தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன. தமிழக அரசி யல் களம் இதுவரை கண்டிராத பரபரப்போடு இந்தமுறை தேர்தலை எதிர்பார்த்திருக்கிறது.
‘கலைஞர்’ கருணாநிதி ‘அம்மா’ ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இந்த முறை அரசியல் ஆட்டத்தில் இல்லாத நிலையில் தமிழகம் தேர்தலை சந்திக்கப் போகிறது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.வினரிடம் பரவலாக இருந்துவந்த பய (பக்தி?) உணர்ச்சிஇப்போது முற்றிலுமாக நீங்கி விட்டது.
கட்சி தாவ நினைப்பவர்களும்,காலை வாரி விடத் துடிப்பவர்களும் ‘உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு’ போல காலநேரம் பார்க்கதயாராகி விட்டார்கள். ‘வந்தவனைக்கேட்டால் சென்று விடு என்பான்...’ என்ற திரைப்படப் பாட்டு போல, ஒரு கூட்டம் அங்குமிங்குமாய் ஆட்டம் போடும் காலம் வந்து விட்டது.
இன்றைய தமிழக அரசியல் களத்தில் அரசியல் தன்மையற்ற, ‘கொள்கை குறிக்கோள்’ என்றகவலைகள் ஏதுமின்றி ஏராளமானகுழுக்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன.
மாநிலத்தின் நலன் குறித் தான எந்த அடிப்படை நோக்கமும் இன்றி செயல்பட தொடங்கி இருக்கும் இந்த கும்பல், எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று கூட்டணிக் கணக்கு போட தயாராகி வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் தற் போது இடம்பிடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம் யூனிஸ்ட் கட்சிகள் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் (2014) கடைசி நேரத்தில் விலகி தேர்தலில் தனித்துபோட்டியிட்டன.
அப்போது தி.மு.க. கூட்டணி யிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது.
தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளுக்கும் அப்படியொரு தீவிரமான இலட்சியவாதம் என்றுமே இருந்தது இல்லை. இரண்டு திரா விடக் கட்சிகளுக்குமே பதவி வெறியும், பணம் சம்பாதிக்கும் தந்திரமும்
தவிர வேறெந்த கொள்கையும் இல்லை என்பதைக் கடந்த காலவரலாறுகள் நமக்குச் சொல்லுகின்றன. இல்லையெனில், திராவிடக் கட்சிகள், ‘காவிக் கட்சியான பா.ஜ.க.
வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராகி இருக்குமா?‘பகுத்தறிவு’, ‘நாத்திகம்’ என்றெல்லாம் மேடை தோறும் முழங்கி வந்த தி.மு.க. எந்தக் கூச்சமும் இன்றி பாசகவுடன் கூட்டணி வைக்க முடிந்திருக்கிறது. மத்தியில் அமைச்சர் பதவி வேண்டி எந்த சங்கடமும் இன்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்திருந்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்த லில் ‘லேடியா? மோடியா?’ என்று வாக்காளர்களிடம் கேட்ட அ.தி.மு.க, முப்பத்தேழு தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகி நின்றது.
இன்று ‘அம்மா’ (ஜெயலலிதா) உயிருடன் இல்லை. இனியும் ‘அம்மா அம்மா’ என்றால் அது ‘சும்மா’
என்று ஆகிவிடும்.
ஒரு விசயத்தை இப்போது உங்களது நினைவிற்குக் கொண்டு வர நான் விரும்புகிறேன்.
குஜராத் கலவரத்தில் (2002)ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார் கள். ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது இந்த நிகழ்வு.
அப்போது நாட்டின் பிரதம ராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்த போதிலும், அதே இந்துத்துவ கொள்கையைக் கொண்ட குஜராத் முதல் அமைச்சர் மோடியைச் சாடினார்.
‘மோடி ராஜ தர்மத்தையே மீறி விட்டார். எனவே அவர் பதவிவிலக வேண்டும்’ என்று பகிரங்க மாக முழக்கமிட்டார் வாஜ்பாய்.
ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. எடப்பாடியோ மோடியின் காலடிகளில் விழுந்து கிடக்கிறார். பொது நீரோட்டத்தைச் சார்ந்த அ.தி.மு.க., மத சாதிய அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க.வை இருந்த இடம் தெரியா மல் ஆக்கியவர் ஜெயலலிதாதான்.
தமிழக அரசியலில் பா.ஜ.க. வுக்கு ஓர் இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை. இருந்தும், அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்ற செய்திகள் நம் காதில் விழுகின்றன.
நான் தெரிந்து கொண்ட வரையில், சுமார் அதை நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து தமிழகத்தை ‘சுடுகாடாக’ ஆக்கிவரும் திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டால் போதும் என்ற நிலைக்கு இப்போது தமிழக மக்கள் தள்ளப் பட்டு விட்டார்கள். இதற்கான முடிவு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும்.
‘நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் நம்மால் நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள் நமது நலன்களுக்காகச் செயல்பட வேண்டியவர்கள்’ என்ற விழிப் புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும். அதுவே, மாற்று அரசியலுக்கான சாத்தியங்களை உருவாக்கக் கூடும்.தமிழக மக்கள் எப்போதும் ஏமாளி களாகவே இருக்கமாட்டார்கள்.
தி.மு.க.வை முறியடிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க நேருமாயின், அது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த இருபது ஆண்டு களாக தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட பா.ஜ.க. தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் பெற முடிந்ததில்லை. வரவிருக்கும் தேர்தல் மூலம் நல்லதொரு படிப்பினையை இந்தக் கட்சிகள் பெற்றுக் கொள்ள வழி பிறக்கும்.
ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் நிரப்பமுயன்றது. தமிழக மக்கள் ஒரு வேளை எதிர்பார்த்திருக்க முடியாதஒன்றாக இருக்கக்கூடும். அ.தி.மு.க.
விலிருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தனிக்கட்சி
தொடங்கியது. வரும் தேர்தலில்அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கக் கூடும். இதனைஉணர்ந்து கொண்ட சிலர், இந்தஇரண்டு கட்சிகளையும் ஒட்டவைக் கும் முயற்சியை மேற்கொண்ட போதிலும் அது கைகூடும் என்று சொல்வதற்கில்லை.
இந்த நிலைமை தி.மு.க. வுக்கு இல்லை. கருணாநிதி தனதுமரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரே, தி.மு.க.வின் செயற் குழு கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து விட்டார். தனக்குப் பிறகு தனது வாரிசுகளில் நம்பகத் தன்மைக்குப் பாத்திரமான ஸ்டாலினை அறிமுகப் படுத்திவிட்டார். தனக்குப் பிறகு தி.மு.க.வைக் காப்பாற்றக் கூடியவர் ஸ்டாலின்தான் என்பதில் அவர்
பிடிவாதமான நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னுடைய மரணத்திற்குப்பிறகு கட்சியை வழிநடத்துபவராக வும், தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்பவராகவும் ஸ்டாலின் மட்டுமேவிளங்கிட முடியும் என்று அவர் மிகச் சரியாகவே அறிந்திருந்தார்.
இதன் காரணமாக கட்சியில் அதிகாரம் பெற்றிருந்த அழகிரியோ, கனிமொழியோ வாய் திறக்க வழி இல்லாமல் போயிற்று.இப்போது ஸ்டாலின் ‘அரியணை’ ஏற தயாராகிக்கொண்டிருக் கிறார். காரணம் தி.மு.க.வில் ஸ்டாலினுக்குச் சவாலாக விளங்கக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை.
தற்போது தமிழகத்தில் மாற்று அரசியலைக் கட்டமைக்க தயாராகிக் கொண்டிருக்கும் ஸ்டாலின், திராவிட
இயக்கத்தின் தனி அடையாள மாக இருந்து வந்த பல கோட்பாடுகளை மாற்றி அமைத்திட முடியுமா என்ற சிந்தனையில், கட்சியில் செல்வாக்கு பெற்றிருக்கும் அழகிரி,மாறன் போன்ற தன் உறவினர் களோடு முரண்பட வேண்டிய கட்டாயம் எதிர்காலத்தில் நிகழக்கூடும். அதனைக் கடந்துவர முடியாத நிலைமை உருவாகக் கூடுமேயானால் அவரால் எடப் பாடியை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் போய்விடும்.
தேர்தலின்போது மாத்திரமே தலை காட்டும் வைகோவின் ம.தி.மு.க., கடந்த தேர்தலில் பா.ஜ.க.கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் மண்ணைக் கவ்வியது. அதுபோலவே, தே.மு.தி.க.வும் பா.ம.க.வும் பா.ஜ.க. கூட்டணியில் கைகோர்த்து நின்றன. பா.ஜ.க.வும், பாமகவும் கடந்த தேர்தலில் தலா ஒரே ஓர் இடத்தை மட்டுமே பெற முடிந்தது. இதைவிட மிகப் பெரிய அவமானம் இந்த கட்சிகளுக்கு வேறுஎதும் இருக்க முடியாது.
இப்போது, வட இந்திய மாநிலங்களில் மோடி அலை ஓய்ந்துவிட்டது. இந்த நிலைமையில், தமிழகத்தில் அ.தி.மு.க. வுடன் கைகோர்த்து தி.மு.க.வை ஒழித்துக் கட்டிவிட பா.ஜ.க. மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, பா.ஜ.க.வினர் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் உருவாக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே பேசி வருகிறார். எப்படியிருப்பினும், தமிழகத்தில் பாசக ஒரு இடத்தைக் கூட பெற வழியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் சென்னையில் நடந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ‘இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான்’ என்பதாக ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். இதனை மற்ற எதிர்க் கட்சித் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இத்தகைய வெகுமுன்கூட்டிய கணிப்புகள் பெரும்பாலும் தோல்வி யையே தழுவியிருக்கின்றன என்பதை ஸ்டாலின் உணர்ந்ததாகத் தெரியவில்லை.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கும் நிலையில், அண்மையில் மக்கள் நீதி
மய்யம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் கமல் ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராகி வருகிறாராம்.ஆனால் அதே நேரத்தில் பா.ஜ.க.வின் வந்துஇணைந்துகொள்ள வேண்டுமாய் நடிகர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகுதான் நடிகர் ரஜினிக்கும், கமலஹாசனுக்கும் ஆட்சி அதிகார ஆசை முளை விட்டிருக்கிறது. நடிகர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தது போல, தாங்களும் பதவிக்கு வந்து விடலாம் என்று இங்குள்ள எல்லா நடிகர்களுக்கும் அரசியல் மோகம் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் பிழைக்கத் தெரிந்த ரஜினி, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, தான் அரசியலில் குதிக்கப் போவதாகப் ‘பூச்சாண்டி’ காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதுவரையிலும் உலக நாயகனாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த கமல், தேர்தல் அரசியலில் ரஜினியை முந்திக் கொண்டார்.
⊃1;கதாநாயகனாக நடிக்க முடிந்த வயது முடிவுக்கு வந்த பிறகுதான், இந்த இரு நடிகர்களுக்கும், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று சூப்பர் ஸ்டார் சொல்லி வாய் மூடுவதற்குள்ளாக கமல் போரையே தொடங்கிவிட்டார்.
ஜெயலலிதா கருணாநிதி ஆகிய மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத நிலையை எண்ணிப் பார்த்தே, இந்த இரண்டு பிரபல நடிகர்களும் தமிழக அரசியலில் பிழைப்பு நடத்த நினைத்திருக்கக்கூடும். கடந்த அரை நூற்றாண்டு காலமாக வேறு எந்தக் கட்சிக்கும் முதல்வர் நாற்காலியை விட்டுக் கொடுக்காத திராவிட கட்சிகளின் (தி.மு.க - அ.தி.மு.க) செல்வாக்கு இந்த முறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று இந்த நடிகர்கள் இருவரும் நம்புகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகே, அ.தி.மு.க.வின் செயற்பாடுகளை இந்த நடிகர்கள் வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினார்கள். ஜெயலலிதாவின் காலத்தில் இவர்கள் முதுகெலும்பில்லாத கோழை களாகவே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
அரசியல் அதிகாரத்தில் எல்லையற்ற வலிமையை மிக நன்றாக உணர்ந்திருந்த காந்தியும் பெரியாரும் தேர்தல் அரசியலில் அமருவதை தவிர்த்தே வந்திருக் கிறார்கள்.
‘அர்ச்சகன் பொறுக்கித் தின்ன தேர்தல், அரசியல்வாதி பொறுக்கித் தின்ன அரசியல்’ என்று பெரியார் மேடை தோறும் முழங்கி வந்தார். ஆனால்கருணாநிதியோ எம்.ஜி.ஆரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக அப்போது இந்திரா
காந்தியுடனும் கைகோர்த்துக் கொள்ளத் தயாரானார். இந்த போக்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப்போக்கே இதுவரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. முதல் 10 ஆண்டுகள் வரை எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க.வும் அடுத்த 30 ஆண்டுகள் வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கருணாநிதிக்கு தலைவலியாக இருந்து வந்தது. அதிகார பீடத்தில் அமர்ந்துகொள்ள போட்டி யிட்ட கலைஞரோ பல அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து வந்தார்.
கருணாநிதியால் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் வெற்றிடத்தை தனது ராஜதந்திர நடவடிக் கைகளால் ஸ்டாலின் அரசியலில் முந்திச் செல்லக் கூடும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த எண்ணம் அவ்வளவு எளிதில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை ரஜினி. கமல் அரசியலில் காலெடுத்து வைத்ததன் மூலம் நிருபணம் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஸ்டாலினுக்கு உண்டாகி இருக்கக்கூடும்.
கமலின் அரசியல் தமிழ் சினிமாக்களில் மட்டுமின்றி இந்திய சினிமாக்களிலும் முக்கிய இடம் பெற்றுள்ளதை எவரும் மறுத்திட முடியாது.
‘காந்தியைப் படுகொலை செய்தது இந்துத்துவா மதவாதம்தான்’ என்பதை அவரது ஹேராம் படம் வெளிப்படையாகவே சொல்லியிருந்தது. அவரது ‘ஹேராம்’ இந்துத்துவ எதிர்ப்பை மையப்படுத்திய படம் என்றால், ‘அன்பே சிவம்’ என்ற அவரது திரைப்படம் முதலாளித்துவ எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தது. கமல் பிறப்பில் பார்ப்பனராக இருந்தபோதிலும், சுயசாதியினரையும் அவர் விமர்சிக்கத் தவறியதில்லை. ‘அவ்வை சண்முகி’ என்ற அவரது திரைப்படத்தில் அவரது பாத்திரம் ‘மடிசார் மாமிகளைக் கொச்சைப்படுத்துகிறது’ என்று குற்றம் சாட்டப் பட்டதுண்டு.
கமல்ஹாசனின் ஜெயலலிதா மீதான கோபம் அவரது விஸ்வரூபம் தடையும், அதன் பின்னால் இருந்த ஜெயலலிதாவும்தான் என்பது தெரியாமல் இல்லை. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து சசிகலாவின் அரசியல் பிரவேசம் எடப்பாடி எப்படியோ முதல்வரானது, அதிமுக அரசின் ஊழல் ஆகியவை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார் கமல்.
ஊழல் என்பது இன்றைய சமூகத்தின் மிகமுக்கியமான பிரச்சினை, அதைவிடவும், மிக முக்கியமான பிரச்சினை மதவாதத்தையும், சாதிய வாதத்தையும் அழித்திட தீவிரமாக இயங்க வேண்டும் என்பதைக் கமல் வலியுறுத்துகிறார்.