அன்புள்ள குருக்களே, துறவியரே, இறைமக்களே!
உங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.
இவ்வாண்டு புனித வாரம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.
`தனித்திருந்து, வீட்டில் குடும்பமாக செபித்து, தொலைக்காட்சி வழியாக திருப்பலி கண்டு' கொண்டாடி வருகின்றோம்.
இவ்வேளையில் 3 கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
1. நம்மைச் சுற்றியுள்ள ஏழைகள், கைவிடப்பட்டோர், முதியவர்கள், விதவைகள், அனாதைகளுக்கு நம்மாலான உதவிகளை (உணவு கொடுத்தல், பண உதவி செய்தல், முகக் கவசம், சோப்பு போன்ற பொருள்களை கொடுத்தல்) அரசு விதிகளைப் பின்பற்றி செய்வோம்.
2. பாஸ்கா திருவிழிப்பு இரவு அன்று (11.04.2020) வீட்டிற்கு முன் மெழுகுதிரி அல்லது விளக்கு ஏற்றி வைத்து பொருத்தமான உடைகளை அணிந்து குடும்பமாக செபிப்போம்.
3. ஈஸ்டர் பெருவிழா அன்று (12.04.2020) மதியம் 12 மணிக்கு உயிர்த்த ஆண்டவர் இவ்வுலக மக்களை ஆசீர்வதித்து கொரோனா நோயிலிருந்து அனைவரும் விடுபட்டு வெளியே வரவும் இந்த தொற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்படவும் இந்தியத் திருச்சபை முழுவதும் செபிக்க அழைக்கப்பட்டுள்ளது. நாமும் செபிப்போம்.
நன்றி!
அனைவருக்கும் செபம் கலந்த ஆசீர்