No icon

6. லோத் (கூடாத ஐக்கியம்)

செபம்

மேய்ந்து கொண்டிருந்த மிருகம் ஒன்று, சேற்றில் அகப்பட்டுக் கொண்டதாகக் கற்பனை செய்வோம். அது தன் ஒரு காலை எடுக்க முயலும் போது, மறுகால் களிமண்ணில் புதைந்து விடுகிறது. இந்த முயற்சி தொடருமானால், மிருகம் உயிர் பிழைக்கவே முடியாது. கூடாத ஐக்கியத்தில் விழுந்துவிட்ட மனிதனின் கதியும் இதுதானே! சேற்றை விட்டு வெளியேற முடியாதவனாக அழிந்து போகிறான்!
மன்றாட்டு என்பது நம் வாழ்வைப் பாதிப்பதாகும். உதட்டில் இருந்து அல்ல. உள்ளத்தில் இருந்து எழுவதே மன்றாட்டு என்று நம் ஆண்டவர் உரைத்துள்ளார். தேவ ஆவியானவர் உணர்த்துகிற காரியங்களைச் செயல் படுத்திய பின் உறவாடுவதே மன்றாட்டாகும். நபரோ, இடமோ விலக்க  வேண்டுமென உணர்த்தப்பட்டும் பழைய கதையே தொடருமானால், திரை சோகமாகவே மூடிக்கொள்ளும்.
லோத், நேர்மையாளர் என்று மறைநூல் சொல்கிறது (2பேது 2:7, 8). ஆனால் நேர்மையாளருக்குரிய பரிசை இழந்து போனார். 
”காமவெறியில் உழன்ற சோதோம், கொமோரா நகர் தீய மக்களின் நடத்தையைக் கண்டு, நேர்மையாளராகிய லோத் மனவேதனை கொண்டார். தீயனவாகவே இருந்த அவர்களது பேச்சுகளும், நிகழ்ச்சிகளும், நடத்தைகளும் அவருடைய நேர்மையான மனத்தை நாள்தோறும் வாட்டி வதைத்தன” (காண். 2பேது 2:7,8). ஆக, லோத் தன் அகநிலையில் பாவங்களை வெறுத்தார். ஆனால் புற நிலையில் பாவங்களில் பழகிப்போன மக்களோடு நெருங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்.
செழிப்பான பூமியே அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது. செல்வச் செழிப்பே சிங்காரமாகத் தெரிந்தது. ஆகவே பாவிகளோடு வாழ்ந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு வெற்றி கண்டது. ஆபிரகாம் போன்ற ஆவிக்குரிய சிந்தை உள்ளவர்களோடு தன் உறவைத் தக்க வைத்துக் கொள்ள சிரமம் எடுக்கவில்லை. விக்கிரகங்களுக்குள்  மூழ்கிக் கிடந்தும் செல்வச் செழிப்புள்ள ஊரை விட்டு பரதேசியாகப் புறப்பட்ட ஆபிரகாமோடு தன்னை இணைத்துக் கொண்ட லோத் (தொ நூ 12:4) இப்பொழுது சோதோமைக் கண்டதும், செல்வச் செழிப்பு என்ற விக்கிரகத்துக்குள் மயங்கிப் போனார். தேவ ஆவியானவரின் மெல்லிய குரலை எதிர்த்துச் சென்றார். 
தன் பிரச்சினைகளின் தீர்வுக்காக நகரத் தலைவர்களை நாடிச் சென்றபொழுது, பொருள் வாங்கக் கடைகளுக்குச் சென்ற
பொழுது, தன் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றபொழுது, தினந்தோறும் அழுது புலம்பி யிருப்பார்.  தேவ ஆவியானவர் தனக்குள்ளிருந்து ஏங்கி ஏங்கிப்
புலம்புவதை உணர்ந்தார். ஆயினும் அவ்விடத்தை விட்டுத்
தன் குடும்பத்தை பிரித்துக் கொள்ள முயற்சிக்கவே இல்லை.
எதிரிகளால் பிடிபட்டு, ஆபிரகா
மால் தப்புவிக்கப்பட்ட வேளையி
லாவது தீர்மானம் எடுத்திருக் கலாம். இல்லையே!
சோதோம், கொமோரா நகர்கள் அழியப் போகின்றன. நீயும் உன் மனைவி மக்களும் புகலிடமாக மலைக்குச் செல்லுங்
கள் என்ற போதுங்கூட பாவிகள்
நிறைந்த செகோர் என்ற ஊரையே லோத் தெரிந்து கொண்டார். அங்கும் இடர்கள், இடறல்கள் மிகுதி கண்டு, பிறகு தான் மலைக்குச் சென்றார். அது
தாமதமான மனந்திரும்புதல் (தொநூ 19:20, 21, 30).
உலக நாட்டம் எவ்வள
வாய் அவரை ஆக்கிரமித்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆகவே லோத்தின் முடிவு பரிதாபமாகவே இருந்தது. உலகச் சிந்தைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களோடு கொள்ளும் ஆழ்ந்த பிணைப்பு, அவர்களது வழிகளில் நம்மையும் நடக்க வைக்கும் ஆற்றல் பெற்றது. ஆகவே அவர்களோடு உள்ள உறவுவில், நட்பில் மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும் அவசியமாகும். 
நம்பிக்கை கொண்டிராதவரோடு உங்களைப் பிணைத்துக் கொள்ள வேண்டாம். இறைவனுக்கு ஏற்புடைய நெறிக்கு, நெறிகேட்டோடு என்ன உறவு? ஒளிக்கு இருளோடு என்ன பங்கு? கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் என்ன உடன்பாடு? நம்பிக்கை கொண்டோருக்கு, நம்பிக்கை கொண்டிராதவரோடு என்ன தொடர்பு? கடவுளின் கோவிலுக்கும் சிலை வழிபாட்டுக் கோவிலுக்கும் என்ன இணக்கம்? வாழும் கடவுளின் கோவில் நாமே (2 கொரி 6:14-16).
யூதாஸ் நல்லவனாக இருந்தவன், நல்லவ னாகவே வாழ விரும்பியவன், அழிந்துபோகக் காரணம் என்ன? 
தன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இயேசு இல்லாதபொழுது, யூதாஸ் இயேசுவிடமே மனம் திறந்து பேசியிருக்க வேண்டும். அவனோ தனக்குள் முறுமுறுத்துக் கொண்டிருந்தான். இயேசுவிடம் பகிர்ந்து கொள்ள முடியாதுபோயினும், தன் சக திருத்தூதர்களிடமாவது பகிர்ந்திருக்க வேண்டும். அவனோ இயேசுவைப் பகைத்த பரிசேயர்களுடன் நட்பை வைத்துக் கொண்டான். கூடாத ஐக்கியம் அவனுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
நாம் வாழும் சூழ்நிலையில் அனைவருடனும் பழகாமல் வாழ முடியாது. பிறரின் உதவி தேவைப் படுகிறது. ஆயினும் நாம் நம் வலுவின்மைகளை அறிந்திருக்கிறபடியினால், பழகும் விதத்தில் எல்லைக்கோடு வைத்துக் கொள்ள வேண்டும். 
தீட்டுப்படாதவாறு தங்களைக் காத்துக் கொண்ட தானியேலையும் அவருடைய நண்பர் களையும் நினைவில் கொள்வோம். அவர்களது முகம் மலரச் செய்தவர், அவர்களது மன்றாட்டில் வெற்றிபெறச் செய்தவர், நம் இறைவன், நம்மையும் மகிமைப் படுத்துவார்.
தீயோரை விலக்கிவிடுவோம் (திபா 1:1).
நல்லாருடன் இணைந்திடுவோம் (திபா 1:2).
மன்றாட்டில் வெற்றி காண்போம் (திபா 1:3).

Comment