No icon

ஓர் அறிமுகம்

ஊஞ்சல் மாதா ஆன்மிக அனுபவ மையம்

ECR என்று சொல்லப்படுகின்ற கிழக்கு கடற்கரை சாலை ஓரம் சென்னையிலிருந்து 100 கி.மீ. தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து வடக்கே 40 கி.மீ. தூரத்திலும் தேன்பாக்கம் என்று கிராமத்தில் செங்கல்பட்டு மறை மாவட்டத்தில் அமைந்து இருப்பதுதான் ஊஞ்சல் மாதா ஆன்மிக அனுபவ மையம்.
நிறுவனர்
இந்த மையத்தின் நிறுவனர் அருள்பணி ஜான் வல்தாரிஸ். இவர் கோட்டாறு மறைமாவட்டத்தில் குருவாகி சில வருடங்கள் சேலம் மறை மாவட்டத்திலும் சில வருடங்கள் சென்னை மறை மாவட்டத்திலும் இறுதியாக 2.11.2016 அவர் இறக்கும் வரை தேன்பாக்கத்தில் உள்ள இம்மையத்தை உருவாக்கியும் வந்தார்.
நம்பிக்கையை ஆள்மயமாக்கல் வழி பாட்டை அகமயபடுத்தல்
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆண்டுக்கு இரண்டு முறையென பொதுநிலை
யினருக்கு என 60-க்கு மேற்பட்ட பயிற்சிப் பாசறைகளை நடத்தி நம்பிக்கையை ஆள் மயமாக்கவும் (Personalisation of Faith) வழி பாட்டை அகமயமாக்கவும் (Interiorization of Ritual)
செயல்பட்டார். அதை 250-க்கு அதிகமான
நூல்களை எழுதியும் 1000க்கு அதிகமான
பாடல்களை எழுதியும் நடைமுறைப்படுத்தினார்.
அதன் விளைவாக இன்று 100-க்கு
அதிகமான பொதுநிலையினர் ஏறக்குறைய
தமிழகத்தின் அனைத்து மறைமாவட்டத்தி லிருந்தும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கருத்தியல் ரீதியாகவும் ஆன்மிகத்திலும் வளர்த்துள்ளனர்.
உயிர்த்த இயேசு சமூகம்
பொதுநிலையினரைப் பயிற்றுவித்ததோடு அருள் தந்தையர்களையும், அருள் சகோதரிகளையும் பயிற்றுவித்து இருக்கிறார். ஒரு சில பொதுநிலையினரோடு சேர்த்து உயிர்த்த இயேசு சமூகம் என தற்போது ஒரு பக்த அமைப்பாக செயல்படுகின்றனர். விரைவில் உரிய பொது தகுதியைப் பெறுவர்.
இயேசு கற்றுத் தந்த செப யோகா ஆன்மிகம்
இயேசு கற்றுத்தந்த செபத்தில் ஒரு யோகாமுறை இருப்பதை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அருள் பணி. ஜான் வல்தாரிஸ். மத்தேயு எழுதிய நற்செய்தியில் உள்ள இயேசு கற்றுத்தந்த செபத்தில் ஏழு விண்ணப்பங்கள் இருப்பதையும் அந்த ஏழு விண்ணப்பங்களையும் இயேசு தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து நிறைவு செய்தார் என்றும் அந்த ஏழு விண்ணப்பங்களும் இஸ்ரயேல் மக்களின் மீட்பின் வரலாற்றில் கடந்து வந்த ஏழு படிகள் என்றும் அதை விளக்கியுள்ளார். இது உணர்வு நிலை (ஊடிளேஉiடிரளநேளள)-ல் உயர்ந்து எழும்பல். ஒவ்வொரு மனிதனிலும் இது நிகழ வேண்டும். இறைவார்த்தை ஒவ்வொருவரிலும் ஆள்மயமாக வேண்டும். உடல் எடுத்த வார்த்தை ஒவ்வொருவரிலும் உருவாக வேண்டும்.
இதன் பயிற்சித் தளமாக உயர் முழுமையாக்க இயக்கம் (Higher Integration Movement) உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
ஊஞ்சல் மாதா - வார்த்தைதளம் உயர்ந்தவர்
பல வருடங்களுக்கு முன் அருள்தந்தை ஜான் வல்தாரிஸ் அவர்களின் கனவில் மாதா காட்சி கொடுத்
தார்கள். மாதா மடியில் இருந்த குழந்தை யேசு ஒரு கையால் அருள்தந்தை அவர்களை அழைத்துள்ளார். மறுகையை உயர்த்தி "தந்தையாகிய இறை வனைப் பற்றி உனக்குச் சொல்லித் தரப்போறேன்"
என்று சொல்லியுள்ளார். அதை தியானித்து மாதாவை ஊஞ்சலில் அமர்த்தியுள் ளார். மாதா வார்தையாகிய இறைவனுக்கு உடல் கொடுத்தவர்கள். தூய
ஆவியினுடைய வல்லமை
யால் உடல் கொடுத்தவர் கள். தூய ஆவியை காற்று,
நெருப்பு, புறா ஆகியவை
அடையாளப் படுத்துகின்றன. ஊஞ்சல் காற்றை அடையாளப் படுத்துகின்றது. காற்று தூய ஆவியை அடையாளப்படுத்து கின்றது. தூய ஆவியினால் நாம் இயக்கப்படும்போது மாதாவைப்போல் நாம் ஒவ்வொருவரும் வார்த்தைத் தளத்திற்கு உயர்த்தப் படுவோம். உயர்ந்து எழும்ப வேண்டும்.
குணப்படுத்தும் பணி
எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றலை இறைவன் நமக்கு வழங்கியுள்ளார். நாகரிக மனிதரின் நாகரிக நோய்கள் என்ற கேன்சர், இதயநோய், HIV, வாதம் போன்றவற்றைச் சிறப்பாக அணுகுகின்றோம். ஆள்கொல்லி நோய்கள் எனக் கூறப்படும் கேன்சர் போன்ற நோய்களை ஆளுமையின் முழுமையில் அணுகுகின்றோம். இதுவரை 30-க்கு மேற்பட்டவர்கள் குணப்படுத்தப் பட்டுள்ளனர்.
வெவ்வேறு சிக்கல்களுக்குக் குறிப்பாக மகப் பேறின்மைக்கு ஆலோசனை (Counselling) வழங்கப்
படுகின்றது. வியாழக்கிழமை தோறும் பாத அழுத்த (Reflexology) சிகிச்சை வழங்கப்படுகின்றது.
ஆழ்நிலை தியானம்
நம்பிக்கையின் மொழி குறியீடுகள். குறியீடு களை வரவைப்பதும் அதனுடைய நேர்மறை ஆற்றலை வளர்க்கவும் எதிர்மறை ஆற்றலை எதிர் கொள்ளவும் பயிற்சி வழங்கப்படுகின்றது.
பொதுநிலையினர், அருள்சகோதரிகள், அருள்பணியாளர்கள் என தேவைக்கு ஏற்ப ஒரு நாள், இரண்டு நாள்கள், மூன்று நாள்கள், ஐந்து நாள்கள் என தியானம் நடத்தப்படுகின்றது. கவுன்சிலிங் வழங்கப்படுகின்றது. முன் அனுமதி பெற வேண்டும்.
வழக்கமான நிகழ்வுகள்
1. மாதத்தின் முதல் சனி, ஞாயிறு - அனைவருக்கும் பொதுவான தியானம்.
2. மூன்றாவது சனி, ஞாயிறு - கேன்சர் நோயாளி களுக்கான பணி.
3. வியாழக்கிழமை - பாத அழுத்த சிகிச்சை (Reflexology).

Comment