No icon

நற்செய்தியை தன் வாழ்வுச் சட்டமாக கொண்ட துறவு சபை - திருத்தந்தை பிரான்சிஸ்

உடன்பிறந்த உணர்வை ஒருவருக்கொருவர் கொண்டிருந்து, அமைதியைப் பறைசாற்றுங்
கள் என ஜூன் 17 ஆம் தேதி  தன்னைச் சந்திக்க வந்திருந்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அச் சபையின் புதிய உலகத் தலைவர் அருள்பணி  கார்லோஸ் டிராவரல்லி அவர்களுக்கு வாழ்த்துகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், கடந்த கோடைக்காலத்தில் இச்சபையினர் கூட்டிய சிறப்புப் பொதுமன்றக் கூட்டத்தில், சபை விதிமுறைகளைப் புதுப்பித்ததும் அதற்குத் திருப்பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதும் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
நற்செய்திக்கு செவிமடுப்பதிலிருந்து பிறந்ததாக தன்னை வெளிப்படுத்தி, நற்செய்தியையே தன் வாழ்வாகவும், வாழ்வுச் சட்டமாகவும் கொண்டிருக்கும் கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபை, இளந்துறவிகளுக்கு பயிற்சியளித்தல், கலாச்சாரங்களிடையே ஏற்புடைமை, பகிர்தல், பொருளாதார வெளிப் படைத்தன்மை போன்றவை குறித்து அண்மையில் விவாதித்து, மாற்றங் களைப் புகுத்தியுள்ளதையும் தம் உரையில் திருத் தந்தை சுட்டிக்காட்டினார்.
உடன்பிறந்த உணர்வு என்பது நன்றியு ணர்வுடன் வரவேற்கப்பட வேண்டும். இங்கு, எவரும் விலக்கி வைக்கப்படாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள், மற்றும் இங்கு இவ்வுணர்வுடன் இருப்பவர்கள், ஒன்றைப் பயன்படுத்தி தூக்கியெறிபவர்கள் அல்ல மாறாக ஒருவரையொருவர் கட்டியெழுப்புபவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அதிகாரத்திற்கான சோதனை மிகப்
பெரியதாக இருக்கும் இவ்வுலகில், உங்களுடைய
நோக்கமெல்லாம் பிறருக்குப் பணியாற்று வதிலேயே இருக்கவேண்டும் என்ற விண்ணப் பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அவர்களும் பணிபெறுபவர்களாக இல்லாமல் இயேசுவைப்போல், பணியாளர்களாகச் செயல்பட வேண்டும் என  அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன் சபை அங்கத்தினர்களிடம் கூறியதை நினைவுக்குக் கொணர்ந்தார். அமைதியை எடுத்துரையுங்கள் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அமைதிக்குரிய முன்நிபந்தனையாக ஒப்புரவு இருப்பதையும், மன்னிப்பும் இரக்கமும் இன்றி அமைதி பிறக்கமுடியாது என்பதையும்  சுட்டிக்காட்டினார்.
மேலும் அமைதி என்பது, பிரச்சினைகள் ஏதுமற்ற ஒரு நிலை அல்ல, மாறாக, இறை வனின் இருப்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது எனவும்  திருத்தந்தை கூறினார்.

Comment