Vatican News
8 மறைசாட்சிகள், 6 இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
- Author Fr.Gnani Raj Lazar --
- Thursday, 21 Mar, 2019
8 மறைசாட்சிகள், 6 இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, புண்ணிய நற்பண்புகளைக் கொண்ட எட்டு மறைசாட்சிகள் மற்றும் ஆறு இறைஊழியர்களின் வாழ்வு விவரங்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளையாற்றும் திருப்பீட பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், மார்ச் 19, செவ்வாய்க்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.
இஸ்பெயின் நாட்டில் 1847ம் ஆண்டு பிறந்து, 1940ம் ஆண்டில் காலமான, வணக்கத்துக்குரிய அருள்சகோதரி மரியா எமிலியா ரிக்குவல்மே அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது. இவர், திருநற்கருணை மற்றும் அமல மரியின் மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தவர்.
1950க்கும், 1970ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இறைஊழியர்களான வலேரியோ டிரையானோ வாசிலே ஆப்டேனி,ஜியாவன்னி சுசியு, டிட்டோ லிவியோ சினேசு, ஜியாவன்னி பாலன். அலேசான்ரோ ருசு. ஜியுலியோ ஹோசு ஆகிய ஏழு ஆயர்கள், உருமேனியா நாட்டில், பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள்.
ஞஐஆநு எனப்படும், பாப்பிறை மறைப்பணிகள் சபையின் இத்தாலிய அருள்பணியாளர் ஆல்பிரேடோ கிரேம்னேய்சி அவர்கள், மியான்மார் நாட்டின் டொனோக்கு என்ற கிராமத்தில், 1953ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி விசுவாசத்திற்காக மறைசாட்சியாக இறந்தார்.
திருஇதய கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய, இத்தாலிய மறைமாவட்ட அருள்பணியாளர் பிரான்சஸ்கோ மரியா டி பிரான்சியா (19 .021853- 22 .12.1913)
புனித பிரான்சிஸ் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய, இத்தாலியரான மரியா ஹுயூபர் (22 .05. 1653 - 31 .07.1705);
நம் வியாகுல அன்னைமரியின் புதல்விகள் சபையை நிறுவிய, இத்தாலியரான மரிய தெரசா காமேரா (8 .10. 1818- 24 .03.1894);
சிறிய ஏழைச் சகோதரிகள் சபையின் துணை நிறுவனரான, இத்தாலியரான மரிய தெரசா கபிரியேலி (13 .09.1837 - 6 .02.1908);
மனுஉரு எடுத்த இறைவார்த்தையின் பிரான்சிஸ் மறைப்பணியாளர் சகோதரிகள் சபையை ஆரம்பித்த இத்தாலியரான ஜியோவான்னா பிரான்சிஸ்கா டெல்லோ ஸ்பிரித்தோ சாந்தோ (14.09.1888 - 21 .12.1984) ஆகிய இறைஊழியர்களின் புண்ணிய நற்புண்புகள் குறித்த விவரங்களை திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
Comment