No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையின் டிவிட்டர் செய்திகள் 

திருத்தந்தையின் டிவிட்டர் செய்திகள் 


’இந்த தவக்காலம் வழங்கும் தகுந்த வேளையை நாம் வீணாக்காமல் இருப்போம். உண்மையான மனந்திரும்பல் நோக்கிய நம் பயணத்தில் உதவும்படி இறைவனை வேண்டுவோம்’


, ‘குறிப்பாக, வலுவிழந்தோர்மீது நாம் காட்டும் பிறரன்பு என்பது, பிறரை சந்திக்கும் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதில் நல்லதொரு வாய்ப்பு’ 
‘இறைத்தந்தையின் இதயத்தை குறித்து தியானிக்க இயேசு அழைக்கிறார், அத்தகைய கண்ணோட்டத்தின் வழியாகத்தான், நாமனைவரும் சகோதரர், சகோதரிகள் என்பதை மீண்டுமொருமுறை ஏற்றுக்கொள்ள முடியும்’  ’எனக்கு இனிய வரவேற்பளித்த மொராக்கா மக்களுக்கு என் நன்றியை வெளியிடுகிறேன். அருளும் இரக்கமும் நிறைந்த இறைவன் உங்களை பாதுகாத்து, மொராக்கா நாட்டை அசீர்வதிப்பாராக’ 


‘ஒருவரையொருவர் சந்திப்பதற்கும், நட்பின் கரங்களை நீட்டுவதற்கும் கொண்டுள்ள மனவுறுதியே, மனித குலத்தின் அமைதிக்கும் இணக்க வாழ்வுக்கும் உரிய பாதை’ 


 ‘நம் பொது இல்லமாகிய இவ்வுலகில் தங்களுக்குரிய சரியான இடத்தைக் கொண்டிருக்கவும், கனவு காணவும், வாழ்வதற்கும் உரிய உரிமையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளார்கள்’ 


’’கிறிஸ்து உயிரோடு இருக்கிறார். அவரே நம் நம்பிக்கை. வியத்தகு வழியில் இவ்வுலகிற்கு அவர் இளமையைக் கொணர்கிறார்’ 
“இறைவார்த்தை, திருப்பலி, கிறிஸ்து மற்றும் தூய ஆவியாரின் பிரசன்னம் ஆகியவற்றின் வழியே தன் ஆற்றலைப் புதுப்பித்துக்கொள்ளும் போது திருஅவை இளமையாக உள்ளது” 


“வயதில் நீங்கள் இளையோராய் இருந்து, அதே வேளையில் சக்தியற்று, குழம்பிப் போயிருந்தால், உங்களை புதுப்பிக்கும்படி இயேசுவிடம் கேளுங்கள். அவரிடம், நம்பிக்கை ஒருபோதும் தவறுவதில்லை” 

Comment