ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்
திருத்தந்தை பிரான்சிஸ் மார்ச் 18 ஆம் தேதி புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், மார்ச் 20, 21, அதாவது வருகிற வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில், ஆண்டவரோடு 24 மணி நேரமும் செபத்தில் செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்கி, ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்று, உலகில் கொள்ளை நோய் பாதிப்பைத் தடுப்பதற்கு உதவுமாறு, விண்ணப்பம் ஒன்றை விடுத்தார். தவக்காலத்தில், இந்த வேண்டல் வேளையில், ஒப்புரவு அருளடையாளத்தை அணுகுங்கள், தொற்றுநோய் பரவல் காரணமாக, வேண்டல் செய்ய முடியாத நாடுகளில் வாழ்வோர், தனிப்பட்ட இறைவேண்டல்கள் வழியாக இதற்கு உதவட்டும் எனவும் திருத்தந்தை கூறினார்.
“ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற பக்தி முயற்சியை, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, ஏற்பாடு செய்து நடத்தியது. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுக்கு முந்திய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரு நாள்களிலும், உலகிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஓர் ஆலயம், 24 நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த இறைவேண்டல் முயற்சியில், நம்பிக்கை யாளர்கள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறவும்,
திருத்தந்தையுடன் ஆன்மிக ஒன்றிப்பில், மன்றாடவும் அழைக்கப்படுகின்றனர். இது தமிழகத் திலும் கடைபிடிக்கப்பட்டது.