கொலம்பியாவில் நிகழ்ந்த அண்மை வன்முறைகளும், மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோர் மூழ்கி இறந்ததும், இதயத்தில் வலி தருகின்றன என்று சனவரி 20 ஆம் தேதி ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் தன் கவலையை வெளியிட்டார்.
கொலம்பியாவின் பொகோட்டா தேசியக் காவலர் கல்லூரி மீது தாக்குதல் நடத்தியதில், 21 பேர் உயிரிழந்து, 68 பேர் படுகாயமடைந்தது குறித்தும், மத்தியதரைக்கடலில் 117 பேர், 53 பேர் என, புகலிடம் தேடுவோரை ஏற்றி
வந்த இரு கப்பல்கள், அண்மையில் மூழ்கியது குறித்தும் கவலையை வெளி யிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர் களின் குடும்பங்களுக்காகதான் செபிப்பதாகத் தெரிவித்தார்.