"நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும்" என்று எபிரேயருக்கு எழுதப் பட்ட திருமுகத்தில் கூறப்பட்டுள்ள சொற்களை (எபி. 3:7-14) ஓர் எச்சரிக்கையாக விடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 17 ஆம் தேதி காலை வழங்கிய மறையுரையில், நமது உள்ளம் கடினமாவதைக் குறித்துப் பேசினார்.
இன்றையத் திருஅவையில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், ஆயர்கள் அனைவருக்குமே, இறைவனைவிட்டு விலகிச் செல்
லும் ஆபத்து உள்ளது என்பதை,திருத்தந்தை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
இறைவனைவிட்டுப் பிரிந்து,தன்னையே மூடிவைக்கும் இதயம்,
கடினமாகிப் போகும் என்று தன்மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் இந்நிலையி
லிருந்து மீண்டும் வெளியேறுவது, நடக்கப் பழகும் குழந்தை, தடுமாறி விழுந்து, எழுந்து, நடப்பது போன்றது என்ற உருவகத்தைப் பயன்படுத்தி விளக்கினார்.
கடினமாகும் இதயங்கள் கருத்தி யல்களை வளர்த்துக்கொள்ளும் என்ற எச்சரிக்கையை தன் மறையுரையில் வழங்கிய திருத்தந்தை, இறைவனின் வார்த்தையும், தூயஆவியாரின் அருளும் கருத்தியல்கள் அல்ல என்பதை வலியுறுத்திக் கூறினார்.