No icon

STATE MINORITY COMMISSION

மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் புதிய உறுப்பினர்களாக  அருள்முனைவர் M.C.ராஜன் -அருள்முனைவர்.ஜெபமாலை இருதயராஜ் சே.ச

 

கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர்  M.C. ராஜன் என்கிற அருள்பணி.கிறிஸ்து ராஜமணி, சேசுசபையைச் சேர்ந்த அருள்முனைவர்.ஜெபமாலை இருதயராஜ் சே.ச ஆகிய இருவரும் நம் தமிழகத்தின் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் உறுப்பினர்களாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ராஜன் அவர்கள் தத்துவயியலில் இளங்கலை பட்டமும், வரலாறு மற்றும் அரசியல்  விஞ்ஞானம் இவற்றில் முதுகலை பட்டமும் பெற்றவர். திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பையும், சென்னை பல்கலை கழகத்தில் சட்டத்தில் முதுகலை படிப்பையும் முடித்தவர். சர்வதேச மனிதஉரிமை சட்டத்தில் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சட்ட வல்லுநர்.
அருள்முனைவர்.ஜெபமாலை இருதயராஜ் சே.ச அவர்கள் விளிம்பு நிலைகளைப் பற்றி, குறிப்பாக அருந்ததியர்களைப் பற்றி களப்பணியுடன் ஆய்வுச் செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தன் எழுத்துக்களால் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளார்.  தற்போது சேசு சபையின் சென்னை  மிஷன் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பானப் பணியை மேற்கொண்டுள்ளார். 
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இருவரையும்  தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழான நம் வாழ்வு பாராட்டி மகிழ்கிறது. கிறிஸ்தவ சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுக்க இவர்களை வேண்டுகிறது.

Comment