Namvazhvu
2020-ல் அர்ஜென்டீனாவுக்கு செல்ல விழையும் திருத்தந்தை பிரான்சிஸ்!
Wednesday, 17 Jul 2019 08:42 am

Namvazhvu

அர்ஜென்டீனா நாட்டிற்கு வருகிற 2020 ஆம் ஆண்டு செல்ல விழைவதாக,
திருத்தந்தை பிரான்சிஸ், அர்ஜென்டீனா வில் வெளியாகும் “டுய சூயஉiடிn” என்ற செய்தித்தாளுக்கு, ஜூலை 8, திங்களன்று அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்று, ஜெனித்  கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம், அர்ஜென் டீனா நாட்டின் ஆயர்கள், வத்திக்கானுக்கு மேற்கொண்ட ‘அத் லிமினா’ பயணத்தில், திருத்தந்தையைச் சந்தித்த வேளையில், தான் அர்ஜென்டீனா வருவதற்கு ஆவலாக இருந்தாலும், தன் ஏனைய கடமைகள் அதனை நிறைவேற்ற இடம் அளிக்கவில்லை என்று, திருத்தந்தை, ஆயர்களிடம் கூறியிருந்தார்.
இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், அர்ஜென்டீனா நாட்டின் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறுவதால், அந்தத் தேர்தல் முடிந்தபின், திருத்தந்தை பிரான்சிஸ், அடுத்த ஆண்டு, தன் பயணத்தை மேற்கொள்ள விழைகிறார் என்று “டுய சூயஉiடிn” என்ற செய்தித்தாள் கணித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் தன் விருப்பத்தை மட்டுமே தெரிவித்துள்ளார் என்றும், இனி வரும் நாள்களில், அவரது பயணத்திட்டங்களின் விவரங்கள் வெளி வரும் என்று ஜெனித் செய்தி கூறியுள்ளது.
1936 ஆம் ஆண்டு, அர்ஜென்டீனா வின் புவனஸ் அயிரஸ் நகரில் பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ, 2013
ஆம் ஆண்டு, பிரான்சிஸ் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவ
ராகப் பொறுப்பேற்றபின், தன் தாய் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது, ஏழு ஆண்டுகள் கழிந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.