No icon

3. 90 ஆம் ஆண்டு நிறைவைக் காணும் இறைஇரக்கத்தின் காட்சி-07.03.2021

போலந்தின் புளோக் நகரில், அருள்சகோதரி புனிதர் பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்களுக்கு, இறைவன் காட்சியளித்ததன் 90 ஆம் ஆண்டு நிறைவு, இந்த மாதம் பிப்ரவரி 22 ஆம் தேதிநிறைவுற்றதை யொட்டி, அம்மறைமாவட்ட ஆயருக்கும், விசுவாசிகளுக்கும் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.

1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி புனிதர் பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்களுக்கு இறைவன் காட்சியளித்ததன் 90 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, புளோக் (Płock) மறைமாவட்ட ஆயர் பியோட்டர் லிபேரா அவர்க ளுக்கும், விசுவாசிகளுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி யில்இந்த சிறப்புக் கொண்டாட்டங்களில் தானும் இறைவேண்டலுடன் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இயேசு இப்புனிதருக்கு எவ்வாறு காட்சியளித்தாரோ, அதேபோன்று ஒரு படத்தை வரைந்து அதற்குஇயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்என எழுதுமாறு இயேசு, தன்   காட்சியின்போது கேட்டுக்கொண்டதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ’என் இரக்கத்தின் ஆதாரத்தை மனிதகுலம் கண்டுகொள்ளும்வரையில் அதனால் அமைதியைக்  கண்டுகொள்ள இயலாதுஎன இயேசு, புனிதர் பவுஸ்தீனா கோவால்ஸ்கா அவர்களிடம் கூறிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருணையின் ஆதாரத்தை நாடிச்சென்று, கருணையெனும் கொடைக்காக இயேசுவை நோக்கி வேண்டுவதோடு, அவர் நம்மை அரவணைக்கவும் நம்மில் ஊடுருவவும் அனுமதிப்போம் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளடையாளங்களில், இயேசுவின் அன்பையும், இரக்கத் தையும் கண்டுகொண்டு, அதன் வழியாக பொறுமை, மன்னிப்பு, மற்றும் அன்பின் மனிதர்களாக நாமும் மாறுவோம் என மேலும் விண்ணப்பித்துள்ளார்.

கருணையின் திருத்தூதராகிய திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், இறைவனின் கருணை நிறைஅன்பை உலகம் முழுவதற்கும் எடுத்துச்சென்று அறிவிப்பதில், ஊக்க மூட்டி உழைத்தார் என்பதையும், தன் கடிதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசுவின் அன்பெனும் நெருப்பை, உலகம் முழுவதும் எடுத்துச்செல்வதோடு, நம் நடுவே இறைவன் இருப்பதன் எடுத்துக்காட்டாக செயல்படுவோம் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

 

Comment