Namvazhvu
Pax Christi USA மக்களை காக்கும் உறுதி மொழி - பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு
Saturday, 23 May 2020 06:43 am
Namvazhvu

Namvazhvu

அமெரிக்க ஐக்கிய நாட்டில், பல்வேறு மாநிலங்களும், பெரு நகரங்களும் கோவிட் 19 உருவாக்கிய முழு அடைப்பிலிருந்து வெளியேற நினைக்கும் இவ்வேளையில், தனிப்பட்ட மனிதர்கள், மற்றவர்களை காக்கும் ஒரு உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுமாறு, பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi USA) என்ற அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசியல் நோக்கங்களுடன் முழு அடைப்பை நீக்கும் முயற்சிகள் துவங்கியுள்ள வேளையில், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை காப்பது குடிமக்களின் கடமை என்பதை பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அறிவியல் ஆய்வாளர்களும் நலவாழ்வுப் பணியாளர்களும் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றவும், அதே வண்ணம், இந்த தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்பட்டோரின் குரல்களைக் கேட்கவும் கத்தோலிக்க மக்கள் உறுதி மொழி எடுக்குமாறு, பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

பொருளாதாரத்தை முன்னிறுத்தி மக்களின் பாதுகாப்பை புறந்தள்ளும் அரசியல் முயற்சிகளுக்கு எதிராக மக்களின் முயற்சிகள் சக மனிதரைக் காப்பதாக அமையவேண்டும் என்று பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த உறுதி மொழி முயற்சியில், ஆயர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் பலரும் இணைந்துள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.