No icon

லெபனான்: மாரனைட் கர்தினால் நார்சரல்லா பியரே மரணம்

மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் நார்சரல்லா பியரே ஸ்பையர் மே மாதம் 12 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இன்னும் 3 நாள்களில் தன் 99வது வயதை நிறைவுச் செய்ய இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அவர்களின் மரணம் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவரின்  உறவினர்களுக்கும், மாரனைட் திருஅவைக்கும், ஆறுதலை வழங்கும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
கர்தினால் நார்சரல்லா பியரே அவர்களின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட முதுபெரும் தந்தை, கர்தினால் பெஷாரா ராய் மாரனைட் திருஅவை, தற்போது, அநாதையாக்கப்பட்டுள்ளதாகவும், லெபனான் நாடு துக்க காலத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
லெபனான் அரசுத் தலைவர் மைக்கேல் அவோன் , பிரதமர் சாத் ஹாரிரி ஆகியோரும் தங்கள் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
15 ஆம் தேதியும் , கர்தினாலின் அடக்க தினமான 16ஆம் தேதியும், அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு. அந்நாட்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.  தேசிய துக்க தினங்களாக அனுசரிக்கப்பட்டன.
கர்தினால் அவர்களின் இறப்புடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 221 ஆக குறைந்துள்ளது. இதில் 120 பேர் திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதுக்குட்பட்டவர்கள்.

Comment