No icon

Rev.Dr.S.Arputharaj

தவக்கால தவ முயற்சிகள்: திருப்பயணம்


தவக்காலம் என்றாலே கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு நினைவுக்கு வருவது பல்வேறு பக்தி முயற்சிகள், அருள்வேண்டல் குறிகள் (Sacramentals) மற்றும் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள்: திருநீறு, குருத்தோலை, நோன்பு, இறைவேண்டல், தர்மம், சிலுவைப் பாதை, தவக்காலத் தியானங்கள் இன்னும் பல. இவற்றில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத் திருஅவையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருவது தவக்காலத் திருப்பயணம். நாம் இப்போது தொடங்கியிருக்கும் இத்திருப்பயணத்திற்கும் உரோமையில் பழக்கத்தில் இருக்கும் பாரம்பரியத் திருப்பயணத்திற்கும் (சுடிஅயn ளுவயவiடியேட hரசஉhநள) தொடர்பு உண்டா என்றால் உண்டு என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

வரலாற்றில். . .

ஒரு குறிப்பிட்ட நாளன்று உரோம் நகர நம்பிக்கையாளர்கள் திருத்தந்தையோடு ஒன்று கூடி (Collect Together) வரும் குறிக்கப்பட்ட ஆலயத்தை, ஒன்றுகூடும் ஆலயம் (Ecclesia Collecta) என்று அழைத்தார்கள். “Collecta என்ற வார்த்தையானதுColligereஎன்ற இலத்தீன் வார்த்தையிலிருந்துஒன்று கூடுதல்என்பதைக் குறிக்கிறது. அங்கு கூடி மன்றாடிய பிறகு, அந்தத் திருக்குழுமமானது இன்னோர் ஆலயத்திற்குச் செல்கிறது. இந்த ஆலயம்தான் நிலைய ஆலயம் Stational Church என்று அழைக்கப்படுகிறது. Station என்ற வார்த்தைStatioஎன்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறதுஇவ்வாறு ளுவயவiடியேட hரசஉh-க்கு பவனியாகச் செல்லும்போது திருப்பயணிகள் புனிதர்களின் மன்றாட்டு மாலையைப் பாடிக்கொண்டு செல்வார்கள். அங்கு திருப்பலி நிறைவேற்ற, திருத்தந்தை மக்களுடைய விண்ணப்பங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, ஓர் ஒன்று சேர்க்கப்பட்ட மன்றாட்டாக மன்றாடுவதுCollectஎன்ற பெயரைப் பெற்றது.

வழிபாட்டுப் பவனியின் இயல்பு

உரோம் இலாத்தரன் திருத்தலத்தின் குருக்கள், அரசு உயர்நிலை அதிகாரிகள், குருக்கள், பொதுநிலையினர் என எல்லாரும் இந்தப் பவனியில் பங்கேற்றனர். இது உரோம் அல்லது மற்ற இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் புனித பூமிக்கும் திருவழிபாட்டுப் பவனிக்கும் திருப்பயணிகளை ஒன்றுசேர்க்கும் பழக்கத்தை எருசலேம் ஆலயங்களும் ஏற்பாடு செய்தனகான்ஸ்டான்டிநோபிலில், ஆயர்களோடு கான்ஸ்டன்டைன் பேரரசரும் பவனியில் பங்கெடுத்தார் என்ற வரலாறும் உண்டு. இந்த வழிபாடுகளை ஆராய்கின்றபோது வெளிப்படும் உண்மை என்னவெனில், ஏழு மலைகளாலான உரோம் நகரம் என்பதற்கு ஏற்ப, மலையில் மேல் உள்ள இந்த கடவுளின் நகரம் உலகிற்கு ஒளியாம் கிறிஸ்துவைக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தமும் கொண்டு விளங்குகிறது (மத் 5:14).

டிடுடலர் (கூவைரடநச) ஆலயங்களும் உரோமைப் பேராலயங்களும்

தொடக்க நூற்றாண்டுகளில் உரோம் நகரில் திருஅவைக்காக மக்கள் ஒன்றுகூடி இறைவேண்டல் செய்ய பேராலயங்கள் கிடையாது. கான்ஸ்டன்டைன் பேரரசர் உரோம் நகர எல்லைக்கு வெளியே இலாத்தரன் போன்ற, பேராலயங்களைக் கட்டினார். ஆனால், உரோம் நகரக் கிறிஸ்தவர்கள் திருஅவைகளில் இருந்த வீடுகளில் வழிபாடு நடத்தினார்கள். இவை tituler (tituli) ஆலயங்கள் என்று அழைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் மக்கள் வாழும் பகுதிகளில் நிறைய அமைந்திருந்தனதிருமுழுக்கு, மறைக்கல்வி, வழிபாடு, பொது நிர்வாகம், மக்கள் நலன் மற்றும் குருக்கள் வாழும் இல்லம் போன்ற காரணங்களுக்காக இவை பயன்படுத்தப் பட்டன. எல்லாப் பேராலயங்களும் தவக்கால ஞாயிறு கிழமைகளுக்கும் வவைரடநச ஆலயங்கள் தவக்கால வார நாள்களுக்கும் பயன்பட்டன. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் 25 டிடுடலர் ஆலயங்கள் இருந்தன. 25 ஆலயங்களின் பிரதிநிதிகளும், பங்குக் குருவும் திருத்தந்தையினுடைய திருப்பயணத் திருப்பலியில் பங்குகொண்டனர். திருத்தந்தை ஹிலேரியுஸ் (461) திருப்பலிக்கான பாத்திரங்களை tituler ஆலயங் களுக்குக் கொடுத்து உதவினார். திருத்தந்தையுடனான ஒன்றிப்பை வெளிப்படுத்த பங்குத் தந்தையர் கலந்துகொள்ள முடியாத திருப்பலிக்கு, திருத்தந்தை யின் அர்ச்சிக்கப்பட்ட நற்கருணையானது (fermentum) பீடப் பணியாளர்கள் மூலம் tituler ஆலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிலையப் புனிதர்களின் வணக்கம்

ஒவ்வோர் ஆலயத்தின் புனிதர்களின் வணக்கம் வெகு சிறப்பாக இருந்தது. அந்தப் புனிதர் அவர்களோடு இருந்து அவர்களுக்காகப் பரிந்துரை செய்பவராகக் கருதப்பட்டார். அப்புனிதர்களின் புண்ணியங்கள் மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தன. ஒவ்வொரு நாள் திருப்பலியும் அல்லது அந்த ஆலயத்தின் புனிதரின் வரலாறும் நம்பிக்கையாளரின் நம்பிக்கை யைத் தூண்டுவதற்கும் உறுதுணையாக இருந்தது. புனித பேதுரு சங்கிலிகளால் படைவீரன் இருவருக்கு இடையே கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். ஆண்டவரின் தூதர் அவரைத் தட்டியெழுப்ப சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன (திப 12:6-7).

மன்னன் இரண்டாம் தியோடோசியோவின் மனைவி யூதோசியா (408 - 450) எருசலேமிற்குத் திருப்பயணம் மேற்கொண்டு, அங்கு புனித பேதுரு இரண்டாம் முறையாக சிறையில் அடைக்கப்பட்ட

சங்கிலியை கண்டார்இதை திருத்தந்தை பெரிய லியோவிடம் (440-461) கொடுத்தார்இதையே திருத்தந்தை புனித பேதுருவின் 9 மாத சிறைவாசச் சங்கிலியாக ஒன்றாக்கினார். இந்தப் புதுமையின் நிறைவாக யூதோசியா புனித பேதுரு சங்கிலிகளின் திருத் தலத்தைக் (Basilica of St.Peter in Chains) கட்டி அவருக்கே ஒப்புக்கொடுத்தார் (442). தவக்கால

முதல் வாரத்தின் திங்களன்று இந்தப் பேராலயம் திருத்தந்தையால் திருப்பயணம் மேற்கொள்ளப் படுகிறது. இவ்வாறு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயண ஆலயங்கள் விவிலிய, கிறிஸ்து மற்றும் புனிதர்களின் முன்மாதிரியைக் கொண்டிருக்கிறது.

20 ஆம் நூற்றாண்டில்

இடைக் காலங்களில் இந்தத் திருப்பயணம் சற்று தளர்ந்து போனது. 1930-க்கு பிறகு திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pius XI) அவர்கள் இந்தப் பக்தி முயற்சியைத் தொடரக் கேட்டுக் கொண்டார்மீண்டும்

1959 ஆம் ஆண்டில் புனித 23 ஆம் ஜான் இதைப்புதுப்பித்து திருத்தந்தையின் பக்தி முயற்சியாக மாற்றினார். திருத்தந்தை ஆறாம் பவுல் உரோமைத்திருப்பலி நூல், 1970 திருத்திய பதிப்பில் உலகம் முழுவதும் இதைக்கொண்டு செல்லக் கேட்டுக் கொண்டார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம், 1988 இல் இத்தகைய ஆலயங்கள், திருத்தூதர்களின் கல்லறைகள், திருத்தலங்கள் மற்றும் உரோமின் முக்கியத் திருப்பயணத் திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்வதை ஊக்குவித்தார். இதையே நம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வலியுறுத்தி நம் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை, மதிப்பீடுகளை நாம் மறந்து விடாமல் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இன்றும்...

மறைமாவட்டங்களிலும், பங்குகளிலும் நாம் மேற்கொள்ளும் திருப்பயணம் இதைத்தான் வலியுறுத்த வேண்டும். நாம் மேற்கொள்ளும் இத்திருப்பயணம் வெளி ஆடம்பரத்துக்காக, சென்னையிலிருந்து (புனித சாந்தோம் பேராலயம்)

கன்னியாகுமரி வரை (புனித தேவசகாயம் திருத்தலம்), பாண்டிச்சேரியிலிருந்து (வில்லியனூர் திருத்தலம்), கோயம்புத்தூர் (புனித முதன்மை வானதூதர் மிக்கேல் பெருங்கோவில்) வரை

செல்லும் சுற்றுலாவாக இல்லாமல், அத்திருத்தலங்கள் சுட்டிக்காட்டும் விவிலிய மதிப்பீடுகள், புனிதர்களின் முன்மாதிரிகள், ஒவ்வொரு திருத்தலத்திலும் நாம் செய்யும் சிலுவைப்பாதை

நம்முடைய ஆன்மிக உணவை அதிகரிக்க வேண்டும். அதை விடுத்து, இது ஒரு வெளிப்புறச் சடங்காகவோ சுற்றுலா போன்றோ அல்லது இயேசுவின்பாடுகளை நினைவுப்படுத்தும் நாடகமாகவோ அமையாமல் இது நமது திரு அவையின் ஆன்மிகக் கருவூலம். இயேசுவின் கல்வாரிப் பயணத்தை நினைவுகூரும் இயேசு வோடு கூடிய திருப்பயணம்.

வெளிப்புறப் பயணம் அல்ல!

வெளிவேடப் பயணம் அல்ல!

மற்றவர் விரும்பும் பயணம் அல்ல!

வியாபாரப் பயணம் அல்ல!

விரும்பி சேர்க்கும் பயணம் அல்ல!

விடுதலைப் பயணம்!

புனிதப் பயணம்!

புண்ணிய பூமிப் பயணம்!

நம் புனிதப் பயணமாம்

தவக்காலத் திருப்பயணம்.

(வளரும்)

Comment