No icon

கூடங்குளம் அணு உலைகள் கடந்து வந்த பாதை!

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில்,  தலா 1000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யாவின் உதவியுடன் அமைக்கப்பட்டன. இந்த முதல் இரண்டு அணு உலைகளை நிர்மானிக்க இதுவரை 17,270 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அரசின் முறையான அறிவிப்புப்படி, முதல் அணு உலை 22 அக்டோபர் 2013 அன்றும், இரண்டாம் உலை 10 ஜூலை 2016 அன்றும் மின்சார உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப் பட்டது. இது எத்தனை முறை செயலிழந்துள்ளது என்று கேட்டால் நீங்களே வாய் விட்டுச் சிரிப்பீர்கள்; அணு விஞ்ஞானிகளைக்  கேட்டால், கண்ணீர் விட்டுச் சிரிப்பார்கள். ஆரம்பிக்கப்பட்ட 2013-ல் இருந்து 2016-க்குள் அதுவாகவே 20 முறைக்கு மேல் தானாகவே செயல் இழந்துள்ளது (ட்ரிப் ஆகி உள்ளது).
சில சமூக ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெற்றுள்ள தகவல் களின்படி 2013-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் முதலாவது அணு உலை இதுவரை 47 முறையும், 2016 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இரண்டா
வது அணு உலை இதுவரை 19 முறையும் பழுதடைந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு ஓரிரு முறை அணு உலை நிறுத்தப்படுவது வழக்க மானது. ஆனால், இந்த அணு உலைகள் குறுகிய காலத்திலேயே பல முறைகள் நிறுத்தப் பட்டுள்ளன. 
தற்போது, கூடங்குளத்தில், மூன்று மற்றும் நான்காவது அலகுகளுக்கான தொடக்க வேலைகளை ஆரம்பித்து உள்ளார்கள். இதன் திட்ட மதிப்பீடு மட்டுமே 39, 747 கோடிகள் ஆகும். முதல் இரண்டு ஆலைகளைப் போல அதே திறன் உள்ள ஆலையை நிறுவ அதைவிட இரண்டு மடங்குக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது திட்ட மதிப்பீடு மட்டுமே. திட்டம் முடியும்போது கணக்கிட்டால், இந்தத் தொகையின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும்.

அமெரிக்காவில் உள்ள அணுஉலை  நிலையத்தில் அவலம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நகரம், சான் க்ளெமென்ட். அந்நகரத்தின் அற்புதமான கடற்கரையில் செயல்படாத சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம்  (ளுயn டீnடிகசந சூரஉடநயச ழுநநேசயவiபே ளுவயவiடிn ) அமைந்துள்ளது. மொத்தமாக மூன்று உலைகளைக் கொண்ட அம்மின் நிலையம் 2013-ம் ஆண்டு கைவிடப்பட்டது. ஆனால், இவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளை இது
வரை என்ன செய்வதென்றே தெரியாமல் வைத்திருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டு களுக்கும் மேலாக இன்னும் அணுக்கழிவுகள் உறங்கிக்கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் கைவிடப்பட்டுள்ள அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அணு உலைக்கழிவுகள் அங்கு வேலை செய்யும் பணியாளர்களைப் பாதிக்க ஆரம்பித்துள்ளன. இப்போது இங்கே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், இது அமைந்துள்ள இடம். பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது இது. இதன் 75 மைல் தொலைவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரமும், சான்டியாகோ நகரமும் அமைந்துள்ளன. அணுஉலைப் பகுதியில் 85 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அம்மக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவுக்கும் மையமாகத்தான் சான் ஓனோஃபெர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. உலகின் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அமெரிக்காவாலேயே புலி வால் பிடித்த கதையாக விழி பிதுங்கி நிற்கிறது. 

Comment