No icon

5. ஏனோஸ் (இனிய நாம செபம்)

செபம்

1932 ஆம் ஆண்டு அலாஸ்கா மீது பறந்து கொண் டிருந்த ஒரு விமானம் மூடு பனியில் சிக்கி, தரை காண இயலாது தவித்தது. திசை காட் டும் கருவியும் தகராறு செய்தது. எரிபொருளும் தீர்ந்து கொண்டே வந்தது.
விமானி ராபர்ட்டின்
உள்ளத்தில் நம்பிக்கை மங்க
ஆரம்பித்தது. விமான நிலையத் தோடு தொடர்பு கொண்டு, தன் இக்கட்டான நிலையை விளக்கினார்.
பேசிக் கொண்டே இரும். ரேடியோ கற்றையினால் நாங்கள் உமக்குத் திசைக் காட்டுவோம், பேசுவதை நிறுத்தி விட வேண் டாம் என்றது விமான நிலைய தொடர்பு குரல்.
விமானி, ’விண்ணகத்தி லிருக்கிற எங்கள் தந்தையே’ என்ற மன்றாட்டை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருந்தார். கடவுளின் பெயரையே உச் சரித்துக் கொண்டிருந்த அவரது மன்றாட்டே, விண்ணக உதவியை கொண்டு வந்தது.
திடீரென மேகத்தில் ஒரு பிளவு, பிளவின் வழியே விமான நிலைய விளக்குகளை விமானி கண்டார். தன் மன்றாட்டிற்கு பதில் கிடைத்தது என மகிழ்ந்தார்.
துன்ப சோதனை வேளை
களில் ‘இயேசுவே’ என்று உச் சரியுங்கள் என்பது ஆவிக்குரிய ஆலோசனை. நம் மீட்பர் இயேசுவின் பெயரைச் சொல்லி அழைப்பது, எத்துணை மகிமை
யான பாக்கியம்! துன்பமெல் லாம் இன்பமாகுமே! சோதனை யெல்லாம் சாதனையா குமே!
யாராவது திட்டும்பொழுது
‘இயேசப்பா’ என்று உச்சரிக்க லாம். இயேசப்பா என்று நம் தெய்வத்தை அழைத்தது போல வும் இருக்கும். ஏசப்பா என்று, நம்மை ஏசுபவரைப் பார்த்து சொல்வது போலவும் இருக்கும். இது சூப்பர் ஐடியாதானே!
ஏனோஸ், ஆதாமின் பேரன்.
ஆதாம், கடவுளை அப்பா என்றே அழைத்திருப்பார் என்று
தியானித்தோம். அப்பா என்று அழைக்கும் உரிமையை இழந்த
பிறகு, பின் வந்த சந்ததியார், தங்கள் இறையனுபவத்திற் கேற்ப, கடவுளுக்குப் பல்வேறு பெயர்களையிட்டு  அழைத்து மன்றாடினர், மகிழ்ந்தனர். அந்த
விதத்தில், கடவுளின் திருப் பெயரைச் சொல்லி மன்றாடிய முதல் மனிதன் ஏனோஸ். என்ன பெயர் சொல்லி இறைவனை அழைத்தார் என்று மறைநூலில் எழுதப்படவில்லை.
இயேசுவே என்று கூப்
பிடும் பொழுது, நாம் இயேசு விடம் போக வேண்டுமா? அல்லது இயேசு நம்மிடம் வருவாரா?
அவர் பெரியவரல்லவா, ஆகவே, நாம்தான் அவரிடம் செல்ல வேண்டும் என்பது ஒரு பட்டதாரியின் பதில்.  
அவரே நம்மிடம் ஓடி வருவார் என்பது படிக்காத ஒரு சகோதரனின் பதில்.
இரண்டாம் பதிலுக்கே பரிசு.
“இரண்டு அல்லது மூன்று
பேர் என் பெயரின் பொருட்டு
எங்கே ஒன்று கூடியிருக்கின்றார் களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதி
யாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 18:20) என்றார் நம் இயேசு.
இருப்பேன் என்று சொல்லியிருப் பாரானால், நாம் செபம் துவங்கி சில காலம் கழித்து வருவார் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதாகி விடும். ஆனால் இருக்கிறேன் என்றார். அதாவது அவரது பெயரை உச்சரிக்கும் பொழுதே!
நம் ஆண்டவர் சொன்ன மதுரமான வாக்கு “நான், என் பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்” (விப 20:24).
நம்மைத் தேடி வந்து, நம் நடுவே இருந்து, நம்மை ஆசிர்வதிக்கும் தெய்வத்தை நாம் பெற்றி ருப்பது, எத்துணை பெரிய பாக்கியம்!
நம் தெய்வத்தின் பெயரை அழைத்திருப் போமானால், இதோ எத்தனையோ ஆசீர்வாதங்கள்.
1.    உன்னைக் காப்பேன்.
2.    மன்றாட்டுக்குப் பதிலளிப்பேன்
3.    துன்பத்தில் உன்னோடிருப்பேன்
4.    உன்னைத் தப்புவித்து உன்னைப் பெருமைப் படுத்துவேன்.
5.    நீடிய ஆயுள் தருவேன்.
6.    உனக்கு நிறைவளிப்பேன்.
7.    என் மீட்பை உனக்கு வெளிப்படுத்துவேன் (திபா 91:14-16).
‘இயேசு’ என்ற பெயரே, எல்லாப் பெயருக்கும் மேலான பெயர்; விண்ணவர், மண்ணவர், கீழுல கோர் அனைவரும் ஆராதிக்கும் பெயர் (பிலி 2:9-11).
உலகில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயருண்டு. உதாரணமாக தலைவலி, வயிற்று வலி என்பனவும் பெயர்களே. ஆனால் இவைகளை விட மேலான பெயர் இயேசு. ஆகவே எந்த நோயோ, துன்பமோ, சோதனையோ, அவமானமோ எதுவானாலும், அவைகளையெல்லாம் கீழ்ப்படுத்தவல்ல, நம் ஆண்டவரின் பெயரை உச்சரிப்போம். வெற்றி நமதே.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பது அவமதிப்பு. ஆனால் நம் தெய்வத்தை இயேசுவே என்று அழைக்க சிறப்பு உரிமை தந்துள்ளார். ஆயினும், அமைதியின் மன்னராகிய இயேசுவே, சுகமளிப்பவரான இயேசுவே என்று அவரது குண நலன்களை இணைத்துச் சொல்வது மிகச் சிறப்பு.
எல்லாம் பார்த்துக் கொள்ளும் இயேசுவே, அமைதி அருள்பவரான இயேசுவே, சுகமளிப்பவரான இயேசுவே, என் வெற்றிக் கொடியானவரான இயேசுவே, என் மேய்ப்பரான இயேசுவே, நீதியா யிருக்கிற இயேசுவே, தூய்மையாக்கும் இயேசுவே, எல்லா வல்லமையும் உள்ளவரான இயேசுவே என்று அழைக்கலாம். இயேசுவே என்று கூப்பிட்டும், அவர் நம்மிடம் வராமல், அவர் பக்கம் நம்மைக் கூப்பிடுவாரானால் அர்த்தம் என்ன?
தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும் என்று பார்வையற்ற பர்த்திமேயு கூவியழைத்தார். கடந்து சென்ற இயேசு, அவரை அழைத்து வாருங்கள் என்றார். பார்வையற்றவர் தன்னிடம் இருந்த பழைய போர்வையைத் தூக்கி எரிந்து விட்டு இயேசுவிடம் வந்தார். இயேசு அவர ருகே வந்திருந்தால் பழைய போர்வையை பிடித்து கொண்டே இருப்பார்.
இயேசுவே என்று அழைத்தும் பதில் இல்லையோ? உள்ளத்தில் தேவ பிரசன்னம் இல்லையோ? சோர்ந்து போக வேண்டாம்.
நம் தெய்வம் இயேசுவின் பெயரை அறிந்திருப்பது என்றால், நம் இயேசுவுக்கு பிரிய மில்லாத பழைய பாவங்களை உதறி எறிந்துவிட்டு, அவர் பாதம் பற்றுவதாகும்.
எங்கள் இருளான வாழ்வை ஒளிமயமாக்கும் இயேசுவே, நன்றி. ஆமென்.

Comment