Namvazhvu
ஜூடோ வழியாக நட்புணர்வை வளர்த்த அருள்பணியாளர்
Wednesday, 17 Jul 2019 08:46 am

Namvazhvu

ஜப்பான் தற்காப்புக் கலையாகிய ஜூடோவைக் கற்று, சாம்பியாவிலும், பல ஆப்ரிக்க நாடுகளிலும் அதனைப் பரப்புவதில் வட அயர்லாந்தின் அருள்பணியாளர் பெரும்பங்காற்றி யுள்ளார். ஆப்ரிக்காவில் நட்புணர்வை வளர்ப்பதற்கு, ஜூடோ பயிற்சி முறையைப் பயன்படுத்தி உழைத்ததற்காக, ஜப்பானின் உயரிய விருது வழங்கப்பட்டு வட அயர்லாந்தின் அருள்பணியாளர் ஒருவர் ஜூடு மெக்கன்னா கௌரவிக்கப் பட்டுள்ளார்,.
சாம்பியா நாட்டில், 50 ஆண்டு களாக மறைப்பணியாற்றிவந்த வட அயர்லாந்து கப்புச்சின் துறவு சபை அருள் பணியாளர் Jude McKenna அவர்களுக்கு, Order of the Rising Sun என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ள ஜப்பான் அரசு, அருள்பணியாளரின் ஜூடோ பயிற்சிப் பணி, ஆப்ரிக்காவில் நட்புணர்வை வளர்ப்பதற்கும், ஜப்பான் கலாச்சாரத்தை பரப்புவதற்கும் உதவியுள்ளது என தெரிவித்தது.
குத்துச் சண்டையில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்த அருள்பணி ஜூடு, ஜப்பான் தற்காப்புக் கலையாகிய ஜூடோவைக் கற்று, சாம்பியாவிலும், பல ஆப்ரிக்க நாடுகளிலும், அதனைப் பரப்புவதில் பெரும்பங்காற்றியுள்ளார். Order of the Rising Sun என்பது, 1875 ஆம் ஆண்டு ஜப்பானில் உருவாக்கப்பட்ட முதல் தேசிய விருதாகும்.