அருட்சகோதரி. தேவாசீர் மேரி மாநிலத் தலைமையன்னை. கடலூர் மறைமாநிலம்
சின்னசேலம் சிறுமலர் பள்ளி மீதான தாக்குதல்
- Author REV.SR.DEVAASEER FIHM --
- Saturday, 06 Apr, 2019
சின்னசேலம் சிறுமலர் பள்ளி மீதான தாக்குதல்
சிறுபான்மையினருக்கு நெருக்கடி
அருட்சகோதரி. தேவாசீர் மேரி,
மாநிலத் தலைமையன்னை.
கடலூர் மறைமாநிலம்
புதுவை தூய இதய மரியன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகளால் கடந்த 74 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகள் தரமான கல்வியைப் பெற நடத்தப்படுகிற ஒப்பற்ற பள்ளிதான் சின்னசேலம் சிறுமலர் மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஏறக்குறைய 2150 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதன் நிர்வாகத்திற்குட்பட்ட விடுதியில் கிராமப்புற, ஏழை மாணவிகள் 117 பேர் தங்கி, இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 74 ஆண்டுகளில் ஏறக்குறைய 45000 மாணவ மாணவியர்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டியுள்ள இப்பள்ளி இக்கல்வி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது. கல்வி வியபாரமாகிவிட்ட இச்சூழலில் இப்பள்ளியின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
இத்தகைய சிறப்புமிக்க பள்ளியில் மார்ச் 25 ஆம் தேதியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மிகுந்த வேதனையும், கவலையும் தரக்கூடியவையாக உள்ளன.
நடந்தது என்ன?
மார்ச் 25 ஆம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கணிதத் தேர்வு நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 272 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்குப் பிறகு உள்விடுதி மாணவிகள் விடுதிக்கு திரும்பினர். கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் ஒவ்வொருவரும் தத்தம் சிரமத்தை வருத்தத்துடன் கீழ்தளத்தில் பகிர்ந்து கொண்டனர். பின்னர் இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு மதிய உணவிற்கு உணவகம் சென்றனர். விடுதி காப்பாளர் செல்வி.ஈஸ்வரி இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் மாணவி கீர்த்தனாவின் பெற்றோர் விடுதி காப்பாளரைச் சந்திக்க வந்ததமையால், அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். மதியம் 1.45 மணியளவில் மாணவிகள் சத்தியா கீர்த்தனா ஆகிய இருவரும் அடுத்தத் தேர்வான அறிவியல் தேர்வுக்கு உரிய புத்தகங்களை எடுக்க மேல்தளத்திற்குச் சென்றனர். இருவரும் தங்கள் சக மாணவி பூங்குழலி தூக்கில் தொங்குவதைக் கண்டு பயந்து நடுங்கி ஓடி வந்து விடுதி காப்பாளர் செல்வி.ஈஸ்வரியிடம் இதனை விளக்கினர். அவரும் முதல் மாடிக்குச் சென்று பூங்குழலியைக் கண்டு அதிர்ச்சியடைந்து, விடுதிப் பொறுப்பாளர் அருட்சகோதரி சகாயம் அவர்களுக்கு செல்போன் வழியாக தகவல் தெரிவித்தார். அருள்சகோதரி சகாயம் தேர்வு கண்காணிப்பாளராக தொட்டியத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று விட்டு இல்லம் திரும்பி கொண்டிருந்தார். கையறு நிலையில் இத்துயரச் செய்தியானது பள்ளித் தலைமையாசிரியை அருள்சகோதரி அமலோற்பவம் அவர்களுக்கும், இல்ல தலைமைச் சகோதரிக்கும் தெரிவிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியை முதல் மாடிக்குச் சென்று பூங்குழலியைப் பார்த்துவிட்டு, உடனடியாக சின்ன சேலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இறந்த மாணவி பூங்குழலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அவர்களின் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள, எதிர்பாராதவிதமாக அவர்கள் யாருமே செல்போனை எடுக்கவில்லை. இதற்கிடையில் என்ன நடந்தது என்பதை சகமாணவிகளிடம் விசாரித்த போது, ‘நான் கணித தேர்வை நன்றாக செய்யவில்லை, குயடை ஆகி விடுவேனோ என்று பயமாக உள்ளது, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் எனது அக்காவிற்கு திருமணம் நடைபெற உள்ளது, ஒருவேளை நான் தேர்வில் குயடை ஆகிவிட்டால், எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பெரிய அவமானமாகிவிடும் அப்பா, அம்மா என்னை கொன்றே போட்டு விடுவார்கள்” என்று பூங்குழலி வருத்தப்பட்டதாகச் சொன்னார்கள். இதற்கிடையில் சின்னசேலம், காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும், அவரைத் தொடர்ந்து சக காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். தற்கொலை செய்துகொண்ட பூங்குழலியின் சக தோழிகளை அழைத்து விசாரணை செய்தனர். சக மாணவிகள், பூங்குழலி தங்களிடம் கூறியதை காவல்துறை ஆய்வாளரிடமும் கூறினார்கள்.
காவல் உதவி ஆய்வாளர், பூங்குழலியின் பெற்றோருக்கு தெரிவித்தீர்களா? என கேட்க, அருட்சகோதரி அமலோற்பவம் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்று கூறியதால், அவரே அம்மாணவியின் பெற்றோரை தம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போதும் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. எனவே சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளர், அம்மாணவியின் பெற்றோர் வசிக்கும் பகுதியில் உள்ள ரிஷிவந்தியம் காவல்நிலைய ஆய்வாளரிடம் நிலைமையை விளக்கி, தகவல் தெரிவிக்கும்படி சொன்னார். பெற்றோர் வர தாமதம் ஆனதால் காவல் துறையினர் தாமாக முன்வந்து, பூங்குழலியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விழுப்புரம்- முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்று மாலை 6.00 மணியளவில் இறந்த மாணவி பூங்குழலியின் தந்தை திரு. வேம்பன், அறுபதுக்கும் மேற்பட்ட நபர்களோடு வந்து, பள்ளியின் தலைமை நுழைவாயிலை நாங்கள் திறப்பதற்குள் ஏறி குதித்து, பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். நுழைவாயில் பூட்டைத் திறப்பதர்காக வந்த எம்பள்ளி உடற்கல்வி ஆசிரியை திருமதி. ஜெயமணி அவர்களையும் அருட்சகோதரி பெர்னாவையும் தாக்கி, கீழே தள்ளி, அவர்களின் செல்போன்களைப் பறித்து உடைத்தெறிந்தனர். நிலைமை கைமீறி செல்வதை அறிந்த தலைமை ஆசிரியை அருட்சகோதரி அமலோற்பவம் உடனடியாக காவல் துறைக்கு தவவல் கொடுத்தார். உடனடியாக ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் மற்றும் 10-க்கும் மேற்பட்ட காவலர்களும் விரைந்து வந்தார்கள். அவர்களிடம் பூங்குழலியின் பெற்றோரும், உறவினரும் ஏன் தங்களுக்கு உடனடியாக தெரிவிக்கவில்லை? என்றும், தாங்கள் வருவதற்குள் ஏன் இறந்த உடலை அப்புறப்படுத்தினீர்கள்? என்றும் கேட்டனர். அதற்கு காவல் துறை உதவி ஆய்வாளர், பள்ளி நிர்வாகமும் தாங்களும் பலமுறை வேம்பன் அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும் அவர் எடுக்காத நிலையில், இனியும் காலதாமதம் செய்தால் உடற்கூராய்வு அறிக்கையில் சிக்கல் நேரும் என்று கருதி, காவல்துறையாகிய நாங்களே முடிவு செய்து உடலை அப்புறப்படுத்தினோம் என்று விளக்கி, அவர்களை அரசு மருத்துவமனைக்குச் செல்லும்படி பணித்து, வெளியே அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் அன்றிரவு 11.30 மணியளவில், பள்ளிக்கு சம்பந்தமேயில்லாத சின்னசேலம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு. குணசேகரனும், அவருடன் திரு. சண்முகம், திரு. பாபு ஆகிய இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளரும், சிறுமலர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்திடம் பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்குமாறு வற்புறுத்தினர். அப்போது பள்ளி நிர்வாகம், தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும், அவர்கள் கேட்கும் பணத்தை தர இயலாது என்றும் கூறியது.
மீண்டும் மீண்டும் அவர்கள் வற்புறுத்தவே, அம்மாணவியின் பெற்றோருக்கும் அடக்கச் செலவிற்கும் கருணையின் அடிப்படையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும் வங்கி வழியாகவே கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பெற்றோர் சார்பாக வந்த திரு. சண்முகம், திரு. பாபு ஆகியோர் தங்களின் பூரண சம்மதத்தைத் தெரிவித்தனர். பிறகு அவ்விருவரும் கீழ்குப்பத்தைச் சார்ந்த திரு. வேல்முருகனிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இச்செய்தியைச் சொல்ல, உடனே கும்பலாக ஐந்து பேர் உள்ளே வந்து, ஆறு இலட்சம் இல்லாமல் இதை ஒத்துக் கொள்ள முடியாது என்று மறுத்தனர். ஆறு இலட்சம் கண்டிப்பாக நிர்வாகத்தால் கொடுக்கமுடியாது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இத்தொகையை எப்படி வாங்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்? என்று நிர்வாகத்தையும் அருள்சகோதரிகளையும் மிரட்டிவிட்டு பெரும் கூச்சலுடன் வெளியேறினர்.
அவ்விரவே, பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினரின் பாதுகாப்பு கேட்டு சின்ன சேலம் காவல் நிலையத்தை அணுகினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று ஐந்து காவலர்களை பள்ளி மற்றும் அருட்சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தனர். ஐந்து காவலர்களும் அடுத்தநாள் (மார்ச் 26) காலை எட்டுமணி வரை பாதுகாப்பு அளித்துவிட்டு, வேறு ஒரு பணி இருப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டனர்.
பூங்குழலியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக 26.03.2019 அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வந்த காரணத்தால் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர் மட்டும் தேர்வுக்கு முன்தயாரிப்பிற்காக வரவழைக்கப்பட்டனர்.
காலை சுமார் 9 மணியளவில் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் பயங்கரமான மற்றும் கூரான ஆயுதங்களுடன் பள்ளியின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு, சிலர் சுவரின் மீது ஏறி குதித்தும் உள்ளே வந்தனர். உள்ளே வந்தவர்கள் திட்டமிட்டவாறு கும்பல் கும்பலாக பிரிந்து சென்று, பள்ளி, கன்னியர் இல்லம், உள்விடுதி ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர். ஒரு கும்பல் பள்ளிப்பணியில் இருந்த தலைமை ஆசிரியை அருட்சகோதரி அமலோற்பவம் அவர்களையும், உடன் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் திருமதி. ஹேமா, திருமதி. பத்மினி, பெர்னா, ஆரோக்கியசெல்வி, பென்சி, வினோ ஆரோக்கியம் ஆகிய நான்கு அருட்சகோதரிகளையும் தேர்விற்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளையும், அலுவலக பணியாளர்களான திருமதி. உஷா, திருமதி. சித்ரா ஆகியோரையும் கொலைவெறியுடன் கருங்கல், செங்கல், கம்பு, அரிவாள், உருட்டுக் கட்டை, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக தாக்கினர். உயிருக்கு பயந்து மாணவ- மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், மாணவ மாணவிகளின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அருட்சகோதரிகளும் ஆசிரியர்களும் அவர்களிடம் கெஞ்சினர். அவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது அக்கும்பலோடு வந்த பெண்கள் சிலர், திட்டமிட்டே, அருட்சகோதரிகளை விளக்கமாற்றால் அடித்து அவமானப்படுத்தினர். சிலர் உருட்டுக்கட்டையால் அடித்து கீழேதள்ளினர். பின்னர் சிலர், வயிற்றில் ஏறி மிதித்து, காது கூசம் அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் திட்டினனர். வக்கிர மனப்பான்மையுள்ள சிலர் அருள்சகோதகளின் புடவையையும் இழுத்து மானபங்கப் படுத்தினர். துறவற வாழ்வின் அடையாளமாக அவர்கள் அணிந்திருந்த சிலுவையுடன் கூடிய கழுத்து செயினை இழுத்து அதைக்கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றனர். அருட்சகோதரிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள .........
TO READ FURTHER ..KINDLY SUBSCRIBE OUR NAM VAZHVU.. WWW.NAMVAZHVU.IN/PRODUCTS..
THIS WEEK HOT SALE ..
Comment