Namvazhvu
பேராயர் யுர்க்கோவிச் அறிவுசார் சொத்து விவகாரத்தில் நன்னெறி கடைப்பிடிக்கப்பட வேண்டும்
Tuesday, 12 May 2020 04:43 am
Namvazhvu

Namvazhvu

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், மே 07, வியாழனன்று, அறிவுசார்ந்த சொத்து உலக நிறுவனம் (WIPO) நடத்திய 60வது கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் அறிக்கை சமர்பித்த, திருப்பீடத்தின் .நா. பிரதிநிதி பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஒலிபரப்பு நிறுவனங்கள், மரபணு வளங்கள், பாரம்பரிய அறிவு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றைப் பாதுகாப்பது குறித்த ஒப்பந்தங்களில் நிலவும் முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிட்டார்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், முக்கிய பணியாற்றிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், அறிவுசார்ந்த சொத்து உலக நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் சிலவற்றில், திருப்பீடத்தின் நிலைப்பாடு பற்றி எடுத்துரைத்தார்பொதுநலனை முன்னிட்டு, இலக்கியம், அறிவியல் அல்லது கலைப்படைப்புக்களில், மேற்கொள்ளப்பட்டுள்ள காப்புரிமை நடவடிக்கையை திருப்பீடம் ஏற்கிறது என்றும், இதில், மனிதரைத் தனிப்பட்ட முறையில் ஈடுபடுத்தும், அறநெறி மற்றும், சமுதாயக் கூறுகள் நோக்கப்படவேண்டும் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

தற்போதைய கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியிருக்கும் நெருக்கடி, அறிவுசார் சொத்தின் சிக்கல்களை அறிவிக்க வேண்டிய அவசியத்தையும், புதியனவற்றைப் படைக்கும் படைப்பாற்றலையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், WIPO நிறுவனத்தின் கோவிட்-19 குறித்த புதிய ஆய்வு வசதிகள், தொழில்நுட்ப அறிவுக்கு முன்வைத்திருக்கும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் உலகில் இடம்பெறும் மாற்றங்கள் மற்றும், செயற்கை அறிவு முன்வைக்கும் புதிய சவால்களுக்கு ஏற்றாற்போல், உலக அறிவுசார் சொத்து நிறுவனமும், அதன் பணிகளும், வரும் ஆண்டுகளில் இடம்பெறவேண்டியுள்ளன என்பதையும் பேராயர் சுட்டிக்காட்டினார்.

இந்நிறுவனத்தின் காப்புரிமை அமைப்புமுறை, படைப்பாற்றல் மற்றும், புதியனவற்றைப் படைப்பவர்களுக்கு வெகுமதியளிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கிறது என்றும், இதற்கு, உலகளவில் தரமான கல்வி வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இந்நிறுவனம் நாடுகளை ஊக்குவிக்கவேண்டும் என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.