Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் காவல்துறையினருக்கு நன்றி கூறிய திருத்தந்தை
Wednesday, 13 Mar 2019 07:24 am
Namvazhvu

Namvazhvu

வத்திக்கான் காவல்துறையினருக்கு நன்றி கூறிய திருத்தந்தை

 

வெயில்-மழை, இரவு-பகல் என்று பாராமல் 24 மணி நேரமும்  வத்திக்கான் நகருக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகளை, ஜனவரி 17 அன்று சந்தித்து, அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் நன்றியையும், பாராட்டுகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் காவல் துறையினரைச் சந்திப்பது தனக்குக் கிடைக்கும் மகிழ்வான வாய்ப்பு என்றும், இத்துறையைச் சார்ந்த அனைவருக்கும், புத்தாண்டு

முழுவதும், மனிதமும், கிறிஸ்தவ மும் மிகுந்த நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை தன் வாழ்த்துரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மனிதரால் எண்ணிப்பார்க்க இயலாத அளவு இறைவன் நம்மை

நெருங்கி வந்துள்ளார் என்பதை, நாம் அண்மையில் கொண்டாடி முடித்த கிறிஸ்து பிறப்பு, மற்றும் திருக்

காட்சி திருவிழாக்கள், நமக்குச் சொல்லித்

தருகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ்

அவர்கள், இந்த நெருக்கத்தை நம் அயலாவருடன், குறிப்

பாக, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருடன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும், இத்திருவிழாக் காலம் நமக்குச் சொல்லித் தருகிறது என்று கூறினார்.

இத்திருவிழா காலத்தில், இறைவனை நெருங்கி

வரும் நோக்கத்தில், திருப்பயணிகள் வத்திக்கானையும், புனித பேதுரு பசிலிக்காவையும் தேடி வந்தபோது, அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்த காவல் துறையினர் ஒவ்வொருவரையும்தான் பாராட்டு

வதாகத் திருத்தந்தை எடுத்து ரைத்தார்.

காவல்துறையினர் அனைவரையும் அவர்

களது குடும்பத்தினரை யும் அன்னை மரியாவின்

பாதுகாப்பில், தான் ஒப்படைத்து,

ஆசீர் வழங்குவதாகக் கூறியத்திருத் தந்தை பிரான்சிஸ்  அனைவரையும் தனக்காகச் செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.