கோவிட் 19 என்னும் கொரோனா நோய்த்தோற்றால் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் ரூபாய் 68, 750 மதிப்புள்ள இரண்டாயிரம் முகக்கவசங்களையும் 25 லிட்டர் கிருமிநாசினியையும் தஞ்சை மாநகராட்சி ஆணையர் திரு.ஜானகி ரவீந்திரன் அவர்களிடம் நேற்று திங்கட்கிழமை (13.04.2020) ஒப்படைத்தார்.
மேலும் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் எழுதிய கடிதத்தில் அருளானந்தர் நகரில் சேவை செய்யும் புனித மேரி மருத்துவமனை (அவர் லேடிஸ் மருத்துவமனை) கோவிட் 19 ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசின் அனுமதி பெற்றுள்ளது என்றும். இங்கு 75 படுக்கைகள் இதற்காக தயாராக உள்ளன என்றும் தெரிவித்தார்.
இச்சிறப்புப் பணிக்காக, தயாராக உள்ள ஒன்பது மருத்துவர்களுக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் சம்பளம் உட்பட தற்காப்பு கவச உடைகளுக்காக ரூ.24, 61000 -யை தஞ்சை மறைமாவட்ட சொசைட்டி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். தஞ்சை மறைமாவட்ட ஆயரின் உதவியை ஏற்றுக்கொண்ட ஆணையர் ஆயருக்கும் மறைமாவட்டத்திற்கும் நன்றி தெரிவித்தார். (செய்தி மூலம் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)