No icon

பொள்ளாச்சிக்கு எதிராக பொங்கிய திருச்சி

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நம் சகோதரிகளுக்கு உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகளின் மீது  நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தியும் மார்ச் 16 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, திருச்சி  சிந்தாமணி அண்ணா சிலை அருகில் பிரமாண்டமான கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உரத்த கோஷங்களோடு எழுச்சிமிகு கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன, நிகழ்வுகளை பிரிஜிட் ராஜன் தொகுத்து வழங்கினார்.
’எழுந்திடு தமிழா’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி. சகாயராஜ் அவர்கள்
நன்றி கூற போராட்டம் இனிதே நிறைவடைந்தது. தந்தை சகாயராஜ் அவர்களின் தலைமையில் தந்தை லாரன்ஸ், தந்தை பன்னீர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஏனைய அமைப்புகளான திராவிடர் கழகம், த.மு.மு.க, மனித நேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, ளுனுஞஐ, பாப்புலர் பரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றின் உறுப்பினர்களை ஒன்றுசேர்த்து அரசியல் கலப்பின்றி இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி இதே
அமைப்பினர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின்
தலைமையில் "அரசியல் பழகு" என்ற கருத்துருவில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து அரசியல்
விழிப்புணர்வு அளித்தனர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சமயம் கடந்து ஒரே சமூகமாக அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து களம் காண்பதும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் போராடுவதும் மிகவும் பாராட்டுக்குரியது.

Comment