ஏப்ரல் 16 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நேரத்தில் உரோம் மத்திய இரயில் நிலையத்திற்கு அருகில் தங்கியிருக்கும் வீடற்ற மக்களைச் சந்தித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறுதலைத் கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி தெரிவித்தார்.
திருத்தந்தையின் தர்மச் செயல்களை ஆற்றும் கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்கள், உரோம் மத்திய இரயில் நிலையப் பகுதியிலுள்ள மார்சாலா சாலைக்குச் சென்று, சில தன்னார்வலர்களின் உதவியுடன், தெருவில் வாழ்கின்ற மக்களைச் சந்தித்து, திருத்தந்தையின் சார்பில், சில தற்காப்புப் பொருள்களை வழங்கினார்.
கொரோனா கிருமி தொற்றாமல் தடுப்பதற்கு உதவும், படுக்கைகள், சோப், உணவு, முகக் கவசங்கள் உட்பட, பல பொருள்களை வழங்கினார்.