செபமாலை முயற்சியில் அனைவரும் இணைவோம் -
“நம் ஒவ்வொருநாள் வாழ்வின் உறுதியான செயல்பாடுகளையும், மறையுண்மையின் உறுதியான செயல்பாடுகளையும் வாழும் வரத்திற்காக, புனித யோசேப்பு திருநாளன்று மன்றாடுவோம். மறையுண்மையில் நுழைவ தென்பது, கனவு காண்பது மட்டுமல்ல, அது, ஆராதனை செய்வதும் ஆகும்“ (மார்ச் 19- (1)).
“பணிவான, அதே வேளை, நடைமுறைக்கேற்ற அடிகளை எடுத்துவைப்பதன் வழியே, நம்பிக்கை முன்னோக்கிச் செல்கிறது” (மார்ச் 19- (2)). “அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றிரவு 9 மணிக்கு, இத்தாலி முழுவதும் இணைந்து செபிக்கும் செபமாலை முயற்சியில் அனைவரும் பங்கேற்போம். நோயுற்றோரின் நலமான மரியாவும், நம்பிக்கையில் நிறைந்த புனித யோசேப்பும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக (மார்ச் 19- (3))
“தொற்றுக்கிருமியால் இறந்தோருக்கென இணைந்து செபிப்போம். சிறப்பாக, இந்த நெருக்கடி நேரத்தில் பிறருக்கு நலம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு, அதனால் தங்கள் உயிரை இழந்த பணியாளர்களுக்காக வேண்டிக்கொள்வோம்“ (மார்ச் 18(1))
“நம்மை நெருங்கியிருக்கும் இறைவன், நாமும் மற்றவரோடு நெருங்கியிருக்கும்படி விழைகிறார். தற் போதைய தொற்று ஆபத்தினால் ஒருவரோடு நெருங்கி
யிருக்க இயலாவிடினும், செபம், உதவிகள் வழியே மற்றவர்களோடு நெருங்கியிருக்கும் பழக்கத்தை நாம் புதுப்பித்துக்கொள்வோம்“ (மார்ச் 18(2))
“கடவுளின் கருணை நம் மகிழ்வாக, நம் விடுதலையாக உள்ளது. நாம் மன்னிப்புப் பெறவேண்டிய தேவை இருப்பதால், நாம் மன்னிக்கவும் தேவை உள்ளது” (மார்ச் 18(3)
“இயேசுவின் உவமை (மத்தேயு 18:23-35)
நமக்குத் தெளிவாகக் கூறுவது இதுதான்: மன்னிப்புக்கேட்பது, மன்னிப்பு வழங்குவது இவ்விரண்டும் பிரிக்க முடியாதவை, இணைந்து செல்பவை. மன்னிப்பது, விண்ணகம் செல்வதற்கு ஒரு நிபந்தனை” (மார்ச் 18 (4))
“கடவுளால் அன்புகூரப்படுவதற்கு நம்மையே அனுமதிப்போம், அவ்விதம், நாம் அன்பை வழங்க இயலும். உயிர்ப்பை நோக்கி நடந்து செல்ல எழுந்து நிற்போம்“ (மார்ச் 18 (5))
“இந்நேரத்தில் தங்களின் உள்ளத்தில் மிகுந்த தனிமையை அனுபவிக்கும் வயது முதிர்ந்தோருக்காக, ஒன்றுசேர்ந்து செபிப்போம், இவர்கள், பல நேரங்களில், அச்சத்தால் நிறைந் துள்ளனர். அவர்கள் நமக்கு ஞானத்தையும், வாழ்வையும், நம் கதையையும் வழங்கியவர்கள். நம் செபங்களால் அவர்களுக்கு அருகில் இருப் போம்” (மார்ச் 17)