No icon

Pope Francis and Corona

நோயுற்றோருடனும், நலப் பணியாளருடனும் தோழமை - திருத்தந்தை பிரான்சிஸ்

கொரோனா தொற்றுக்கிருமியின் பாதிப்பால் நாம் ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டு வாழும் நிலையில், திருஅவையில், ஒன்றிப்பின் மதிப்பீடு களை ஆழப்படுத்தும் வழிகளை மீண்டும் கண்டு கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ்தன் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே மார்ச் 15 அன்று வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை வேண்டல் உரையில் எடுத்துரைத்தார். அதன் இறுதியில், ஒன்றிப்பு குறித்து எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசுவைத் தலையாகக் கொண்டுள்ள திருஅவையில், நாம் அனைவரும் ஓர் உடலாக உள்ளோம், தனிமையில் இல்லை என்று எடுத்துரைத்தார்.

 திருநற்கருணை எனும் அருளடையாளத்தைப் பெறஇயலாத சூழலில், திருநற்கருணையுடன் கொள்ளும் ஆன்மிக ஒன்றிப்பின் வழியாகவும், செபத்தின் வழியாகவும் நாம் ஊட்டம் பெறுகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

நோயுற்றோருடனும், அவர்களுக்காகப் பணியாற்றுவோருடனும் தன் நெருக்கத்தை புதுப்பிப்ப தாகக் கூறியத் திருத்தந்தை, வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் மக்கள், ஏழைகள், வீடற்றோரி டையே பணியாற்றுவோர் மற்றும் சுயவிருப்பப் பணி யாளர்களுடன் தன் ஒன்றிப்பை வெளியிடுவதாகமூவேளை வேண்டல் உரையின் இறுதியில் கூறினார்.

துன்பகரமான இவ்வேளையில், எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்காகவும், நன்றி கூறுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக இறைவேண்டல் செய்யும்படி விண்ணப்பித்து, தன்மூவேளை வேண்டலை நிறைவு செய்தார்.

Comment