக்கவடிக் கைகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, அவர் அதற்கு விரைவில் ஆவண செய்யப் படும் என்று உறுதியளித்தார்.