உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இறைவன் மக்களைக் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 15, ஞாயிறு மாலை, உரோம் நகரிலுள்ள இரு கோவில்களுக்குச் சென்று இறைவேண்டல் செய்தார். ளுயடரள ஞடியீடிடi சுடிஅயni, அதாவது, ‘உரோம் மக்களின் பாதுகாவல்’ என்ற பெயரில், உரோம் நகரின், மேரி மேஜர் பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும், அன்னை மரியாவின் திருஉருவப்படத்திற்கு முன்னர், மக்களுக்காக மன்றாடிய திருத்தந்தை பிரான்சிஸ், அதன் பின்னர், வயா டெல் கோர்சோ (ஏயை னநட ஊடிசளடி) என்ற சாலையில் உள்ள புனித மார்செல்லா (ளுயn ஆயசஉநடடடி) என்ற கோவிலுக்குச் சென்று செபித்தார். முக்கியத் தேவையின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற அரசுக் கட்டுப்பாட்டினால், இத்தாலிய சாலைகள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி இருந்த நிலையில், வயா டெல் கோர்சோ சாலையில், சிறிது தூரம் நடந்தே சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித மார்செல்லா கோவிலை அடைந்தார்.
மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டுள்ள உரோமை மக்களின் பாதுகாவலி அன்னை மரியாவின் திருஉருவப்படத்திற்குமுன் செபித்ததுபோலவே, புனித மார்சல்லோ ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமை மிக்க இயேசுவின் திருச்சிலுவை முன்னரும் திருத்தந்தை செபித்தார். உரோம் நகரை, பெரிய கொள்ளைநோய் தாக்கிய வேளையில், இச்சிலுவைதான், 1522 ஆம் ஆண்டு, நகர் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு, கொள்ளை நோய் பரவலைத் தடுக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.